Wednesday, July 31, 2019

மண்ணியாறு

திருவைக்காவூர்,திருப்புறம்பயம் திருவாப்பாடி,திருப்பனந்தாள், திருபந்தணை நல்லூர்  ஆகிய ஊர்களின் வழியாக ஓடுவதும் சண்டேசுர  நாயனார் மணலால் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் வழிபாடு புரிந்து வந்ததுமான இந்த மண்ணியாறு பராந்தக சோழனால் திருத்தி அமைக்கப்பட்டு தன் சிறப்பு பெயரான குஞ்சரமல்லன் எனும் பெயரை இம்மண்ணியாற்றிற்கு வைத்துள்ளான் என வரலாற்று பேரறிஞர் சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
இரா.விக்ரமன,சிதம்பரம்.

Friday, July 26, 2019

கரிகாலக்கரை

முதல் கரிகால் சோழன் காவிரிக்கு கரையெடுத்தான். காவிரியின் நீர்ப்பெருக்கை வேறு ஆறுகள் மூலம் போக்க மண்ணி,கொள்ளிடம், கடுவாய்,வெண்ணி போன்ற ஆறுகளை வெட்டினான். ஆதித்த சோழன்,பராந்த சோழன் காலங்களில் அல்லூர்,வடகுடி, திருநெய்த்தானம், திருப்பழனம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் காவிரிக்கரையை கரிகாலக்கரை என்று குறிப்பிடுகிறது. காவிரி வடகரையை கரிகாலக் கரையென்று அப்போது மக்களால் அழைக்கப்பட்டது. இவன் பிறகு முதல் இராஜேந்திர சோழன் மகன் வீரராஜேந்திரன் கரிகாலன் என பெயர் பெற்றவன் 1068 ஆம் ஆண்டு காவிரிக்கு கரையெடுத்தான் என சதாசிவப்பண்டராத்தார் கூறுகிறார்.இவன் சகோதரன் இரண்டாம் இராஜேந்திர சோழன் இவனுக்கு கரிகால சோழன் எனும் பட்டம் வழங்கினான் என்கிறார். மேலூம் வீரராஜேந்திரன் ஸ்ரீரங்கத்திலிருந்து 10 மைல் தொலைவிலும் கோவிலாடிக்கு அண்மையில் ஒரு பேரணையை கட்டினான் என்றும் ஆங்கிலேயர்கள் இந்த அணையின் வலிமையை கண்டு வியந்து இதை அப்படியே வைத்து இதன் மீது புதிய பாலத்தை கட்டினார்கள் என பண்டாரத்தார் கூறுகிறார்.வீரராஜேந்திரன் கட்டிய இந்த அணையினால் தஞ்சை பகுதி முழுவதும் நீர்வளம் பெற்று நெல்விளைவும் பெறுகியது என்கிறார். அப்படியென்றால் இந்த கல்லணையை கட்டிய கரிகால சோழன் இந்த வீரராஜேந்திரன் சோழனாகலாம். திருவாவடுதுறை கோயிலில் உள்ள கல்வெட்டு
'கோப்பரகேசரிபன்மரான உடையார் காவிரி கரை கண்ட கரிகால சோழ தேவர்'குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன,சிதம்பரம்.

Tuesday, July 23, 2019

திருவாவடுதுறை திருக்கோயில்

ஆன்மாக்கள் பிறவி எனும் ஆற்றை நீந்தி  துறையை (இறைவனை)அடைய பெறும் கோவில்கள் துறையென அழைக்கப்படுகிறது. திருவாவடுதுறை கோவில் பெயர் என்றும் சாத்தனூர் ஊரின் பெயர் என்றும் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பார்வதி சாபத்தினால் பசு உருவம் எடுத்து சிவலிங்க பூஜை செய்து சாபம் நீங்க பெற்று பின்பு சுய உருவம் பெற அவளை சிவபெருமான் இடப்பக்கம் அனைத்து கொள்ள அனைத்தெழுந்த நாயகர் என அழைக்கபடுகிறார். மேலூம் திருஞானசம்பந்தர் இங்கு பதிகம் பாடி பொற்கிழி பெற்றார். அப்போது பலி பீடத்தின் அருகே தமிழ் மணம் கமழவே அவ்விடத்தை தோண்டி பார்த்தப்போது அன்று களப்பிரர் ஆட்சியில் பல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டது திருமூலர் இயற்றிய திருமந்திர நூலை காப்பாற்ற அவற்றை செப்பேட்டில் எழுதி பேழையில் வைத்து இங்கு புதைத்தனர்  திருமந்திரத்தை எடுத்து திருஞானசம்பந்தர் உலகிற்கு அளித்தார் என சதாசிவபண்டாரத்தார் கூறுகிறார்.திருமூலர் திருமந்திரத்தை ஆண்டுக்கு ஒருப் பாடலாக மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார்
என்பர்.இவர் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என சதாசிவப் பண்டாரத்தார் கூறிப்பிடுகிறார்.இவர் இங்கு ஜீவ சமாதி அடைதார். திருமாளிகை தேவர் இங்கு தான் அட்டமா சித்திகளை பெற்றார்.முசுகுந்த சக்கரவர்த்திக்கு புத்திர பாக்கியம் அளித்த தலம்.சமய குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம்.இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணிஸ்வரர். இறைவி:ஒப்பில முலையம்மை. கோருபாபிம்கை. கல்வெட்டுகளில் இறைவன் திருவாவடுதுறை தேவர் என அழைக்கப்படுகிறார்.இந்த கோயில் பரந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்டது. பிச்சன் என்றால் அன்புடையவன் என பொருள். 'நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்' என்கிறது திருவாசகம். அவன் உருவமும் திருப்பணி செய்தவர்கள் உருவரும் இக்கோயில் புடைப்பு சிற்பமாக அமைந் திருக்கின்றன.இங்குள்ள நந்தி தமிழ் நாட்டிலே பெரிய நந்தி 14அடி உயரம். தஞ்சை கோயில் நந்தி 12 அடி உயரம் தான்.இங்குள்ள வசந்த மண்டம் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியது. காவிரி கரைகண்ட கரிகாலன் எனும் கல்வெட்டு உள்ளது.பல்லவ மகாதேவியார் சிவகாமு என்பவரும் திருபணி செய்துள்ளார்.இவ்வூர்த் திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம் பராந்தகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் மூன்றாம் குலோத்துங்க சோழன்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
திருமூலர்:  ஆகாய மார்க்கமாக வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்த சித்தர் ஒருவர் இவ்வூரில் வரும்போது சாத்தனூரில் வாழ்ந்த மூலன் என்பவன் தனது மாடுகளை மேய்க்கும் போது இறந்து விட்டான் அப்போது அம்மாடுகள் அவனை சுற்றி கண்ணீர் விட்டு அழுதன இதனை கண்ட சித்தர் கவலை கொண்டு தனது உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டு மூலன் உடம்பில் கூடுவிட்டு கூடு பாய்ந்தார்.மூலன் எழுந்தான் மாடுகள் ஆனந்தம் அடைந்து மேயத் தொடங்கின.பின்பு திருமூலர் தன் உடலை தேடினார் சிவபெருமான் அதை மறைத்து விட்டார்.மூலன் மனைவி அவனை காணாது தேடி வந்து திருமூலரை அழைத்தாள் அவர் நான் உன் கணவர் அல்ல தான் சித்தர் என்றும் தவம் செய்ய போகிறேன் கூறினார்.அவள் ஊராரை அழைத்து முறையிட்டாள் அவர்களும் இவரிடம் பேசினர் பின் இவர் ஞானி ஆகிவிட்டார் இனி இல்லற வாழ்க்கை வாழமாட்டார் என கூறினார் மூலன் மனைவி அவரை விட்டு சென்றால். திருமூலரை இவ்வுடம்பிலே இருந்து உன் நூலை இயற்றுக என சிவபெருமான் கூறியதால் அவர் ஆண்டு ஒன்றுக்கு ஒரு பாடல் என மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார்.இறுதியாக இங்கேயே முக்தி அடைந்து சமாதி கொண்டுள்ளார்.
 இரா.விக்ரமன்,சிதம்பரம்.

பூம்புகார் புத்த விகாரை

பூம்புகார் பௌத்த விகாரை 1965ஆம் ஆண்டு பூம்புகாரில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த விகாரையை கண்டுபிடித்துள்ளனர்.மேலும் பல பொருட்களும் தியான நிலையில் உள்ள புத்தர் சிலையும்,பெண் தெய்வ சுடுமண் உருவமும்,சுண்ணாம்பு கல்லால் ஆன புத்தர் பாதமும் கிடைத்ததுள்ளன.புத்தர் பாதம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள அமராவதி,நாகார்ஜீன கொண்டாவில் புத்த சமயக் கலைப்பொருட்களின் கலைபணியை ஒத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த விகாரை கணதாசர் எனும் பெளத்த துறவியால் கட்டப்பட்டது.மணிமேகலையும் சிலம்பும் இங்கு பௌத்த மதம் இங்கு சிறப்பு பெற்றிருந்ததை கூறுகின்றது.சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி இந்திரவிகாரை ஏழினை கண்டு வணங்கியதாக கூறுகின்றது அது தேவலோக இந்திரனால் கட்டப்பட்ட விகாரை அல்ல அசோகர் மகன் மகேந்திரன் பௌத்த மதத்தை பரப்ப இலங்கை செல்லும் போது புகாரில் தங்கியிருந்த போது ஏழு பௌத்த விகாரைகளை அவன் கட்டியதாக கூறுகின்றனர். கி.பி .நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டு தலைநகர் உறையூரில் பிறந்து வளர்ந்த புத்ததத்தன் என்பவன் இருமுறை இலங்கைக்கு சென்று பெளத்த சமய நூல்களை நன்று பயின்று பின்னர்ச் சோழ நாட்டிற்கு திரும்பி வந்து அபிதம்மாவதாரம்,விநயவிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான்.அவற்றுள் அபிதம்மாவதாரம் என்ற நூலை அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரி பூம் பட்டினத்தில் கணதாசனால் அமைக்கபட்டிருந்த பெளத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த பொழுது சுமதியென்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதி முடித்த செய்தியை அந்நூலின் இறுதியில் புத்ததத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகிறார். பூம்புகாரில் பல பெளத்த விகாரைகள் இருந்துள்ளன.பாலி மொழியில் உள்ள 'இராசவாகினி' என்னும் பெளத்த நூலில் சோழ அரசன் ஒருவன் காவிரி பூம் பட்டினத்தில் சிவப்பெருமானுக்கு கோயில் ஒன்று எடுப்பித்தான் என்றும் அக்கோயில் பணி நடைபெறும் போது சில பெளத்தத் துறவிகள் அங்கு வந்து சில அதிசயங்களை அரசனுக்கு செய்து காட்டி அச்சிவன் கோயிலை பெளத்த கோயிலாக மாற்றினர் என கூறப்பட்டுள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Monday, July 22, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் பாண்டிய நாயகம் சன்னதி

இந்த கோயில் தேர் வடிவ மண்டப கோயிலாகும்.இக்கோயில் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது.இக்கோயில் முருகன் வள்ளி தெய்வானை உருவம் மிக பெரியதாகும்.சில வருடங்கள் முன்பு இம்மண்டபத்தின் கருவறை மற்றும் மண்டபம் அடித்தளம் தவிர மற்ற பகுதிகள் முழுவதும் புதுப்பிக்க பட்டது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, July 20, 2019

திருபுவனம் திருபுவனவீரேச்சுரம் கோயில்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் பண்டியரை வெற்றி கொண்டு பாண்டியர் தலைநகர் மதுரையில் திரிபுவனவீரதேவன் என பட்டம் கொண்டு முடிசூடி கொண்டான். இம்மன்னன் பெயரால் அமைக்கப்பட்ட ஊரே திருபுவனம் ஆகும்.இங்கு இவன் எடுபித்த திருபுவனவீரேச்சுரம் எனும் சிவன் கோயிலாகும்.இக்கோயில் கம்பஹரேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் சோழ மன்னன் ஒருவனுக்கு நடுக்கத்தை  போக்கியதால் கம்பஹரேசுவரர் என அழைக்கப்படுகிறார்.கல்வெட்டுகளில் இறைவன் திரிபுவன ஈச்சுவர தேவர் என அழைக்கப்படுகிறார்.இக்கோயில் தோற்றத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போல உள்ளன.இதுவே சோழர்களின் இறுதி காலத்தில் எடுப்பிக்கப்பட்ட மாபெருங் கோயிலாகும்.இங்கு அம்மன் அறம் வளர்த்த நாயகி சன்னதியும் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது.அழகிய தேர் மண்டபம் உள்ளது.உடைந்த சிற்பங்கள் பல இங்கு உள்ளன.பராக்கிரம பாண்டியனும் திருப்பணி செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, July 19, 2019

பூம்புகார் படகுத்துறை கி.மு.3 ஆம் நூற்றாண்டு

பூம்புகாரில் 1963ல்நடந்த தொல்லியல் அகழாய்வில் திரு.கே.வி.ராமன் தலைமையில் கீழையூரில் கி.மு.3ஆம் நூற்றாண்டு படகுத்துறையை கண்டு பிடிதுள்ளனர்.1995ல் திரு.நடன காசிநாதன் தலைமையில் மணிகிராமத்தில் கி.மு 3ஆம் நூற்றாண்டு படகுத்துறையை கண்டுபிடித்துள்ளனர். படகுத்துறையை சுற்றி மரகம்பம் படகுகளை கட்ட நடப்பட்டிருந்தன அவற்றின் மீது ரசாயன கலவை ஊற்றி கார்பன் சோதனையில் அவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என கண்டறிந்தனர். பண்டைய காவிரியாறு பூம்புகார் வடக்கு பக்கம் உள்ள இந்த படகுத்துறை வழியாக சென்று நெய்தவாசல் எனும் இடத்தில் கடலில் கலந்துள்ளது.தற்போது நெய்தவாசல் கடல்கரையிலிருந்து கடல் உள்ளே 5 கி.மி வரை இந்த காவிரி ஆறு சென்று கடலில் கலந்துள்ளது.அந்த கடற்கரையில் தான் கட்டிடங்களும் கோயில்களும் எழுப்பியுள்ளனர். அங்கு தான் காமவேள் கோட்டம் சோமகுண்டம் சூரியகுண்டம் இரு குளங்கள் இருந்தன. பெளத்த விகாரைகளும் இருந்துள்ளன. லாட வடிவ பெளத்த விகரை கடலின் உள்ளே கண்டுப்பித்துள்ளனர். மணிமேகலை காலத்தில் தான் கடல் 5 கி.மி உள்ளே வந்துள்ளது. மருவூர்பாக்கம் முழுவதும் அழிந்தன.  பண்டைய காவிரியாற்று தடயத்தை கடலின் உள்ளே கண்டறிந்துள்ளனர்.   கடலில் வணிக பொருட்களை எற்றி வந்த கப்பலிருந்து  படகுகள் மூலம் இந்த படகுத்துறைகளில் பொருட்களை இறக்கியும் எற்றியும்  சென்றுள்ளது. இப்படத்துறைகளில் வரிசையாக படகுகள் கட்டப்பட்டிருந்த காட்சியைப் பட்டினப்பாலை கட்டுத்தறியில் குதிரைகள் பிணைக்கப்பட்டிருப்பது போல இருந்தது என கூறுகின்றது. சதாசிவப்பண்டாரத்தார் கூறிய பூம்புகார் பரப்பளவு ஊர்கள் வரைபடம்  கொடுத்துள்ளேன் அவற்றில் பழைய காவிரியாறு ஓடிய பகுதியை காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, July 18, 2019

சிம்ம வர்மன் (இரண்ய வர்மன்)

தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு தெற்கே கெளடவ தேசத்தில் ஆட்சி செய்த மனு என்ற அரசனுக்கு இரண்டு மனைவியர் மூத்த மனைவிக்கு ஒரு மகன் இளையவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மனைவியின் மகன்  சிங்கத்தை போல தோற்றம் கொண்டதால் சிம்மவர்மன் என அழைக்கப்பட்டான். தன் உடல் பிணி நீங்க சிவ தல யாத்திரை செல்ல வேண்டும் என்றும் தன் தம்பிகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் தந்தையிடம் கூறி விட்டு. ஒரு வேடனை துணையாக கொண்டு காஞ்சிபுரம் கோவில்களை வணங்கி பின்பு தில்லையை அடைந்தான்.அந்த வேடன் இவனை தில்லை எல்லை வரை விட்டு திரும்பி சென்றான். புலிக்கால் முனிவரை வணங்கி தன் உடல் பிணி பற்றி கூறினான். புலிக்கால் முனிவர் சிவகங்கை குளத்தில் மூழ்க செய்தார் அப்போது சிம்மவர்மன் குளத்திலிருந்து பொன்னிரமாக எழுந்தான்.பின்பு இரணிய வர்மன் என பெயர் பெற்றான்.பின்பு கூத்த பெருமானையும் மூலட்டானேஸ்வரரை வணங்கி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் பணிவிடை செய்து வந்தான்.புலிக்கால் முனிவர் தன் மகன் உமயன்பு போல இரணிய வர்மனை அரவணைத்தார். இரண்யவர்மன் தந்தை இறக்கும் போது தன் மூத்த பிள்ளை அராட்சி செய்ய வேண்டும் என வசிட்ட முனிவரிடம் கூறிவிட்டு இறந்தான்.சில ஆண்டுகளுக்கு பிறகு வசிட்ட முனிவர் இரண்யனிடம் உன் தந்தை இறந்து விட்டார் எனவும் அரசாட்சியை ஏற்க அழைத்தார்.அவன் மனம் கலங்கினான்.ஆனால் தில்லை விட்டு செல்ல மனமில்லாமல் புலிக்கால் முனிவர் சொல்படி கெளடவ தேசம் சென்று அங்கு பொன்னும் பொருளும் ,யானை படை குதிரை படை அனைத்தும் எடுத்து வரும் வழியில் வேள்விக்கு சென்ற தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் அழைத்து வந்து தில்லையில் திருப்பணி செய்து சிற்றம்பலத்தை முதலில் பொன் வேய்ந்தான்.இவன் தில்லையில் கொற்றவன்குடியிலும்  திருவேட்களத்திலும் இருந்து ஆட்சி செய்தான்.புலிக்கால் முனிவர் இவனுக்கு முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து ஆத்தி மாலை சூடி சோழ மன்னாக ஆக்கினார்.ஆனால் இவனை பல்லவன் என்று கூறுகின்றனர்.இவன் கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஆவான்.இரணிய வர்மன் இறுதியாக தன் மகனை தில்லையில் ஆட்சியில் அமர்த்தி காஞ்சிபுரம் சென்றான் எனக்கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



தஞ்சை ஆடல்வல்லான்.

இராஜராஜ சோழன் தஞ்சை பெருங்கோயிலை கட்டி அக்கோயிலுக்கு பல திருமேனிகளை அளித்தான்.அவற்றில் ஒன்று தான் இந்த ஆடவல்லான் எனும் நடராஜர் திருமேனியும் பிராட்டியர் எனும் சிவகாம சுந்தரி திருமேனியும் ஆகும்.சோழமாதேவி அளித்த ஆடவல்லான் திருமேனி கல்வெட்டில் அது பற்றிய முழு குறிப்பு உள்ளது. ஆனால் அத்திருமேனி தற்போது அங்கு இல்லை.ஆனால் இராஜராஜ சோழன் அளித்த ஆடவல்லான் திருமேனி தற்போது வழிபாட்டில் உள்ள நடராஜர் திருமேனியாகும்.கி.பி.1010ஆம் ஆண்டு இந்த ஆடவல்லான் திருமேனியை பெரிய கோயிலுக்கு ராஜராஜன் அளித்தான்.இந்த திருமேனியின் பீடமும் பிரபையின் ஒரு பகுதியும், முயலகனின் மீது ஊன்றிய காலின் ஒரு சிறு பகுதியும் கி.பி 1885 ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டதாகப் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த சிலையானது இக்கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் வணங்கும் கூத்தபிரான் ஓவியத்தை ஒத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த திருமேனியை கரூர்த்தேவர் உடனிருந்து வார்ப்பித்தார் எனவும் கூறுகின்றனர்.இந்த கூத்தபிரானின் சிறப்பு பெயரான ஆடவல்லானை இராஜராஜ சோழன் தன் காலத்தில் மரக்கால்,நிறைகல், துலாக் கோல்களுக்கும் வழங்கியுள்ளான். இராஜராஜ சோழனுக்கு இந்த ஆடவல்லான் மீது அவளவற்ற பக்தியும்,பாசமும், மரியாதையும் இருந்தது என்பதை நாம் அறியமுடிகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Monday, July 15, 2019

சிம்மவர்மன்.(இரணியவர்மன்)

தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு தெற்கே கெளடவ தேசத்தில் ஆட்சி செய்த மனு என்ற அரசனுக்கு இரண்டு மனைவியர் மூத்த மனைவிக்கு ஒரு மகன் இளையவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மனைவியின் மகன்  சிங்கத்தை போல தோற்றம் கொண்டதால் சிம்மவர்மன் என அழைக்கப்பட்டான். தன் உடல் பிணி நீங்க சிவ தல யாத்திரை செல்ல வேண்டும் என்றும் தன் தம்பிகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் தந்தையிடம் கூறி விட்டு. ஒரு வேடனை துணையாக கொண்டு காஞ்சிபுரம் கோவில்களை வணங்கி பின்பு தில்லையை அடைந்தான்.அந்த வேடன் இவனை தில்லை எல்லை வரை விட்டு திரும்பி சென்றான். புலிக்கால் முனிவரை வணங்கி தன் உடல் பிணி பற்றி கூறினான். புலிக்கால் முனிவர் சிவகங்கை குளத்தில் மூழ்க செய்தார் அப்போது சிம்மவர்மன் குளத்திலிருந்து பொன்னிரமாக எழுந்தான்.பின்பு இரணிய வர்மன் என பெயர் பெற்றான்.பின்பு கூத்த பெருமானையும் மூலட்டானேஸ்வரரை வணங்கி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் பணிவிடை செய்து வந்தான்.புலிக்கால் முனிவர் தன் மகன் உமயன்பு போல இரணிய வர்மனை அரவணைத்தார். இரண்யவர்மன் தந்தை இறக்கும் போது தன் மூத்த பிள்ளை அராட்சி செய்ய வேண்டும் என வசிட்ட முனிவரிடம் கூறிவிட்டு இறந்தான்.சில ஆண்டுகளுக்கு பிறகு வசிட்ட முனிவர் இரண்யனிடம் உன் தந்தை இறந்து விட்டார் எனவும் அரசாட்சியை ஏற்க அழைத்தார்.அவன் மனம் கலங்கினான்.ஆனால் தில்லை விட்டு செல்ல மனமில்லாமல் புலிக்கால் முனிவர் சொல்படி கெளடவ தேசம் சென்று அங்கு பொன்னும் பொருளும் ,யானை படை குதிரை படை அனைத்தும் எடுத்து வரும் வழியில் வேள்விக்கு சென்ற தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் அழைத்து வந்து தில்லையில் திருப்பணி செய்து சிற்றம்பலத்தை முதலில் பொன் வேய்ந்தான்.இவன் தில்லையில் கொற்றவன்குடியிலும்  திருவேட்களத்திலும் இருந்து ஆட்சி செய்தான்.புலிக்கால் முனிவர் இவனுக்கு முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து ஆத்தி மாலை சூடி சோழ மன்னாக ஆக்கினார்.ஆனால் இவனை பல்லவன் என்று கூறுகின்றனர்.இவன் கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஆவான்.இரணிய வர்மன் இறுதியாக தன் மகனை தில்லையில் ஆட்சியில் அமர்த்தி காஞ்சிபுரம் சென்றான் எனக்கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Friday, July 12, 2019

கண்ணகி சமாதி கொடுங்கலூர் பகவதி கோயில் ரகசிய அறை(secret chamber)

சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேல் குன்றத்தில் கண்ணகி கோயில் கட்டியது போலவே கொடுங்கலூரிலும் சிவன் கோயில் ஒட்டி கண்ணகி கோவில் கட்டினான்.அது பின்பு பகவதி காளி கோயிலாக மாற்றம் அடைந்தது. கண்ணகியை காளியாக வழிபடுகிறார்கள். இந்த காளி கருவறை கிழக்கில் உள்ள  நான்கு புறமும் கருங்கல் சுவர் உள்ள அறையே ரகசிய அறை அங்கிருந்து நிலத்தடியில் செல்லும் பாதை 300 அடி தொலைவில் வெளியே வருகிறதாம்.இந்த அறையில் தான் சேரன் செங்குட்டுவன் வஞ்சியில் குன்ற குறவர்களிடமிருந்து பெற்ற கண்ணகி உடலை அடக்கம் செய்தான் என்றும் அல்லது கண்ணகியை வஞ்சியில் எரித்து அவள் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்தும் மற்றும் அவளது புடவை நகை சிலம்பு ஆகியவற்றை அங்கு வைத்துள்ளான் என கூறுகின்றனர். மேலும் அவள் சிலையையும் அங்கு வைத்து இருக்கிறானாம்.இக்கோயில் முன்பு சமணர்களிடம் இருந்து பின்பு பிராமணர் வசம் வந்ததாம்.இந்த அறை  ஆடி அமாவாசை அன்று அந்த அறைக்கு பூசை செய்கின்றனர்.அன்று தான் கண்ணகி மதுரையை எரித்த நாள்.அன்று காளியின் இடது மார்பில் மஞ்சள் பூசுவர்.பரணி காவுதீண்டல் விழாவில் பொற்கொல்லர்கள் நகைகளை இந்த கோயிலில் வீசுவார்களாம்.இந்த அறைக்கு மக்கள் அனுமதி கிடையாது.கொடுங்கலூர் குறுநில மன்னர் படிஞாத்தெடத்து சொவரூவம் குடும்பத்தினர் மட்டும் அந்த அறை மேல் சுவர் வரை தரிக்க அனுமதி.அந்த மன்னர் பரம்பரையில் வந்த வரலாற்று ஆய்வாளர் இந்துசூடன் அவர்கள் இந்த ரகசிய அறையை பற்றி உலகிற்கு முதலில் கூறினார் அதை நூலாக கொடுங்கலூர் தேவஸ்தானத்தில் வெளியிட்டார்.இந்த அறைக்கு பிராமணர் பூஜை செய்வது கிடையாது அடிகள் என்பவர்கள் தான் பூஜை செய்வார்கள் அவர்கள் இளங்கோவடிகள் வழிவந்தவர் என்கின்றனர்.இவர்கள் வீடுகள் அந்த ரகசிய அறையின் நிலத்தின் வெளியே வரும் கதவின் வழியே அமைந்துள்ளன. இக்கோயிலில் 12அடி உயரம் உள்ள சேத்திரபாலர் செங்குட்டுவன் பூம்புகாரிலிருந்து கொண்டு வந்த சதுக்க பூதமாம்.மேலும் பூம்புகாரில் நஞ்சு உண்டவரையும்,பாம்பு கடித்தோரை காப்பாற்றும் நெடுங்கல் மன்றத்தில் இருந்த நெடுங்கல்லை எடுத்து சோட்டானிகரை பகவதி சிலை செய்தான் எனவும் கூறுகின்றனர்.நான் கூறுவது என்னவென்றால் சேரன் செங்குட்டுவன் பூம்புகாரில் கண்ணகி வீட்டில் அவள் பயன்படுத்திய புடவை நகைகள் பொருட்கள் மதுரையில் உடைந்த சிலம்புகள் ஆகியவற்றை சேகரித்து எடுத்து சென்று இந்த அறையில் வைத்திருக்கலாம் அல்லது கண்ணகி உடலுடனோ அல்லது சாம்பலுடனோ அவற்றை புதைத்திருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அந்த ரகசிய அறையில் கண்ணகி சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளன.வஞ்சி நெடுவேல் குன்றத்தில் கண்ணகியை அழைத்து செல்ல கோவலன்  விமானத்தில் வரும்போது கண்ணகி அவள் உடலை விட்டு தெய்வ வடிவில் செல்கிறாள்.குன்றக் குறவர் கண்களுக்கு இறந்த கோவலன் தெய்வ வடிவம்  தெரியும் போது கண்ணகி தெய்வ வடிவம் தெரியாமல் இருக்குமா. கோவலன் மதுரையில் வெட்டுன்று கிடக்கும் போது கண்ணகி அவனை தழுவி அழுகிறாள்.(பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்) அப்போது கோவலன் பழுது ஒழிந்து எழுந்தான் அவன் தன் உடலை விட்டு  எழுந்து நின்று கண்ணகியின் கண்ணீரை துடைத்து கவலைபடாதே நீ இங்கேயே இரு என்று அமரர்களுடன் வானுலகம் சென்றான்.கண்ணகியும் பதிநான்கு நாட்கள் அலைந்து திரிந்து தான் உடலை வறுத்தி இறுதியாக வஞ்சி நெடுவேல் குன்றத்தில் நின்று  கோவலன் வந்தவுடன் தனது பழுது(உடல்) நீக்கி தெய்வ உருவில் கோவலனுடன் வானுலகம் சென்றாள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



Tuesday, July 9, 2019

ஆதித்த சோழன் பள்ளிபடை கோயில்.(இந்திர விழா)

ஆதித்த சோழன் பள்ளிப்படை கோயில்.
பராந்தக சோழன் தன் தந்தை ஆதித்த சோழன் நினைவாக காளகஸ்தி அருகிலுள்ள தொண்டைமாநாடு எனும் ஊரில் ஆதித்தேசுவரம்,கோதண்ட ராமேசுவரம் எனும்  பள்ளிபடைக் கோயிலை எடுப்பித்தான்.இச்சமாதி கோயிலில் நடத்தப்படும் திருவிழாக்கள் இரண்டு ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரமான சதயநாள் திருவிழாவும், இந்திரவிழாவும் ஆகும்.புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் தொடங்கி மன்னரின் சதயநட்சத்திரம் அன்று முடிய வேண்டும் எனவும் இத்திருவிழா ஏழு நாட்கள் நடைபெற வேண்டும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்திரவிழா கடைசி நாளான தீர்த்தமாடு விழா மன்னரின் பிறந்த  சதயநட்சத்திரத்துடன் இணைந்து நடைபெறுகிறது.இந்த ஏழு நாட்களும் அறுசமயத்தவசிகள் 200 பேர், அந்தணர் 300 பேர்,அன்பரான பல சமயத்தவர் 500 பேர் என மொத்தம் 1000 பேர் கோயிலில் உணவு உண்பதற்கு நூற்றைந்து கழஞ்சுபொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டது.இந்த ஏழுநாட்களும் இறைவனுக்கு நீராடல்,பூச்சூடல், உணவு படைத்தல் போன்றவை நடைபெறுகின்றன.இந்திர விழாவில் நடைபெறுவது போல கூத்தும். பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இந்த ஏழுநாட்களும் சிறப்பாக இரவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன. இந்திர விழாவில் கடைசியில் கடலாடு விழா போல இக்கோயிலில் இறைவன் காளகஸ்தி சுவர்ணமுகி ஆற்றிற்கு கொண்டு செல்லப்ட்டு தீர்த்தவாரி நடைபெறுகின்றன.பின்பு திருவமுது படைக்கபடுகிறது.புரட்டாசி மாதம் மழைகாலம் என்பதால் இங்கு இந்திரவிழா நடைபெறுகின்றன.ஏன் இந்திரவிழா இங்கு நடைபெறுகிறது என்றால் சங்ககால மன்னன் ஆய் ஆண்டிரன் இறந்தவுடன் இந்திரனுடைய மாளிகையில் அவனை வரவேற்க முரசு அறையப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி செங்குட்டுவனுக்கு காட்சி கொடுத்து பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன் அவன் என் தந்தை போன்றவன் அவன் இந்திரன் கோயிலில் விருந்தினராக ஆகிவிட்டான் என கூறினாள். இரண்டாம் இராஜேந்திர சோழன் தன் மெய்க்கீர்த்தியில் தம் தமையன் முதலாம் இராஜாதிராஜன் பற்றி கூறும்போது அவன் தன்னுடன் போரிட்ட மன்னரை எல்லாம் இந்திரலோகத்திற்கு அனுப்பிட்டான் என்று கூறுகிறான்.இரண்டாம் இராஜேந்திரன் காலத்து நடுகல் ஒன்று இறந்த போர்வீரர்கள் இந்திரலோகத்தில் இரம்பை கவரி வீச ஒய்யாரமாக அமர்ந்து இருந்ததை காணமுடிகிறது என்கிறது.ஆகவே வீர மன்னர்களும் போரில் வீரமரணம் அடைந்த மன்னர்களும் வீரர்களும் இந்திரலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இவ்வாறு பல போர்களில் வெற்றிப் பெற்று சோழநாட்டை கைப்பற்றி ஆட்சி செய்து  விரிவு படுத்திய ஆதித்த சோழனும் இந்திரலோகத்தில் விருந்தினன் ஆகினான் என்பது நம்பிக்கை.அதன் நினைவாக இங்கு இந்திரவிழா கொண்டாட படுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
சான்றுகள் :1.திரு.ராணி(பூம்புகார் வரலாற்று கண்ணோட்டம்)
2.பிற்கால சோழ வரலாறு(சதாசிவப்பண்டாரத்தார்.

Thursday, July 4, 2019

தஞ்சை ஆடவல்லான்.

தஞ்சாவூர் நடராஜர்.
இராஜராஜ சோழன் தஞ்சை பெருங்கோயிலை கட்டி அக்கோயிலுக்கு பல திருமேனிகளை அளித்தான்.அவற்றில் ஒன்று தான் இந்த ஆடவல்லான் எனும் நடராஜர் திருமேனியும் பிராட்டியர் எனும் சிவகாம சுந்தரி திருமேனியும் ஆகும்.சோழமாதேவி அளித்த ஆடவல்லான் திருமேனி கல்வெட்டில் அது பற்றிய முழு குறிப்பு உள்ளது. ஆனால் அத்திருமேனி தற்போது அங்கு இல்லை.ஆனால் இராஜராஜ சோழன் அளித்த ஆடவல்லான் திருமேனி தற்போது வழிபாட்டில் உள்ள நடராஜர் திருமேனியாகும்.கி.பி.1010ஆம் ஆண்டு இந்த ஆடவல்லான் திருமேனியை பெரிய கோயிலுக்கு ராஜராஜன் அளித்தான்.இந்த திருமேனியின் பீடமும் பிரபையின் ஒரு பகுதியும், முயலகனின் மீது ஊன்றிய காலின் ஒரு சிறு பகுதியும் கி.பி 1885 ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டதாகப் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த சிலையானது இக்கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் வணங்கும் கூத்தபிரான் ஓவியத்தை ஒத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த திருமேனியை கரூர்த்தேவர் உடனிருந்து வார்ப்பித்தார் எனவும் கூறுகின்றனர். கூத்தபிரானின் சிறப்பு பெயரான ஆடவல்லானை இராஜராஜ சோழன் தன் காலத்தில் மரக்கால்,நிறைகல், துலாக் கோல்களுக்கும் வழங்கியுள்ளான். இராஜராஜ சோழனுக்கு இந்த ஆடவல்லான் மீது அவளவற்ற பக்தியும்,பாசமும், மரியாதையும் இருந்தது என்பதை நாம் அறியமுடிகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...