Wednesday, January 26, 2022

பிச்சன் என்று பாடச்சொன்னான்

சுந்தரமூர்த்திகளை இறைவன் தடுத்தாட்கொண்டருளிய திருவெண்ணெய்நல்லூரில் "சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகோப்பெருஞ்சிங்கத்தேவர்க்கு யாண்டு 17-ஆவது மேஷநாயற்று புர்வபக்ஷத்து சதுர்த்தசியும் புதன்கிழமையும்பெற்று அத்தத்துநாள் திருவெண்ணெய்நல்லூர் உடையார் ஆட்க்கொண்டதேவர்க்கு மத்ய்ஸ்சன் செஞ்சுடையான் உதயன் ஸ்ரீ கைலாயமுடையான் இட்ட பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சு" என்ற கல்வெட்டு காணப்படுகிறது.இதில் உதயன் கைலாயமுடையான் என்ற தலைவன் ஒருவன் திருவெண்ணெய் நல்லூர் பெருமானுக்கு வெள்ளியில் ஐம்பத்தைந்து கழஞ்சு எடையுள்ளனவாக பிச்சன் என்னை பாட சொன்னான் என்ற பெயருடைய இரண்டு திருச்சின்னங்கள் செய்து அளித்தனன் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளதுப் பிச்சன் என்னை பாட சொன்னான் என்ற தொடர், சேக்கிழாரடிகள் தடுத்தாட் கொண்ட புராணத்தில் கூறியுள்ள சுந்தரமூர்த்திகளின் ஒரு வரலாற்று நிகழ்ச்சியை உணத்துவதை காண்க.இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள காலம் கி.பி.1268,மார்ச் 28 புதன் கிழமை என பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இரா.விக்ரமன்,சிதம்பரம். நூல்:கல்வெட்டுகளும் சைவத்திருமுறைகளும். தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.

Friday, January 14, 2022

வரகுண பாண்டியன் சிவபக்தி திருவிடைமருதூர் கோயில்

வரகுண பாண்டியன் திருவிடைமருதூர் மகாலிங்க பெருமான் மீது அளவற்ற அன்பும் பக்தி யும் கொண்டிருந்தான்.இவன் கூன்பாண்டியனை விட அதிக சிவபக்தி உடையவன் இவனை நாயன்மார்களில் சேர்த்திருக்க வேண்டும். 1.ஒரு நாள் கொடிய திருடனை பிடித்து அவன் கைகளில் விலங்கு பூட்டி அவனை துன்புறுத்தி காவலர்கள் தண்டிக்க அழைத்து சென்றனர்.அந்த திருடனின் நெற்றியில் திருநீறு ஒளிர்வதை கண்ட வரகுண பாண்டியன் மனம் உருகியது நல்சொற்களை அவனுக்கு கூறி அவனை விடுதலை செய்தான். 2.ஒரு நாள் நரிகள் சத்தமாக ஊளையிட்டது.இதை காதில் கேட்ட வரகுண பாண்டியன் அவை சோமசுந்தர பெருமானையும், மகாலிங்க பெருமானையும் போற்றி பாடுகின்றன அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது எனக்கூறி வேட்டைகாரர்களை கொண்டு அவற்றிற்கு நல்லாடைகளை போர்த்தி காட்டில் விட செய்தான். 3.மழைக்காலத்தில் திருவிடைமருதூர் கோயில் குளத்தில் தவளைகள் போரொலி எழுப்பின இதை கேட்ட வரகுண பாண்டியன் அவை மகாலிங்க பெருமானை போற்றி பாடி வழிபடுகின்றன எனக்கூறி அவற்றிற்கு பரிசாக பொன்னையும், முத்தையும் குளத்தில் வாரி இரைத்தான். 4.ஒரு சமயம் கோயில் பிரகாரத்தை வரகுண பாண்டியன் வலம் வரும்போது பணியாள் ஒருவன் அங்கே குவிந்திருந்த கோயில் எள்ளை திருடி தின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து அரசர் கோயில் எள்ளை திருடி தின்பது பாவமில்லையா என கேட்டார் அவன் தப்பிக்க நினைத்து நான் உண்டு கடனை தீர்க்க வேண்டும் .இதற்கு தண்டையாக அடுத்த பிறவியில் மறுபடியும் பிறந்து மீண்டும் மீண்டும் மகாலிங்க பெருமானுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைக்கும் அல்லவா அதனால் இப்படி திருடி தின்கிறேன் என்றான்.இதை நம்பிய மன்னன் அப்படியென்றால் அதை எனக்கும் கொடு நானும் அடுத்த பிறவியில் மகாலிங்க பெருமானுக்கு மீண்டும் மீண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என அவனிடம் எச்சில் எள்ளை வாங்கி மன்னனும் சாப்பிட்டான் 5.திருவிடைமருதூர் கோயில் ஓரத்தில் ஒரு மண்டை ஓடு கிடந்தது இதை கண்ட வரகுண பாண்டியன் இறந்த பிறகும் மகாலிங்க பெருமானை பிரிய மனமில்லாமல் இங்கே வந்து கிடக்கிறது எவ்வளவு அன்பு சுவாமி மீது எனக்கூறி உன்னை போல் எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றான். 6.வரகுண பாண்டியன் திருவிடைமருதூர் பெருமானை வழிபட்டு பிரகாரத்தை வலம் வரும்போது அங்கு நாய் மலம் கிடந்தது.அதை யாரும் கவனிக்கவில்லை உடனே மன்னன் தானே அதை அப்புறப்படுத்தி இடத்தை சுத்தம் செய்தான். 7.ஒருநாள் வரகுண பாண்டியன் திருவிடைமருதூர் வீதியை வலம் வரும்போது பழுதத்த வேப்ப மரங்களை கண்டார் அவை இவன் கண்களுக்கு சிவலிங்களாக காட்சியளித்தன உடனே அம்மரங்களுக்கு அழகிய விதானம் கட்டமாறு ஆணையிட்டான். 8.சோழ மன்னன் மகள் ஒருத்தி இவனை மணக்க விரும்பினால் அவளை மணந்த வரகுண பாண்டியன் அவள் பேரழகை கண்டு சிறந்த பொருள் எல்லாம் இறைவனுக்கு சொந்தம் என நினைப்பவன்.சிறந்த பேரழகுடைய இந்த பெண்ணும் மகாலிங்க பெருமானுக்கு உரியவள் என அவளை கோயிலுக்கு அர்ப்பணித்தான். 9. வரகுண பாண்டியன் போருக்கு செல்லும் போது வீரர்கள் கவசவுடை இவன் திருநீறே எனக்கு கவசம் என உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு போருக்கு சென்றான்.அங்கு போரில் எந்த அம்பும் அவன் உடலை துளைக்கவில்லை. போரில் வெற்றி பெற்று திரும்பும்போது அவன் காலில் உடைந்த அம்பு குத்தி இரத்தம் வடிந்தது.அதற்கு மன்னன் உடலில் திருநீறு பூசியதால் அம்பு துளைக்கவில்லை ஆனால் கால் திருநீறு பூச பாக்கியம் பெறவில்லை அதனால் அம்பு பட்டு இரத்தம் வருகிறது என்றான். 10.திருவிடைமருதூர் கோயிலும் மகாலிங்க பெருமானையும் வரகுண பாண்டியனையும் பிரிக்க முடியாத இவனது சிவபக்தியை மாணிக்கவாசகர்,பட்டினாத்தார்,நம்பியாண்டார் நம்பியும் போற்றுகின்றனர். (விக்ரமன் ராமன்)

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...