Saturday, April 29, 2023

தளவாய்புரம் செப்பேடுகள்

பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகும்.ஏழு செப்பேடுகளை கொண்ட சாசனம் இது பராந்தக வீரநாரயணன் ஆறாம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது.இதன் முத்திரையில் புலி இரண்டு மீன்கள் கீழே வில்லும் இவற்றை சுற்றி கிரந்த எழுத்தில் சுலோகம் எழுதப்பட்டுள்ளது.இந்த செப்பேட்டின் எழுத்துக்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது.தமிழ் பகுதி வட்டெழுத்திலும் சமஸ்கிருத பகுதி கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இச்செப்பேட்டை படியெடுத்து புகைபடமும் எடுத்துள்ளார்.இச்சானத்தை அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தமது சாசன செய்யுள் மஞ்சரி நூலின் மூலம் முதன் முதலில் வெளியிட்டார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...