Monday, March 30, 2020

மணவிற் கூத்தன் காலிங்கராயன் சமூகப்பணி

முதல் குலோத்துங்க சோழன்,விக்கிரம சோழன்,இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலங்களில் படைத்தலைவராய் விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் தில்லையிலும், திருவதிகையிலும் செய்த பெரும் திருப்பணி ஒன்ற,இரண்டா என எண்ணி கூற முடியாது தில்லையில்  திருக்காமக்கோட்டம் எனும் சிவகாமி அம்மன் கோயிலில் திருப்பணி செய்து இந்த அம்மன் சன்னதியில் தினமும் தில்லை வாழ் குழந்தைகள் அனைவருக்கும் எண்ணெய்யும் பாலூம் வழங்கிட ஏற்பாடு செய்தான்.
நடராஜர் கோயில் அவனது கல்வெட்டு வெண்பா
'செல்வி (திருத்தறங்க டென்)னகரித் தில்லைக்கே நல்லமகப் பாலெண்ணெய் நாடோறுஞ்-செல்லத்தான் கண்டா னரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெலாம் கொண்டானந் தொண்டையர் கோன்' என குறிக்கப்பட்டுள்ளது.
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் பிற்கால சோழர் வரலாறு.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, March 26, 2020

திருவெண்காடு பிச்சதேவர்

முதல் இராஜாதிராஜனின் முப்பதாவது ஆண்டு ஆட்சியில் கி.பி.1048 இல் அமலன் செய்யவாயார் என்பவன் திருவெண்காடு கோயிலில் பிச்சதேவர் திருமேனியை எழுந்தருளவித்து பொன் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை பிச்சதேவர்க்கு அளித்துள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, March 14, 2020

முதல் வரகுண பாண்டியன் இடவை அரண்மனை

திருவிடைமருதூரும் முதல் வரகுண பாண்டியனும்.
முதல் வரகுண பாண்டியன்  ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட  குதிரையில் வரும்பொழுது தெரியாமல் ஒரு பிராமணரை குதிரை மிதித்து கொன்று விட்டதால் அவனுக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்து கொண்டது என்றும் அவன் மதுரை சொக்கநாதரை வேண்டினான் இறைவன் கனவில் வந்து திருவிடைமருதூரில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.அவன் திருவிடைமருதூர் வந்தவுடன் அவன் கோயில் உள்ளே செல்ல பிரமஹத்தி வாசலிலே நின்று விட்டது. தீர்த்தங்களில் மூழ்கி இறைவன் இறைவியை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றான்.அவன் வந்த வழியே செல்லாமல் மேற்கு வாயில் வழியே சென்றான்.அந்த பிரம்ஹத்தி இவன் வெளியே வருவான் பிடித்து விடலாம்னு அங்கேயே உட்கார்ந்து இருக்கிறதாம்.இது புராண வரலாறு. முதல் வரகுணப்பாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து வெற்றிக் கொண்டு தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். இவன் சிறந்த சிவபக்தன் திருவிடைமருதூர் பெருமான் மீது அன்பு கொண்டு  இடவை நகரில் ஒரு அரண்மனை அமைத்து அங்கிருந்து  தினமும் வந்து மகாலிங்க பெருமானை வழிபட்டு திருப்பணி செய்துள்ளான். இவனை மாணிக்கவாசகர் தம் சிற்றம்பலம்க் கோவையில் பாராட்டியுள்ளார். பட்டினாத்தரும் தம் மும்மணிக் கோவையில் இவனை பராட்டியுள்ளார். நம்பியாண்டார் நம்பியும் தம் கோயிற்றருப்பண்ணியர் விருத்தத்தில் பராட்டியுள்ளார்.இவன் சோழநாட்டில் பல கோயில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளான்.இரண்டாம் வரகுணப்பாண்டியன் சோழநாட்டில் தன் பாட்டன் முதல் வரகுணப் பாண்டியன் இடவை நகரில் கட்டிய அரண்மனை இருந்த காரணத்தினால் இடவை நகரையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் முதலில் கைப்பற்றினான் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

Saturday, March 7, 2020

கிள்ளை மண்டபம்

முதல் குலோத்துங்க சோழன்,விக்கிரம சோழன்,இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய மன்னர்களின் காலங்களில் படைத்தலைவராய் விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் எனும் நரலோக வீரன் தில்லையில் பெரும் திருப்பணி செய்து தில்லையிலிருந்து கிள்ளைக்கு  ஒரு பெருவழி அமைத்து கிள்ளையில் நடராஜ பெருமான் சிவகாமி அம்மன் மாசித் திங்கள் கடலாடி வீற்றிருக்க ஒரு மண்டபம் கட்டினான்.மூலவரான நடராஜர் சிவகாமியே கிள்ளைக்கு தீர்த்தவாரிக்கு சென்றனர் பின்பு பாதுகாப்பு இல்லமையால் சிலவருடங்கள் முன்பு நின்று விட்டது.தற்போது வேறு திருமேனிகள் எடுத்து செல்கிறார்கள்.நடராஜர் கோயிலில் உள்ள மணவிற் கூத்தன் காலிங்கராயன் கல்வெட்டு வெண்பாவில்
'மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் பேசற் றவற்றைப் பெருவழியும்-ஈசற்குத் தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும் மன்புலியா ணைநடக்க வைத்து' என அவன் மண்டபம் பெருவழி அமைத்ததை கூறுகின்றது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

  

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...