Monday, February 15, 2021

மும்முடிசோழ தலைக்கோலி வைத்த நுந்தா விளக்கு.

இராஜேந்திர சோழன் காலத்தில் சிறந்த நடனமாடி நாட்டிய கலையில் சிறந்து விளங்கி தலைக்கோலி பட்டம் பெற்ற ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் நக்கன் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி உடையார் குடி அனந்தீசுவரத்து பரமசுவாமிக்கு ஒரு நுந்தா விளக்கு வைத்துள்ளாள். "ஸ்வஸ்ஸ்ரீ கோப்பரகேரி வர்மற்கு யாண்டு 11 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீவீரநாரயணசதுர்வேதி மங்கலத்து திருவனந்தீசுரத்து பரமசுவாமிக்கு ஸ்ரீஆரூர்த்தேவனார் மகள் பிரதமாதேவியாகிய மும்முடிசோழத் தலைக்கோலி வைத்த திருநொந்தா விளக்கு" (விக்ரமன்,சிதம்பரம்.)

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...