Friday, July 9, 2021

தில்லை திருக்கைக் கோட்டி மண்டபம்

தில்லைப் பெருங்கோயிலில் மணவிற் கூத்த காலிங்கராயன் பல திருப்பணிகள் செய்து தேவாரத் திருமுறைகளை செப்பேட்டில் எழுதி சிற்றம்பலத்தில் வைத்து அவற்றை தினமும் ஓத நடராஜர் சன்னதியின் முன்பு மண்டபம் கட்டி அதில் தேவார மூவரை எழுந்தருளவித்தான்.தேவார திருமுறை மண்டபங்கள் திருக்கை கோட்டி என அழைக்கப்பட்டது.பின்பு அந்த மண்டபம் தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சி செய்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1579-இல் பழைய இடத்திலிருந்து பெருமாளை எடுத்து நடராஜர் சன்னதி சபை வாசலிலேயே பெருமாளுக்கு தனி சன்னதி அமைத்தான். அம்மண்டபம் பெருமாள் கோவிலின் முகமண்டபம் ஆகிவிட்டது.பின்பு அந்த மண்டபம் செட்டியார்களால் புதுப்பிக்கப்பட்டது . தேவார மூவரின் சிலைகள் தற்போது நவகிரகத்தின் அருகில் உள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...