Sunday, March 28, 2021

செம்பியன் மாதேவியார் செம்பியன் மாதேவி கைலாசநாதர் கோயில்

பேரரசி செம்பியன் மாதேவி ஓர் ஊரை தன் பெயரில் அமைத்து அங்கு கைலாசநாதர் கோயிலை கட்டினார்.அக்கோயிலில் இராஜேந்திர சோழன் தன் ஆட்சியில் செம்பியன் மாதேவிக்கு ஒரு சிலை எடுத்துள்ளான். இரா.விக்ரமன்,சிதம்பரம்

Friday, March 26, 2021

கண்டராதித்த சோழன் திருநல்லம்

“ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன் திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம் உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்” என செம்பியன் மாதேவி தன் கணவர் மேற்கெழுந்தருளிய தேவரான கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பமும் திருவேள்விகுடி கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்து தன் கணவர் கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடும் சிற்மும் அமைத்துள்ளார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Tuesday, March 23, 2021

பல்லவ மன்னன் முதல் நரசிம்மவர்மன்

வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன்.வாதாபி வெற்றிக்குக் காரணமாகத் இருந்தவர் இவனது படைத்தலைவரான பரஞ்சோதியார் என்பவரே ஆவார் இவர்தான் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்ற பெயரால் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களை காண வந்த சீன நாட்டு பயணி யூவாங் சுவாங் என்பவர் இவனது ஆட்சியில் காஞ்சிபுரம் வந்தார்.இவன் தந்தையை போல குடைவரை கோயில்களையும் பல சிற்பங்களையும் உருவாக்கினான். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Sunday, March 21, 2021

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்

முதல் சிலை பல்லவன் மகேந்திர வர்மன்(மஹேந்திர போத்ராதிராஜன்) ஆதிவராகர் குடைவரை கோயில் மாமல்லபுரம.இரண்டாவது சிலை மகேந்திர வர்மன் திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவுடன் திருப்பாதிரி புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளை இடித்து திருவதிகையில் தனது விருது பெயரான குணபரன் என்னும் குணபர ஈச்சுரத்தை எடுப்பித்தான்.இதை போல திருச்சிராப்பள்ளி மலையில்.சிரா எனும் முனிவர் வாழ்ந்த சமணப் பள்ளியை இடித்து சிவபெருமானுக்கு கோயில் எடுப்பித்தான். ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது.இங்குள்ள கங்காதர மூர்த்தி சிற்பத்தின் இடது புறம் உள்ள உருவம் இனி நான் சிவபெருமானுக்கு அடிமை என்பது போல மகேந்திர வர்மன் சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.என்பதை போல உள்ளது எனவும்.எனவே அது மகேந்திர வர்மன் சிலையாக இருக்கலாம் என்கின்றனர்.விக்ரமன் சிதம்பரம்.

Friday, March 19, 2021

பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு

பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆதிவராகர் குடைவரை கோயில் மாமல்லபுரம் விக்ரமன் சிதம்பரம்.

Monday, March 15, 2021

முருகன் உறை கோயில் லாடன் கோயில்

இக்கோயில் முருகப் பெருமானுக்கும் அவர் தேவிக்கும் பாண்டியர் காலத்தில் எடுக்கப்பட்ட குடைவரை கோயில்.கி.பி.எட்டாம் நூற்றாண்டை சார்ந்தது.இதன் வடப்பக்கம் சுவரில் வட்டகுறிஞ்சி நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர் என்ற துறவி புதுக்கினார் என வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது.இக்கோயில் வலது பக்கம் உள்ள மனித உருவம் பாண்டிய மன்னன் உருவமாக இருக்கலாம் என்கின்றனர். விக்ரமன் சிதம்பரம்.

Sunday, March 14, 2021

முதல் வரகுண பாண்டியன் திருப்பெருந்துறை

முதலாம் வரகுண பாண்டியனுக்கு பிற்காலத்தில் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் எடுக்கப்பட்ட சிலை.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...