Tuesday, July 23, 2019

பூம்புகார் புத்த விகாரை

பூம்புகார் பௌத்த விகாரை 1965ஆம் ஆண்டு பூம்புகாரில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த விகாரையை கண்டுபிடித்துள்ளனர்.மேலும் பல பொருட்களும் தியான நிலையில் உள்ள புத்தர் சிலையும்,பெண் தெய்வ சுடுமண் உருவமும்,சுண்ணாம்பு கல்லால் ஆன புத்தர் பாதமும் கிடைத்ததுள்ளன.புத்தர் பாதம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள அமராவதி,நாகார்ஜீன கொண்டாவில் புத்த சமயக் கலைப்பொருட்களின் கலைபணியை ஒத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த விகாரை கணதாசர் எனும் பெளத்த துறவியால் கட்டப்பட்டது.மணிமேகலையும் சிலம்பும் இங்கு பௌத்த மதம் இங்கு சிறப்பு பெற்றிருந்ததை கூறுகின்றது.சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி இந்திரவிகாரை ஏழினை கண்டு வணங்கியதாக கூறுகின்றது அது தேவலோக இந்திரனால் கட்டப்பட்ட விகாரை அல்ல அசோகர் மகன் மகேந்திரன் பௌத்த மதத்தை பரப்ப இலங்கை செல்லும் போது புகாரில் தங்கியிருந்த போது ஏழு பௌத்த விகாரைகளை அவன் கட்டியதாக கூறுகின்றனர். கி.பி .நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டு தலைநகர் உறையூரில் பிறந்து வளர்ந்த புத்ததத்தன் என்பவன் இருமுறை இலங்கைக்கு சென்று பெளத்த சமய நூல்களை நன்று பயின்று பின்னர்ச் சோழ நாட்டிற்கு திரும்பி வந்து அபிதம்மாவதாரம்,விநயவிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான்.அவற்றுள் அபிதம்மாவதாரம் என்ற நூலை அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரி பூம் பட்டினத்தில் கணதாசனால் அமைக்கபட்டிருந்த பெளத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த பொழுது சுமதியென்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதி முடித்த செய்தியை அந்நூலின் இறுதியில் புத்ததத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகிறார். பூம்புகாரில் பல பெளத்த விகாரைகள் இருந்துள்ளன.பாலி மொழியில் உள்ள 'இராசவாகினி' என்னும் பெளத்த நூலில் சோழ அரசன் ஒருவன் காவிரி பூம் பட்டினத்தில் சிவப்பெருமானுக்கு கோயில் ஒன்று எடுப்பித்தான் என்றும் அக்கோயில் பணி நடைபெறும் போது சில பெளத்தத் துறவிகள் அங்கு வந்து சில அதிசயங்களை அரசனுக்கு செய்து காட்டி அச்சிவன் கோயிலை பெளத்த கோயிலாக மாற்றினர் என கூறப்பட்டுள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...