Thursday, June 7, 2018

திலகவதியார் அமைத்த நந்தவனம்.

திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.அவர் காலத்தில் இக்கோயில் சிறிய செங்கல் கோயிலாக புதர் மண்டி இருந்தது. இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்தது.திலகவதியார் இக்கோயிலை சுத்தம் செய்து சாணம் கொண்டு மெழுகி கோலம் இட்டு இக்கோயிலின் எதிரே நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு சாற்றி பூசை செய்தார். திலகவதியார் இக்கோயில் இறைவனை வேண்டி திருநாவுக்கரசற்கு சூலை நோயை ஆட்கொள்ள செய்து சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.தமிழகத்திலேயே முதன் முதலாக 'கூற்றாயினவாறு' எனத் தொடங்கும் முதல் தேவாரப் பதிகத்தை திருநாவுக்கரசு இங்கு தான் பாடினார். முதல் தேவாரப் பாடல் பெற்றத் தலமும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலாகும்.திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த திலகவதியார் நந்தவனம் சரியாக பராமரிக்க படததால் 2016இல் கோயிலின் உள்ளேயே புதிய நந்தவனம் அமைத்து அதிலிருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு பூசை செய்கின்றனர். திலகவதியார் வரலாற்றை விரிவாக காணலாம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...