தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு தெற்கே கெளடவ தேசத்தில் ஆட்சி செய்த மனு என்ற அரசனுக்கு இரண்டு மனைவியர் மூத்த மனைவிக்கு ஒரு மகன் இளையவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மனைவியின் மகன் சிங்கத்தை போல தோற்றம் கொண்டதால் சிம்மவர்மன் என அழைக்கப்பட்டான். தன் உடல் பிணி நீங்க சிவ தல யாத்திரை செல்ல வேண்டும் என்றும் தன் தம்பிகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும் தந்தையிடம் கூறி விட்டு. ஒரு வேடனை துணையாக கொண்டு காஞ்சிபுரம் கோவில்களை வணங்கி பின்பு தில்லையை அடைந்தான்.அந்த வேடன் இவனை தில்லை எல்லை வரை விட்டு திரும்பி சென்றான். புலிக்கால் முனிவரை வணங்கி தன் உடல் பிணி பற்றி கூறினான். புலிக்கால் முனிவர் சிவகங்கை குளத்தில் மூழ்க செய்தார் அப்போது சிம்மவர்மன் குளத்திலிருந்து பொன்னிரமாக எழுந்தான்.பின்பு இரணிய வர்மன் என பெயர் பெற்றான்.பின்பு கூத்த பெருமானையும் மூலட்டானேஸ்வரரை வணங்கி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் பணிவிடை செய்து வந்தான்.புலிக்கால் முனிவர் தன் மகன் உமயன்பு போல இரணிய வர்மனை அரவணைத்தார். இரண்யவர்மன் தந்தை இறக்கும் போது தன் மூத்த பிள்ளை அராட்சி செய்ய வேண்டும் என வசிட்ட முனிவரிடம் கூறிவிட்டு இறந்தான்.சில ஆண்டுகளுக்கு பிறகு வசிட்ட முனிவர் இரண்யனிடம் உன் தந்தை இறந்து விட்டார் எனவும் அரசாட்சியை ஏற்க அழைத்தார்.அவன் மனம் கலங்கினான்.ஆனால் தில்லை விட்டு செல்ல மனமில்லாமல் புலிக்கால் முனிவர் சொல்படி கெளடவ தேசம் சென்று அங்கு பொன்னும் பொருளும் ,யானை படை குதிரை படை அனைத்தும் எடுத்து வரும் வழியில் வேள்விக்கு சென்ற தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் அழைத்து வந்து தில்லையில் திருப்பணி செய்து சிற்றம்பலத்தை முதலில் பொன் வேய்ந்தான்.இவன் தில்லையில் கொற்றவன்குடியிலும் திருவேட்களத்திலும் இருந்து ஆட்சி செய்தான்.புலிக்கால் முனிவர் இவனுக்கு முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து ஆத்தி மாலை சூடி சோழ மன்னாக ஆக்கினார்.ஆனால் இவனை பல்லவன் என்று கூறுகின்றனர்.இவன் கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஆவான்.இரணிய வர்மன் இறுதியாக தன் மகனை தில்லையில் ஆட்சியில் அமர்த்தி காஞ்சிபுரம் சென்றான் எனக்கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment