Thursday, September 26, 2019

பூம்புகாரில் இருந்த பதினாறுகால் மண்டபம் எனும் சித்திர மண்டபம்

கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம்                                      ‘‘வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’’                  
12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்த  மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் அரண்மனை வாழ்விடங்களை அழித்து வரும்போது பூம்புகாரில் புலவர் பரிசாக பெற்ற பதினாறு கால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டு சென்றான்.
சோழ மன்னன் இமயத்திற் புலியிலச்சினை பொறித்து மீண்ட காலத்து மகதநாட்டு மன்னன்பால் திறையாகப் பெற்று வந்த பட்டி மண்டபத்துடன் பதினாறு நூறாயிரம் பொன்னையும் கடியலூர் உருத்திரங் கண்ணாருக்குப் பரிசாகத் தந்து பாராட்டினான் என்பது வரலாறு. இச்செய்தியினை கவிச் சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார்.
 "தத்துநீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தோ டாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"
என கலிங்கத்துப்பரணி பரணியில் குறித்துள்ளார்.
புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர்.
"அன்று கவிக்கு வியந்து தரும்பரிசிற் கொருபோர் ஆழியில் வந்து தராதலம் நின்று புகாரி லனைத்தலகும் சென்று கவிக்கு மகத்தது தூண் வயிரத்தினு முகத்தினுமெய் செய்ததொர்பொற்றிரு மண்டபம் நல்கிய செயகுல நாயகமே"

"நாவலனே கிடையா நவமணி மண்டபம் நின் பாவலனே கவரப் பண்டு பணித்தவனே"
என குலோத்துங்க பிள்ளைத் தமிழில் உளமுவந்து பாராட்டியுள்ளார்.
       சித்திர மண்டபம் எங்கே?
மேற்குறித்த பதினாறுகால் மண்டபத்தை சித்திர மண்டபம் என்று இளங்கோவடிகள் குறிக்கின்றார்.
"செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன் "
 13ஆம் நூற்றாண்டிற்கு பிறகு எந்த வித கொடிய படையெடுப்பு நிகழவில்லை என்றும் பூம்புகாரில் இருந்த பதினாறு கால் மண்டபம் கடல் கொந்தளிப்பால் விழுங்கப்பட்டோ அல்லது நிலப்பகுதியில் கேட்பாரற்று கிடந்து அழிந்திருக்க கூடும் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.கடலின் உள்ளேயும் அருகேயும் பழைய செங்கல் கட்டிட பகுதிகள் தென்படுகின்றன என்கிறார். ஊர் பகுதியில் தரை மட்டமாயுள்ள நிலப்பகுதிகள் காணப்படுகின்றன. கடலூக்குள்ளயோ,அல்லது ஊர்பகுதிலோ ஆராய்ந்தால் இம்மண்டபத்தை கண்டுபிடித்து விடலாம் என உறுதியாக கூறுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
நூல்:காவிரி பூம் பட்டினம் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.

Sunday, September 22, 2019

சிதம்பரம் சோழர் அரண்மனை

சோழ மன்னர்கள் அனைவரும் தில்லையை ஒரு சிறந்த தலமாக போற்றி வந்தனர்.நடராஜ பெருமானை தம் குல தெய்வமாக வழிபட்டனர். சோழர்கள் ஒரு குறிப்பிட்ட அரண்மனையில் மட்டும் வசிக்கவில்லை சிறந்த தலங்கள் உள்ள ஊர்களிலும் பிற முக்கியமான ஊர்களிலும் அரண்மனை அமைத்து அங்கு தங்கி இருந்தனர். சோழ மன்னர்கள் அரண்மனை இல்லாத ஊர்களில் பெரிய மண்டபங்களில் தங்கியிருந்தனர். அவை கொட்டகாரங்கள் என அழைக்கப்பட்டன என பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.சிதம்பரத்தில் கொற்றவன் குடி எனும் பகுதியில் தான் சோழர் அரண்மனை இருந்துள்ளன. இராஜேந்திர சோழன் கரந்தை செப்பேட்டில் "நமக்கு (இராஜேந்திர சோழருக்கு) யாண்டு எட்டாவது, நாள் நூறேழி நால் பெரும்பற்றப்புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ ப்ரமாதிராஜனில் நாம் உண்ணாவிருந்த" பொழுது என குறிக்கப்பட்டுள்ளது.இராஜேந்திர சோழன் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திரசோழபுர பிரம்மாதிராஜனில் அமர்ந்து இருந்த  போது கரந்தை செப்பேட்டு ஆவணத்தை வெளியிட்டுள்ளான்.அது தன் தாயின் பெயரில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் அமைக்க ஆணையிட்டதை குறிப்பிட்டுள்ளது.இந்த செப்பேட்டினால் எட்டாம் ஆட்சி ஆண்டில் இராஜேந்திர சோழன் இந்த அரண்மனையில் தங்கியிருந்தை அறியமுடிகிறது.கி.பி.1120ஆம் ஆண்டு விக்கிரமசோழன் தில்லை அரண்மனையில் தங்கி இருந்தான் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.விக்கிரம சோழன் காட்டுமன்னார்குடியிலும் ஒரு அரண்மனை அமைத்து இருந்தான்.சோழ மன்னர்கள் அனைவரும் சிதம்பரம் அரண்மனையில் தங்கி தில்லை பெருங்கோயிலில் திருப்பணி செய்து வந்தனர்.1951ஆம் ஆண்டு இங்கு தொழில் கல்வி கூடம்  கட்டி அதற்கு இடம் பற்றாமல் இதை இணைத்து மற்றொரு கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும்போது ஒரு மண்பானையில் மூவாயிரம் மேற்பட்ட செப்பு நாணயங்கள் கிடைக்க பெற்றன.அதை கல்வெட்டு பேரறிஞர் தி.வை.சதாசிப் பண்டாரத்தாரும், பேராசிரியர் சத்திய நாதய்யரும் ஆராய்ந்து அவை முதலாம் இராஜராஜ சோழன் கால நாணயங்கள் என கண்டறிந்து கூறினர்.தற்போதும் சில வருடங்கள் முன்பு ஒருவர் இப்பகுதியில் வீடு கட்ட பள்ளம் தோண்டும் போது ஒரு அம்மன் சிலையும் சில காசுகளும் கிடைத்துள்ளன.இங்கு அரண்மனை அமைத்த சோழர்கள்  நான்கு விதப்படைகளை இதன் எல்லையில் அமர்த்திக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள்.கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிம்மவர்மனும் இந்த கொற்றவன்குடியில் தான் அரண்மனை அமைத்து ஆட்சி புரிந்தான்.கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இவ்வழியாக தான் தினமும் நடராஜ பெருமானை தரிசிக்க சென்று வருவார்.கி.பி.14ஆம் நூற்றாண்டில் சந்தான குறவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியாரும் இங்கு தான் வாழ்ந்து மறைந்து சமாதி கோயில் கொண்டுள்ளார். கொற்றவன்குடி கல்வெட்டுகளில் குறவன்குடி, கோட்டன்குடி,பவித்திர மாணிக்கநல்லூர் என குறிக்கப்பட்டுள்ளது.சோழர்களின் வாழ்விடங்களை அழித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த அரண்மனை மட்டும் விட்டு வைத்திருப்பானா இவையும் அழித்து தான் இருப்பான். நான் முன்பு எழுதிய பதிவில் சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய ஐயனார் கோயில் உள்ளே வேறொரு இடத்திலிருந்து கொண்டு வரப்பபட்ட சிற்பங்கள் உள்ளன என கூறினேன் அவை காளி,சிவ லிங்கம்,நந்தி, சண்டிகேசுரர்,பைரவர் ஆகிய சிற்பங்கள் இந்த அரண்மனை அழிந்த பின்பு இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிற்பங்களாக கூட அவை இருக்கலாம்.தற்போது இங்கு இடங்களை தோண்டி ஆராய்ச்சி செய்ய இடமும் இல்லை கட்டிடங்களும் வீடுகளும் பெருகிவிட்டன.கங்கை கொண்ட சோழபுரம் கிராம பகுதி என்பதால் அங்கு இராஜேந்திர சோழன் அரண்மனையின் அடித்தளம் கிடைத்துள்ளன.சிதம்பரம் நகர்ப்புற பகுதி என்பதால் சோழர் அரண்மனையின் அடித்தளம் கூட எஞ்சி நிற்கவில்லை.பிற்காலத்தில் இங்கு வீடுகளோ கட்டிடங்களோ கட்ட ஆழமாக பள்ளம் தோண்டினால் இங்கு அரண்மனை இருந்த தடயங்களை கிடைக்கலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.









Tuesday, September 17, 2019

வீரநாராயண பெருமாள் கோயில்

பராந்தக சோழனால் எடுக்கபட்ட கோயில்.கல்வெட்டுகளில் கோயில் வீரநாரயண விண்ணகர் எனவும் இறைவன் பெயர் வீரநாராயண எம்பெருமான் என அழைக்கப்படுகிறார்.சடையவர்ம சுந்தர பாண்டியனால் முழுவதும் புதுப்பிக்க பட்டு தன் பெயரில் பொன் வேய்ந்த பெருமாள் என தன் சிலையை நிறுவி சுந்தர பாண்டியன் சந்தி ஒருவேளை நிவேதனம் செய்ய நன்கொடை வழங்கினான்.இவன் சிற்பத்தை தற்போது அங்கு காணமுடியவில்லை.கோயில் புதுப்பிக்க படும்போது பழைய கல்வெட்டுகளை  படியெடுத்து மறுபடியும்  வெட்டுவிப்பது வழக்கம் ஆனால் சடையவர்ம சுந்தர பாண்டியன் சோழர் கல்வெட்டுகளை பதிக்கமல் விட்டுவிட்டான்.வீரநாரயண சதுர்வேதி மங்கலத்தை சுந்தர பாண்டியன் சதுர்வேதி மங்கலம் என மாற்றி விட்டான்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன்,கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் உள்ளன. நாதமுனிகள் அவதார திருக்கோயில். நாதமுனிகள் நாலாயிர திவ்ய பிரபந்ததை தொகுத்து இங்கு  தான் உலகிற்கு அளித்தார். நாலாயிர திவ்ய பிரபந்ததை அரங்கேற்ற பெருமாள் இவருக்கு இடத்தை காட்டியதால் காட்டுமன்னார் கோயில் என அழைக்கப்பட்டது.
இறைவன்:வீரநாராயண பெருமாள்.
இறைவி:மரகத வல்லி தாயார்.
சான்றுகள்:முற்கால சோழர் கலையும் சிற்பமும்.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
நாதமுனிகள் வரலாறு.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Wednesday, September 11, 2019

கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வு

மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் கள்வனா என சூரியனை பார்த்து கேட்டாள் அதற்கு சூரியன் உன் கணவன் கள்வனல்ல உத்தமன் விரைவில் இவ்வூரை எரியுண்ணும் என கூறியது. பாண்டியன் அவையில் கோவலன் கள்வன் இல்லை என மெய்ப்பித்து வெளியே வந்த கண்ணகி தனது இடமுலையை கையால் திருகி பிய்த்து மதுரையை மும்முறை வலம் வந்து வானத்தை நோக்கி வீசினால் அவை தீப்பிழம்பாக மாறி மதுரை எரிய தொடங்கியது.இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கும்.கண்ணகி தனது இடது மார்பையே பிய்த்து எறிந்தாள். சிலர் முலை என்பது கண் என கூறுகின்றனர். கண்களை பிடிங்க தான் முடியும் திருக முடியாது. மதுரையில் தேவி பார்வதி மலையத்துவச பாண்டியன் மகளாக தடாதகைப் பிராட்டியராக பிறந்த போது மூன்று முலைகளுடன் பிறந்தால் அதாவது மூன்று மார்பங்களுடன் பிறந்தாள்.அவள் பருவ வயது அடைந்து சிவபெருமானை கண்டவுடன் நடுவில் முலை மறைந்து விட்டதாம். திருவிளையாடல் புராண பாடலில் 'உயிர் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணியொசிந்தபூங் கொம்பி னின்றாள்'இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கின்றது. திருஞானசம்பந்தர்க்கு தேவி பார்வதி தன் முலைபாலையே  கொடுத்தாள். சீர்காழியில் கோயிலில் திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் திருவிழா இன்றும் நடைபெறுகிறது. குஜராத் பகுதியில் ஒரு கிராமத்தில் சில பெண்கள் தங்கள் எதிரிகளை அழிக்க தனது ஒரு மார்பகத்தை பிய்த்து எறிவார்களாம். சமண சமயத்தில் பெண்கள் தன் கணவர் இறந்தவுடன் உடம்பில் ஒரு உறுப்பை குறைத்து கொள்வார்களாம். நற்றிணையில் வரும் பாடலில்
“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” (216:8,9) என்ற பாடல் பகுதி கண்ணகியின் செயலையே குறிக்கின்றது.கேரளா கொடுங்கலூர் பகவதி கோயில் உள்ள அம்மன் ஒற்றை முலைச்சி என்றே அழைக்கப்பட்டாள்.சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான்.எனவே அழைக்கப்பட்டாள்.சேரன்  கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான். ஆனாலும் சில கண்ணகி கோயில்களில் ஒற்றை மார்புடன் நாம் இப்போது பார்க்கும் அர்த்தநாரி சிலை போல சிலைகள் இருந்தன பின்பு அந்த சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய முழுமையாக வடித்த சிலையை வைத்து வழிபட்டனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Monday, September 9, 2019

ஒற்றை முலைச்சி அம்மன் கண்ணகி

மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் கள்வனா என சூரியனை பார்த்து கேட்டாள் அதற்கு சூரியன் உன் கணவன் கள்வனல்ல உத்தமன் விரைவில் இவ்வூரை எரியுண்ணும் என கூறியது. பாண்டியன் அவையில் கோவலன் கள்வன் இல்லை என மெய்ப்பித்து வெளியே வந்த கண்ணகி தனது இடமுலையை கையால் திருகி பிய்த்து மதுரையை மும்முறை வலம் வந்து வானத்தை நோக்கி வீசினால் அவை தீப்பிழம்பாக மாறி மதுரை எரிய தொடங்கியது.இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கும்.கண்ணகி தனது இடது மார்பையே பிய்த்து எறிந்தாள். சிலர் முலை என்பது கண் என கூறுகின்றனர். கண்களை பிடிங்க தான் முடியும் திருக முடியாது. மதுரையில் தேவி பார்வதி மலையத்துவச பாண்டியன் மகளாக தடாதகைப் பிராட்டியராக பிறந்த போது மூன்று முலைகளுடன் பிறந்தால் அதாவது மூன்று மார்பங்களுடன் பிறந்தாள்.அவள் பருவ வயது அடைந்து சிவபெருமானை கண்டவுடன் நடுவில் முலை மறைந்து விட்டதாம். திருவிளையாடல் புராண பாடலில் 'உயிர் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணியொசிந்தபூங் கொம்பி னின்றாள்'இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கின்றது. திருஞானசம்பந்தர்க்கு தேவி பார்வதி தன் முலைபாலையே  கொடுத்தாள். சீர்காழியில் கோயிலில் திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் திருவிழா இன்றும் நடைபெறுகிறது. குஜராத் பகுதியில் ஒரு கிராமத்தில் சில பெண்கள் தங்கள் எதிரிகளை அழிக்க தனது ஒரு மார்பகத்தை பிய்த்து எறிவார்களாம். சமண சமயத்தில் பெண்கள் தன் கணவர் இறந்தவுடன் உடம்பில் ஒரு உறுப்பை குறைத்து கொள்வார்களாம். நற்றிணையில் வரும் பாடலில்
“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” (216:8,9) என்ற பாடல் பகுதி கண்ணகியின் செயலையே குறிக்கின்றது.கேரளா கொடுங்கலூர் பகவதி கோயில் உள்ள அம்மன் ஒற்றை முலைச்சி என்றே அழைக்கப்பட்டாள்.சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான். ஆனாலும் சில கண்ணகி கோயில்களில் ஒற்றை மார்புடன் நாம் இப்போது பார்க்கும் அர்த்தநாரி சிலை போல சிலைகள் இருந்தன பின்பு அந்த சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய முழுமையாக வடித்த சிலையை வைத்து வழிபட்டனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Saturday, September 7, 2019

கண்ணகி ஒற்றை முலைச்சி அம்மன்

மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் கள்வனா என சூரியனை பார்த்து கேட்டாள் அதற்கு சூரியன் உன் கணவன் கள்வனல்ல உத்தமன் விரைவில் இவ்வூரை எரியுண்ணும் என கூறியது. பாண்டியன் அவையில் கோவலன் கள்வன் இல்லை என மெய்ப்பித்து வெளியே வந்த கண்ணகி தனது இடமுலையை கையால் திருகி பிய்த்து மதுரையை மும்முறை வலம் வந்து வானத்தை நோக்கி வீசினால் அவை தீப்பிழம்பாக மாறி மதுரை எரிய தொடங்கியது.இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கும்.கண்ணகி தனது இடது மார்பையே பிய்த்து எறிந்தாள். சிலர் முலை என்பது கண் என கூறுகின்றனர். கண்களை பிடிங்க தான் முடியும் திருக முடியாது. மதுரையில் தேவி பார்வதி மலையத்துவச பாண்டியன் மகளாக தடாதகைப் பிராட்டியராக பிறந்த போது மூன்று முலைகளுடன் பிறந்தால் அதாவது மூன்று மார்பங்களுடன் பிறந்தாள்.அவள் பருவ வயது அடைந்து சிவபெருமானை கண்டவுடன் நடுவில் முலை மறைந்து விட்டதாம். திருவிளையாடல் புராண பாடலில் 'உயிர் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணியொசிந்தபூங் கொம்பி னின்றாள்'இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கின்றது. திருஞானசம்பந்தர்க்கு தேவி பார்வதி தன் முலைப்பாலையே  கொடுத்தாள். சீர்காழியில் கோயிலில் திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் திருவிழா இன்றும் நடைபெறுகிறது. குஜராத் பகுதியில் ஒரு கிராமத்தில் சில பெண்கள் தங்கள் எதிரிகளை அழிக்க தனது ஒரு மார்பகத்தை பிய்த்து எறிவார்களாம். சமண சமயத்தில் பெண்கள் தன் கணவர் இறந்தவுடன் உடம்பில் ஒரு உறுப்பை குறைத்து கொள்வார்களாம். நற்றிணையில் வரும் பாடலில்
“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” (216:8,9) என்ற பாடல் பகுதி கண்ணகியின் செயலையே குறிக்கின்றது.கேரளா கொடுங்கலூர் பகவதி கோயில் உள்ள அம்மன் ஒற்றை முலைச்சி என்றே அழைக்கப்பட்டாள்.சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான்.ஆனாலும் சில கண்ணகி கோயில்களில் ஒற்றை மார்புடன் நாம் இப்போது பார்க்கும் அர்த்தநாரி சிலை போல சிலைகள் இருந்தன பின்பு அந்த சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய முழுமையாக வடித்த சிலையை வைத்து வழிபட்டனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Thursday, September 5, 2019

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

இரண்டாம் நரசிம்மவர்மன் மகன் இரண்டாம் பரமேசுவரன் திருவதிகை கோயில் கருவறை கருங்கல்லால் எடுப்பித்து மேல் பகுதி கோபுரம் செங்கல் சுண்ணாம்பு சுதையால் எடுக்கப்பித்தான்.தன் தந்தையை போல பதினாறு பட்டை சிவலிங்கமும் அதன் பின்புறம் சிவன் பார்வதி குகன் சுதை சிற்பத்தை அமைத்துள்ளான். பின்பு நிருபதுங்கன் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டது.அம்மன் கோயில், திருச்சுற்று மாளிகை, நூறுகால் மண்டபம், குளம் ஆகியவை மணவிற் கூத்த காலிங்கராயனால் திருப்பணி செய்யப்பட்டது. கோப்பெருஞ்சிங்கனும் திருப்பணி செய்துள்ளார்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...