Tuesday, July 23, 2019

திருவாவடுதுறை திருக்கோயில்

ஆன்மாக்கள் பிறவி எனும் ஆற்றை நீந்தி  துறையை (இறைவனை)அடைய பெறும் கோவில்கள் துறையென அழைக்கப்படுகிறது. திருவாவடுதுறை கோவில் பெயர் என்றும் சாத்தனூர் ஊரின் பெயர் என்றும் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பார்வதி சாபத்தினால் பசு உருவம் எடுத்து சிவலிங்க பூஜை செய்து சாபம் நீங்க பெற்று பின்பு சுய உருவம் பெற அவளை சிவபெருமான் இடப்பக்கம் அனைத்து கொள்ள அனைத்தெழுந்த நாயகர் என அழைக்கபடுகிறார். மேலூம் திருஞானசம்பந்தர் இங்கு பதிகம் பாடி பொற்கிழி பெற்றார். அப்போது பலி பீடத்தின் அருகே தமிழ் மணம் கமழவே அவ்விடத்தை தோண்டி பார்த்தப்போது அன்று களப்பிரர் ஆட்சியில் பல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டது திருமூலர் இயற்றிய திருமந்திர நூலை காப்பாற்ற அவற்றை செப்பேட்டில் எழுதி பேழையில் வைத்து இங்கு புதைத்தனர்  திருமந்திரத்தை எடுத்து திருஞானசம்பந்தர் உலகிற்கு அளித்தார் என சதாசிவபண்டாரத்தார் கூறுகிறார்.திருமூலர் திருமந்திரத்தை ஆண்டுக்கு ஒருப் பாடலாக மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார்
என்பர்.இவர் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என சதாசிவப் பண்டாரத்தார் கூறிப்பிடுகிறார்.இவர் இங்கு ஜீவ சமாதி அடைதார். திருமாளிகை தேவர் இங்கு தான் அட்டமா சித்திகளை பெற்றார்.முசுகுந்த சக்கரவர்த்திக்கு புத்திர பாக்கியம் அளித்த தலம்.சமய குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம்.இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணிஸ்வரர். இறைவி:ஒப்பில முலையம்மை. கோருபாபிம்கை. கல்வெட்டுகளில் இறைவன் திருவாவடுதுறை தேவர் என அழைக்கப்படுகிறார்.இந்த கோயில் பரந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்டது. பிச்சன் என்றால் அன்புடையவன் என பொருள். 'நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்' என்கிறது திருவாசகம். அவன் உருவமும் திருப்பணி செய்தவர்கள் உருவரும் இக்கோயில் புடைப்பு சிற்பமாக அமைந் திருக்கின்றன.இங்குள்ள நந்தி தமிழ் நாட்டிலே பெரிய நந்தி 14அடி உயரம். தஞ்சை கோயில் நந்தி 12 அடி உயரம் தான்.இங்குள்ள வசந்த மண்டம் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியது. காவிரி கரைகண்ட கரிகாலன் எனும் கல்வெட்டு உள்ளது.பல்லவ மகாதேவியார் சிவகாமு என்பவரும் திருபணி செய்துள்ளார்.இவ்வூர்த் திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம் பராந்தகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் மூன்றாம் குலோத்துங்க சோழன்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
திருமூலர்:  ஆகாய மார்க்கமாக வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்த சித்தர் ஒருவர் இவ்வூரில் வரும்போது சாத்தனூரில் வாழ்ந்த மூலன் என்பவன் தனது மாடுகளை மேய்க்கும் போது இறந்து விட்டான் அப்போது அம்மாடுகள் அவனை சுற்றி கண்ணீர் விட்டு அழுதன இதனை கண்ட சித்தர் கவலை கொண்டு தனது உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டு மூலன் உடம்பில் கூடுவிட்டு கூடு பாய்ந்தார்.மூலன் எழுந்தான் மாடுகள் ஆனந்தம் அடைந்து மேயத் தொடங்கின.பின்பு திருமூலர் தன் உடலை தேடினார் சிவபெருமான் அதை மறைத்து விட்டார்.மூலன் மனைவி அவனை காணாது தேடி வந்து திருமூலரை அழைத்தாள் அவர் நான் உன் கணவர் அல்ல தான் சித்தர் என்றும் தவம் செய்ய போகிறேன் கூறினார்.அவள் ஊராரை அழைத்து முறையிட்டாள் அவர்களும் இவரிடம் பேசினர் பின் இவர் ஞானி ஆகிவிட்டார் இனி இல்லற வாழ்க்கை வாழமாட்டார் என கூறினார் மூலன் மனைவி அவரை விட்டு சென்றால். திருமூலரை இவ்வுடம்பிலே இருந்து உன் நூலை இயற்றுக என சிவபெருமான் கூறியதால் அவர் ஆண்டு ஒன்றுக்கு ஒரு பாடல் என மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார்.இறுதியாக இங்கேயே முக்தி அடைந்து சமாதி கொண்டுள்ளார்.
 இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...