Friday, July 12, 2019

கண்ணகி சமாதி கொடுங்கலூர் பகவதி கோயில் ரகசிய அறை(secret chamber)

சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேல் குன்றத்தில் கண்ணகி கோயில் கட்டியது போலவே கொடுங்கலூரிலும் சிவன் கோயில் ஒட்டி கண்ணகி கோவில் கட்டினான்.அது பின்பு பகவதி காளி கோயிலாக மாற்றம் அடைந்தது. கண்ணகியை காளியாக வழிபடுகிறார்கள். இந்த காளி கருவறை கிழக்கில் உள்ள  நான்கு புறமும் கருங்கல் சுவர் உள்ள அறையே ரகசிய அறை அங்கிருந்து நிலத்தடியில் செல்லும் பாதை 300 அடி தொலைவில் வெளியே வருகிறதாம்.இந்த அறையில் தான் சேரன் செங்குட்டுவன் வஞ்சியில் குன்ற குறவர்களிடமிருந்து பெற்ற கண்ணகி உடலை அடக்கம் செய்தான் என்றும் அல்லது கண்ணகியை வஞ்சியில் எரித்து அவள் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்தும் மற்றும் அவளது புடவை நகை சிலம்பு ஆகியவற்றை அங்கு வைத்துள்ளான் என கூறுகின்றனர். மேலும் அவள் சிலையையும் அங்கு வைத்து இருக்கிறானாம்.இக்கோயில் முன்பு சமணர்களிடம் இருந்து பின்பு பிராமணர் வசம் வந்ததாம்.இந்த அறை  ஆடி அமாவாசை அன்று அந்த அறைக்கு பூசை செய்கின்றனர்.அன்று தான் கண்ணகி மதுரையை எரித்த நாள்.அன்று காளியின் இடது மார்பில் மஞ்சள் பூசுவர்.பரணி காவுதீண்டல் விழாவில் பொற்கொல்லர்கள் நகைகளை இந்த கோயிலில் வீசுவார்களாம்.இந்த அறைக்கு மக்கள் அனுமதி கிடையாது.கொடுங்கலூர் குறுநில மன்னர் படிஞாத்தெடத்து சொவரூவம் குடும்பத்தினர் மட்டும் அந்த அறை மேல் சுவர் வரை தரிக்க அனுமதி.அந்த மன்னர் பரம்பரையில் வந்த வரலாற்று ஆய்வாளர் இந்துசூடன் அவர்கள் இந்த ரகசிய அறையை பற்றி உலகிற்கு முதலில் கூறினார் அதை நூலாக கொடுங்கலூர் தேவஸ்தானத்தில் வெளியிட்டார்.இந்த அறைக்கு பிராமணர் பூஜை செய்வது கிடையாது அடிகள் என்பவர்கள் தான் பூஜை செய்வார்கள் அவர்கள் இளங்கோவடிகள் வழிவந்தவர் என்கின்றனர்.இவர்கள் வீடுகள் அந்த ரகசிய அறையின் நிலத்தின் வெளியே வரும் கதவின் வழியே அமைந்துள்ளன. இக்கோயிலில் 12அடி உயரம் உள்ள சேத்திரபாலர் செங்குட்டுவன் பூம்புகாரிலிருந்து கொண்டு வந்த சதுக்க பூதமாம்.மேலும் பூம்புகாரில் நஞ்சு உண்டவரையும்,பாம்பு கடித்தோரை காப்பாற்றும் நெடுங்கல் மன்றத்தில் இருந்த நெடுங்கல்லை எடுத்து சோட்டானிகரை பகவதி சிலை செய்தான் எனவும் கூறுகின்றனர்.நான் கூறுவது என்னவென்றால் சேரன் செங்குட்டுவன் பூம்புகாரில் கண்ணகி வீட்டில் அவள் பயன்படுத்திய புடவை நகைகள் பொருட்கள் மதுரையில் உடைந்த சிலம்புகள் ஆகியவற்றை சேகரித்து எடுத்து சென்று இந்த அறையில் வைத்திருக்கலாம் அல்லது கண்ணகி உடலுடனோ அல்லது சாம்பலுடனோ அவற்றை புதைத்திருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அந்த ரகசிய அறையில் கண்ணகி சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளன.வஞ்சி நெடுவேல் குன்றத்தில் கண்ணகியை அழைத்து செல்ல கோவலன்  விமானத்தில் வரும்போது கண்ணகி அவள் உடலை விட்டு தெய்வ வடிவில் செல்கிறாள்.குன்றக் குறவர் கண்களுக்கு இறந்த கோவலன் தெய்வ வடிவம்  தெரியும் போது கண்ணகி தெய்வ வடிவம் தெரியாமல் இருக்குமா. கோவலன் மதுரையில் வெட்டுன்று கிடக்கும் போது கண்ணகி அவனை தழுவி அழுகிறாள்.(பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்) அப்போது கோவலன் பழுது ஒழிந்து எழுந்தான் அவன் தன் உடலை விட்டு  எழுந்து நின்று கண்ணகியின் கண்ணீரை துடைத்து கவலைபடாதே நீ இங்கேயே இரு என்று அமரர்களுடன் வானுலகம் சென்றான்.கண்ணகியும் பதிநான்கு நாட்கள் அலைந்து திரிந்து தான் உடலை வறுத்தி இறுதியாக வஞ்சி நெடுவேல் குன்றத்தில் நின்று  கோவலன் வந்தவுடன் தனது பழுது(உடல்) நீக்கி தெய்வ உருவில் கோவலனுடன் வானுலகம் சென்றாள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...