Friday, July 26, 2019

கரிகாலக்கரை

முதல் கரிகால் சோழன் காவிரிக்கு கரையெடுத்தான். காவிரியின் நீர்ப்பெருக்கை வேறு ஆறுகள் மூலம் போக்க மண்ணி,கொள்ளிடம், கடுவாய்,வெண்ணி போன்ற ஆறுகளை வெட்டினான். ஆதித்த சோழன்,பராந்த சோழன் காலங்களில் அல்லூர்,வடகுடி, திருநெய்த்தானம், திருப்பழனம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் காவிரிக்கரையை கரிகாலக்கரை என்று குறிப்பிடுகிறது. காவிரி வடகரையை கரிகாலக் கரையென்று அப்போது மக்களால் அழைக்கப்பட்டது. இவன் பிறகு முதல் இராஜேந்திர சோழன் மகன் வீரராஜேந்திரன் கரிகாலன் என பெயர் பெற்றவன் 1068 ஆம் ஆண்டு காவிரிக்கு கரையெடுத்தான் என சதாசிவப்பண்டராத்தார் கூறுகிறார்.இவன் சகோதரன் இரண்டாம் இராஜேந்திர சோழன் இவனுக்கு கரிகால சோழன் எனும் பட்டம் வழங்கினான் என்கிறார். மேலூம் வீரராஜேந்திரன் ஸ்ரீரங்கத்திலிருந்து 10 மைல் தொலைவிலும் கோவிலாடிக்கு அண்மையில் ஒரு பேரணையை கட்டினான் என்றும் ஆங்கிலேயர்கள் இந்த அணையின் வலிமையை கண்டு வியந்து இதை அப்படியே வைத்து இதன் மீது புதிய பாலத்தை கட்டினார்கள் என பண்டாரத்தார் கூறுகிறார்.வீரராஜேந்திரன் கட்டிய இந்த அணையினால் தஞ்சை பகுதி முழுவதும் நீர்வளம் பெற்று நெல்விளைவும் பெறுகியது என்கிறார். அப்படியென்றால் இந்த கல்லணையை கட்டிய கரிகால சோழன் இந்த வீரராஜேந்திரன் சோழனாகலாம். திருவாவடுதுறை கோயிலில் உள்ள கல்வெட்டு
'கோப்பரகேசரிபன்மரான உடையார் காவிரி கரை கண்ட கரிகால சோழ தேவர்'குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...