Thursday, July 18, 2019

தஞ்சை ஆடல்வல்லான்.

இராஜராஜ சோழன் தஞ்சை பெருங்கோயிலை கட்டி அக்கோயிலுக்கு பல திருமேனிகளை அளித்தான்.அவற்றில் ஒன்று தான் இந்த ஆடவல்லான் எனும் நடராஜர் திருமேனியும் பிராட்டியர் எனும் சிவகாம சுந்தரி திருமேனியும் ஆகும்.சோழமாதேவி அளித்த ஆடவல்லான் திருமேனி கல்வெட்டில் அது பற்றிய முழு குறிப்பு உள்ளது. ஆனால் அத்திருமேனி தற்போது அங்கு இல்லை.ஆனால் இராஜராஜ சோழன் அளித்த ஆடவல்லான் திருமேனி தற்போது வழிபாட்டில் உள்ள நடராஜர் திருமேனியாகும்.கி.பி.1010ஆம் ஆண்டு இந்த ஆடவல்லான் திருமேனியை பெரிய கோயிலுக்கு ராஜராஜன் அளித்தான்.இந்த திருமேனியின் பீடமும் பிரபையின் ஒரு பகுதியும், முயலகனின் மீது ஊன்றிய காலின் ஒரு சிறு பகுதியும் கி.பி 1885 ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டதாகப் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த சிலையானது இக்கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் வணங்கும் கூத்தபிரான் ஓவியத்தை ஒத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த திருமேனியை கரூர்த்தேவர் உடனிருந்து வார்ப்பித்தார் எனவும் கூறுகின்றனர்.இந்த கூத்தபிரானின் சிறப்பு பெயரான ஆடவல்லானை இராஜராஜ சோழன் தன் காலத்தில் மரக்கால்,நிறைகல், துலாக் கோல்களுக்கும் வழங்கியுள்ளான். இராஜராஜ சோழனுக்கு இந்த ஆடவல்லான் மீது அவளவற்ற பக்தியும்,பாசமும், மரியாதையும் இருந்தது என்பதை நாம் அறியமுடிகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...