மூன்றாம் குலோத்துங்க சோழன் பண்டியரை வெற்றி கொண்டு பாண்டியர் தலைநகர் மதுரையில் திரிபுவனவீரதேவன் என பட்டம் கொண்டு முடிசூடி கொண்டான். இம்மன்னன் பெயரால் அமைக்கப்பட்ட ஊரே திருபுவனம் ஆகும்.இங்கு இவன் எடுபித்த திருபுவனவீரேச்சுரம் எனும் சிவன் கோயிலாகும்.இக்கோயில் கம்பஹரேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் சோழ மன்னன் ஒருவனுக்கு நடுக்கத்தை போக்கியதால் கம்பஹரேசுவரர் என அழைக்கப்படுகிறார்.கல்வெட்டுகளில் இறைவன் திரிபுவன ஈச்சுவர தேவர் என அழைக்கப்படுகிறார்.இக்கோயில் தோற்றத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போல உள்ளன.இதுவே சோழர்களின் இறுதி காலத்தில் எடுப்பிக்கப்பட்ட மாபெருங் கோயிலாகும்.இங்கு அம்மன் அறம் வளர்த்த நாயகி சன்னதியும் சரபேஸ்வரர் சன்னதியும் உள்ளது.அழகிய தேர் மண்டபம் உள்ளது.உடைந்த சிற்பங்கள் பல இங்கு உள்ளன.பராக்கிரம பாண்டியனும் திருப்பணி செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment