Tuesday, September 25, 2018

திருவதிகை ஸ்ரீ ரங்கநாதர் கோயில்.










ஸ்ரீரங்கத்தை ஆட்சி செய்த மன்னன் ஒருவனுக்கு மகள் ஒருவள் இருந்தாள். அவள் ஸ்ரீரங்கநாதப் பெருமாளிடம் அளவிலா பக்தியுடையவளாக இருந்தாள்.காலையும் மாலையும் ஸ்ரீரங்கநாதப்பெருமாள் சன்னதிக்கு சென்று தரிசித்து வருவது அவளின் வழக்கமாக இருந்தது.அவளுக்கு திருமண ஏற்பாடுகளை அவள் தந்தையாகிய மன்னன் செய்தான் ஆனால் இளவரசியோ திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லாத வளாய் இருந்தாள்.திருவதிகை கெடில நதியின் தென்கரையில் அன்று அரசாண்ட குறும்ப மன்னன் ஒருவன் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபடுவது வழக்கம் அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்க மன்னனின் மகளை கண்டு காதல் கொண்டு திருமணம் செய்ய எண்ணி அவளது தந்தையிடம் தன் விருபத்தை கூறுகிறான் அவரும் சம்மதம் தெரிவித்து திருமணத்தைப் பற்றி பேச தொடங்கினார்கள் அப்போது இளவரசி தனக்கு திருமணம் தேவையில்லை என மறுத்து விட்டாள்.அவளிடம் தகுந்த காரணம் கேட்கப்பட்டது. ஸ்ரீரங்கநாதப் பெருமாளை விட்டுப்பிரிய மனமில்லையென்றும் திருமணம் செய்து வேற்றிடம் சென்றுவிட்டால் ரங்கநாதரை எப்படி வழிபட முடியும் என ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு  செய்திருப்பதாக கூறினாள்.குறும்ப மன்னன் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டு ஒரு முடியுக்கே வந்து விட்டான். ஸ்ரீரங்கநாதரை போல சிலை ஒன்று வடித்து தானொரு கோயிலை திருவதிகையில் எழுப்புவதென முடிவு செய்து அவர்களிடமும் கூறிவிட்டு திருவதிகை வந்து விரைவாக ஆலயத்தை கட்டி முடித்தான். ஸ்ரீரங்க மன்னன் மகிழ்ந்தான்.மங்கையும் மகிழ்ந்தாள். திருமணமும் நடைபெற்றது.அவள் திருவதிகை ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வழிபட்டு பேறு பெற்றாள். குறும்ப மன்னன் கோட்டை  கெடில நதியின் தென்கரையில் இருந்தது இக்கோயில் வடகரையில் இருந்தது.கோட்டையிலிருந்து ராணி கோயிலுக்கு செல்வதற்கு சுரங்கம் ஒன்று அமைந்திருந்தான்.இப்போது குறும்பன் கோட்டை முற்றிலும் அழிந்து மண்மேடாக காட்சி அளிக்கின்றது.
இறைவன்:அரங்க நாதன்.
இறைவி:அரங்க நாயகி.
ஆண்டாள் சன்னதி மற்றும் கோதண்டராமர் சன்னதி உள்ளது.
இங்கு விக்கிரமன சோழன் கல்வெட்டு இருந்து மறைந்துள்ளது.பின்பு செட்டியார்கள் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்துள்ளனர்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...