Monday, October 12, 2020

வீரராஜேந்திரன் அளித்த மணிமுடி.

வீரராஜேந்திரன் தன் முன்னோர்களை போல சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்.இவன் தில்லை சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற இரத்தினத்தால் ஆன சிறந்த மணிமுடி அளித்தான். *பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, October 9, 2020

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரம்

இரண்டாம் குலோத்துங்க சோழனால் தொடங்கப்பட்ட இக்கோபுரம் இரண்டாம் கோப்பெருங்சிங்கனால் முற்றிலும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. 1.அவனியாளப் பிறந்தான் காவேரி பாயும் நாட்டை வென்றதனால் சம்பாதிக்கப்பட்ட பொருள்களால் கனக சபைக்குக் கிழக்கே மேருமலை போன்றதும்,தேவர் கூட்டங்களுடைய மகுடங்களோடு இடறக் கூடியதுமாகிய கோபுரத்தைத் தன் பெயரில் சிறிது காலத்தில் எடுப்பித்தான். 2.கட்க மல்லனாகிய அரசன் ஏழு சமுத்திரங்களையுடைய அலைகளையும் கடக்கூடிய திறமையுடைய புகழை உடையவன். அவன் ஏழு தீவுகளை வென்று ஈட்டிய பொருளால் ஏழு உலகங்களுக்கு நலன் தரக்கூடிய ஆதி நடேசனான நடராஜனுக்கு,நட்சத்திர கூட்டங்களை இடிக்கக் கூடிய,அன்பர்கள் விருப்பத்தை பூர்த்திசெய்யும் ஸ்ரீ கோபுரத்தை எடுப்பித்தான். 3.நடராசனும்,சபையிலுள்ள எல்லாத் தேவர்களும் நிரம்பியிருப்பதான காட்சியை கோபுரத்தை அவனியாளப் பிறந்தானும் நற்குணங்களுக்கு இருப்பிடமானவனும் ஆகிய காடவ குல மன்னன் ஏழு உலகங்களையும் மக்கள் கண்முன் கொண்டு வருவதற்காகவோ ஏழுநிலை அடுக்குகளை உடைய கோபுரத்தைச் சுத்தமான தன்புகழால் எடுப்பித்தான். 4.கிழக்கு திக்கிலுள்ள அரசர்களை வென்று அவர்கள் கொடுத்த பொன்னை துலாபாரம் செய்து, நிச்சங்கமல்லன்,பார்வதி சமேதராக இருக்கும் நடேசன் நித்யமான சபையின் கிழக்கு பக்கத்தில் கீழை கோபுரக் கீழ் பகுதியைச் சூரியன் முறிந்து விழுந்து போன்று ஒளி மிக்கதாக நிர்மாணித்தான்.இன்னும் பல கல்வெட்டுகள் இவன் இந்த கோபுரத்தை கட்டியதை கூறுகின்றது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Tuesday, October 6, 2020

சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுரம்

இக்கோபுரம் பாண்டியர்களால் தொடங்கப்பட்டு முதலாம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டி முடிக்கப்பட்டது."கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு ஐந்தாவது தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு அழகிய சீயன் அவனி ஆளப்பிறந்தான் காடவன் கோப்பெருஞ்சிங்கனேன் இந்நாயனார்கோயில் தெற்கு திருவாசலில் சொக்கசீயன் திருநிலை எழு கோபுரமாகச் செய்த திருப்பணிக்கு உடலாக" இக்கோயில் திருப்பணிக்கு உடலாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுகாட்டுக் கோட்டடத்து ஆற்றூரான ராஜராஜநல்லூரில் 301 3/4 வேலி நிலம் இம்மன்னனால் கொடுக்கப்பட்டது. (விக்ரமன்,சிதம்பரம்)

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...