Sunday, October 28, 2018

இராஜசிம்ம பல்லவன் வான் ஒலி கேட்ட வரலாறு

மன்னர்களின் மெய்கீர்த்தி கோயிளுக்கு நிலம் தானம் போர் வெற்றிகள் ஆகியவற்றை கல்வெட்டு குறிப்புகளை குறித்துள்ளார்கள் ஒரு அதிசய நிகழ்வை கல்வெட்டில் குறிப்பிட்டவன் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். கைலாயத்தை அளவெடுத்தது போல் தமிழ்நாட்டில் முதலில் கருங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி பெருங்கோயிலை காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை சிவப்பெருமானுக்கு எடுப்பித்தான். அவற்றின் குடமுழுக்கு தேதியை முடிவு செய்தான் ஆனால் அன்று வானத்தில் ஒர் ஒலி கேட்டது அது சிவபெருமான் தான் மன்னனை நோக்கி மகனே நீ எனக்காக கட்டிய கோயிலின் குடமுழுக்கு அன்று நான் வரஇயலாது ஏனென்றால் திருநின்றவூரில் பூசலார் எனும் பக்தன் எனக்காக கோயில் கட்டி அன்று குடமுழுக்கு செய்யயுள்ளான்  அங்கு நான் செல்ல வேண்டியுள்ளதால் நீ கட்டிய கோயிலின் குடமுழுக்கு நாளை வேறொரு நாள் மாற்றி வைத்துக்கொள் அன்று யாம் வருவோம் வாழ்க எனக்கூறி அந்த ஒலி மறைந்தது.ஆனால் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் ஏழ்மையானவர் சிவபெருமானுக்கு கோயில் கட்ட வேண்டும் என ஆசை கொண்டார் அதற்கு தேவையான பொருள் இல்லமையால் தனது மனதிலே கோபுரம் குளம் ஆகிவற்றுடன் பெருங்கோயிலை கட்டி குடமுழுக்கு நாள் குறித்தார்.மன்னன் இறைவன் மனம்குளிர பெரியதிருக்கோயிலை அமைத்த பூசலாரை  காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு இருந்தவர்களை நோக்கி பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது என்று கேட்டார்.அதுகேட்ட நின்றவூர் மக்கள் பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை என்றனர் மன்னன் பூசலார்
யார் எனக் கேட்டறிந்து அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி தாங்கள் அமைத்த திருக்கோயில் யாது அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் என்னிடம் கூறினார்.தாங்களை பணிந்து அறிய வந்தேன் என்றார். பூசலார் அரசன் கூறக்கேட்டு அதிர்ந்து இறைவன் என்னையும் தனது பக்தனாக அருள்செய்தாராயின் தான் கட்டிய கோயிலின் பெருமை எத்தகையது என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தில் கட்டிய திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். மன்னன் அதிசயித்துப் பூசலாரை  தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.மற்றொரு நாளில் மன்னன் குடமுழுக்கு நடத்தினான். கைலாசநாதர் கோயிலில் வடமொழி கல்வெட்டு ஒன்றில் கலியுகத்தில் அசரீரி(வானில் ஒலி) கேட்டவன்  ராஜசிம்மன் என குறிப்பிடுகிறது. ஆனால் சேக்கிழார் பெரியபுராணத்தில்
சிவபெருமான் மன்னன் கனவில் கூறியதாக கூறுகின்றார்.
கல்வெட்டு:
துஷ்யந்த் ப்ரமுகையி ஹிருதாம்பரகதா  வாணி ஸரீரம்விநா
கிஸ்மாநாதய்யி ஸீரத்ருஷ்வ பிர், யதி, க்ருதே கண்வாதிபி ஸ்விஹ்ருதை:
தந்நாஸ்சர்யம் இதம்புந: கலியுகே தூரிபவத் ஸத்குணே
சோஷ்ஸ்ரோஷீத் இதிதம் கிரம்மஹத் தாஹோ
 விஸ்மாபனம் ஸ்ரீபர:
இவற்றின் பொருள்:  கிருத யுகத்தில், துஷ்யந்தன் போன்ற அரசர்களும் கண்வர்போன்ற முனிவர்களும் அசரீரி கேட்டார்கள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், என்ன ஆச்சரியம் ! நன்மைகள் எல்லாம் குறைந்துள்ள இந்தக் கலியுகத்தில் ஸ்ரீபரன் என்ற பெயரை உடைய ராஜசிம்மன் அசரீரி கேட்டது வியப்பிலும் வியப்பே. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, October 27, 2018

பூம்புகார் தெய்வம் சம்பாபதி அம்மன்

பண்டையக்காலத்தில் சோழர்களின் தலைநகர் உறையூரும் துறைமுகம் காவிரி பூம் பட்டினமும் விளங்கியது.இங்குள்ள சம்பபாதி அம்மன் கோயிலில் சங்ககால சுதை சிற்பங்களும் செங்கல் கோயிலும் உள்ளது.  மணிமேகலையில் வரும் குச்சரக் குடிகை இதுவேயாகும்.இக்கோயிலில் தான்  மணிமேகலை உதயகுமாரனுக்கு பயந்து ஒளிந்து கொண்டாள்.அனைவருக்கும் முக்காலத்தை கூறும் கந்திற்பாவை என்னும் தெய்வம் மணிமேகலைக்கு எதிர்காலத்தை கூறியது.அத்தெய்வம் இக்கோவிலில் ஒரு தூணில் இருந்ததாக மணி மேகலை குறிப்பிடுகிறது.இக்கோயிலின் பின்புறம் சக்கரவாளக் கோட்டம் எனும் சுடுகாடு இருந்தது.இங்குள்ள சுதை சிற்பம் சதுக்க பூதங்களாகும்.சாய்க்காடு என்பதும் இவ்வூரின் பழைய பெயராகும்.                                  சம்பாபதி அம்மன் வரலாறு: பரதகண்டத்தை உள்ளடக்கிய நாவலந் தீவைக் காக்கும் தெய்வமாய் மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் இந்நிலத்தார்க்கு(பூம்புகார் ) ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் தவம் செய்தமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர் உண்டாயிற்று.சூரிய குலத்தில் தோன்றிய காந்தன் என்ற மன்னன் தம் நாட்டிற்கு தண்ணீர் வேண்டும் என்ற பெரு வேட்கையால் வேண்டினான் எனவும் அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் குடமலையில் அகத்தியர் தம் கையிலுள்ள கமண்டல நீரைக் கவிழ்த்தமையால் நேர் கிழக்கே ஓடிவந்த காவிரியாறு இந்நகரத்தின் கடலோடு கலந்து தோன்றியது.இவ்வூரில் தவம் செய்த சம்பாபதி தெய்வம் காவிரியை மகிழ்ச்சியுடன் வரவேற்று தன் மடிமீது அமர்த்திக் கொண்டு "படைப்புக் காலத்தே சம்பாபதி என என் பெயரால் அமைந்த இம்மூதுரை நின் பெயரால் வழங்கச் செய்தேன் நீ நீடுவாழ்க"என வாழ்த்தியது.சம்பபாதி என்ற ஊர் காவிரி பூம் பட்டினம் ஆனது.இந்த காவிரியின் வடக்கும் தெற்கும் அமைந்த பகுதிகளே பூம்புகார் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
இரா.விக்ரமன், சிதம்பரம்.







சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...