திருவக்கரை சந்திரமெளலீசுரர் கோயில்
முதல் ஆதித்த சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலாகும்.
இராஜராஜ சோழன் 16 ஆம் ஆட்சியில் செம்பியன்மாதேவியின் வாழ்நாளின் இறுதியாண்டுடில் கி.பி.1001 இல் அவரால் எடுக்கப்பட்ட சந்திரமவுலீசுவரர் திருக்கோயிலாகும்.
"கோராஜராஜகேஸரி வந்மற்கு யாண்டு யக்ஷ ஆவது ஸ்ரீகண்டராதித்த தெவர் நம்பிராட்டியார் ஸ்ரீ உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதெவியார் எடுப்பித்தளுளின ஸ்ரீ திருவக்கரை கற்றளி சிவலொகம்" என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த செம்பியன் மாதேவியார் வாழ்நாள் முழுவதும் சிவதொண்டு செய்து இறுதியாக கைலாயம் சென்று விட்டார்.அதனாலோ இக்கோயிக்கு சிவலோகம் பெயரிட்டிருப்பார் என கருத வேண்டியுள்ளது.இக்கோயிலுக்கு பல நிவந்தம் அளித்துள்ளார்.இங்கு ஆதித்த சோழன், இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன்,முதல் குலோத்துங்க சோழன்,விக்கிர சோழன்,இரண்டாம் இராஜதிராஜன்,மூன்றாம் குலோத்துங்க சோழன், கோப்பெருஞ்சிங்கன்,மாறவர்மன் விக்கிரம பாண்டியன்,சாளுவ நரசிங்க தேவன்,கிருஷ்ணதேவ ராயர் ஆகியோர் காலங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.அவை விளக்குகள் தானம்,விளக்கெரிக்க பசுக்கள்,சாவாமூவா பேராடுகள் மற்றும் நிலங்களை தானம் வழங்கியதை கூறுகிறது.இரண்டாம் இராஜராதிராஜன் ஆட்சியில் இவன் படைத்யலைவன் அம்மை அப்பன் பாண்டியநாடு கொண்ட கண்டர் சூரியன் சம்புவராயன் தன் பெயரில் கண்டர் சூரியன் எனும் கோபுரம் எடுப்பித்தான்.மேலும் இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிலும் படைத்தலைவாக இருந்து கண்டர் சூரியன் திருமண்டபம் என தன் பெயரில் ஒரு ஆயிரங்கால் மண்டபத்தை எடுபித்தான்.பெரிய குத்துவிளக்கு ஒன்றை இக்கோயிலுக்கு அளித்துள்ளான்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன் மனைவி உலகமுழுதுடையார் ஒரு மண்டபம் எடுத்துள்ளார்."ஸ்வஸ்ரீ பெருமான் விக்கிரம பாண்டிய தெவர் நம்பிராட்டியார் உலகமுழுதுடையார் செய்வித்த மண்டபம்" இக்கோயிலில் கங்கை கொண்ட பெரியான் வன்னிகுமாரன் என்பவன் ஸ்ரீபலி தேவர் எனும் திருமேனியை எழுந்தருளவித்துள்ளான்.ஆடவல்லான் பெரியான் என்பன் ஒரு கெண்டி அளித்துள்ளான்.15 ஆம் நூற்றாண்டில் செஞ்சொற் தெவரசயன் கம்பக்களிற்றண்ணலிதூர் செம்மந்தை காங்கெயனன் என்பவன் கோபுரமும் மண்டபமும் எடுத்துள்ளான்.மேலும் கச்சிச் சின்னன் துணைவளரசன் குமரானற் செவ்வந்தனன் மண்டமும் கோபுரமும் எடுத்துள்ளான். கல்வெட்டுகளில் இறைவன் திருவக்கரை ஆளுடையார் என அழைக்கப்படுகிறார். இறைவன்:சந்திரமவுலீசுவரர். இறைவி:வடிவாம்பிகை,வக்கிரக்காளி அம்மன் சன்னதியும் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
திருவக்கரை வரதராஜ பெருமாள் கோயில்.
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் சிறிய கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலாகும்.கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கொச்செங்கண்ணனால் எடுக்கப்பட்ட செங்கல் கோயிலாகும்.இதை அதிராஜேந்திரன் 2ஆம் ஆண்டு ஆட்சியில் உடையார் அதிராஜேந்திர தேவர்ற்கு ராஜேந்திர சோழவளநாட்டு பனையூர் நாட்டு பொய்யாக்கம் குடிப்பள்ளி குமாரி செந்தனான ஜயகொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வன் என்பவன் இக்கோயிலை கற்றளியாக எடுத்துள்ளான். இங்கு முதல் குலோத்துங்க சோழன் ஆட்சியில் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளனர்.அவனது மெய்க்கீர்த்தியும் உள்ளது.விக்கிரம சோழன் ஆட்சியில் நுந்தாவிளக்கும், சந்திவிளக்கெரிக்க 12 ஆடுகளை குலக்கிழவன் ஆட்டரையன் திருநாடுடையவன் என்பவன் கொடுத்துள்ளான்.கல்வெட்டுகளில் இக்கோயில் பெருமாள் திருவக்கரை ஆழ்வார் என அழைக்கபடுகிறார். இவையனைத்தும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிலிருந்து நானே தொகுத்து எழுதியுள்ளேன்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.