Sunday, April 24, 2022

பழையாறை அரண்மனை

ஆழ்வார் பராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் பழையாற்றுக்கோயில் மாளிகையில் ஆதிபூமியில் எழுந்தருளுளி இருந்து இராஜேந்திர சோழன் 4ஆம் ஆட்சி ஆண்டில் இராஜராஜ சோழன் தமைக்கையார் குந்தவையார் திருவிசலூர் கோயிலுக்கு பழையார் அரணமனையில் இருந்து நிலம் அளித்தார் என இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன.சங்கால சோழர்களுக்கு பின் வந்த சோழர்கள் பலகாலமாக இங்கே வசித்து வந்ததாலோ இந்த பழையார் நகரை ஆதிபூமி என இக்கல்வெட்டு குறிப்பிட்டு இருக்கலாம். விக்ரமன் ராமன்.

Monday, April 11, 2022

சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்

சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம். சோழர் காலத்தில் ஆடவல்லான் சிற்பம் சிறியதாகவே வடித்தனர்.அவை பராந்தக சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள ஆடவல்லான் சிற்பம் பாண்டிய நாட்டு சிற்பி ஒருவனால் எடுக்கப்பட்டது.சோழநாட்டு சிற்பியால் பராந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்ட திருவாவடுதுறை கோயிலில் தட்சிணாமூர்த்தி மேல் தோரணத்தில் உள்ள ஆடவல்லான் சிற்பமும் சோழர் ஆட்சியில் முதல் ஆடவல்லான் சிற்பங்களாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆடல்வல்லான் செப்பு திருமேனிகள் பல இந்த சிற்பங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டன. பராந்தக சோழன்,செம்பியன் மாதேவி,இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் காலங்களில் எடுக்கப்பட்ட ஆடவல்லான் செப்பு திருமேனிகள் கண்களை கவரும் கொள்கை அழகு திருமேனிகள். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...