திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் தெரு அழகு என்று கூறுவார்கள்.இராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன் மாதேவியார் திருவிடைமருதூர் பெருமானை வழிபட வந்தபோது திருவிடைமருதூர் பெரிய நகரமாக இருந்ததுள்ளது. "திருஇடைமருதுடையார் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றாலுடையாரும் தேவகன்மிகளும் சபையும் திருவிடைமருதில் நகரமும் இருந்து நம்பிராட்டியார் ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் ஆழ்வார்த் திருவடி தொழவந்தருளினார்" இங்கு வந்தபோது தான் காவிரியின் தென்கரையில் செம்பியன் மாதேவி பெருஞ்செண்பக நந்தவனம் என்ற நந்தவனத்திற்கு சென்று பஞ்சவன் மாதேவியார் பார்வையிட்டார். "தஞ்சாவூர்க் கோதண்டராமவெளத்து ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் பெண்டாட்டி வாணகொவரையன்" என்பவன் இக்கோயில் உமா பட்டராகிக்கு இரண்டு வரிசை கற்கள் பதிக்கப்பட்ட தங்க தாலியும் முத்துகளால் ஆன மாலையும் அளித்துள்ளான். தஞ்சாவூர் அரண்மனையில் கோதண்டராமவெளத்து பகுதியில் பஞ்சவன் மாாாததேவி பெண்டாட்டி(சமையல் செய்பவன்)என்பவன் பெண்களை போல சமையல் செய்பவன் அதனால் பெண்டாட்டி என அழைக்கப்படுகிறான். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Saturday, June 27, 2020
Saturday, June 20, 2020
அருண்மொழி வர்மன் எனும் இராஜராஜ சோழன் பிறப்பு
இரண்டாம் பரந்தகனாகிய சுந்தர சோழனுக்கு அருண்மொழி வர்மன் மகனாக பிறந்தான்.அழகான கைகளையும் ஒளிமையான உடம்பும் கைகளில் சங்கு,சக்கர குறிகளோடு திருமாலே அவதாரம் எடுத்தது போல் பிறந்தான்.இவன் பிறந்தபோது தன் கணவர்க்கு இனி நிலச்சுமை குறைந்து விடும் எனும் மகிழ்ச்சியினால் ஆதி சேடனுடைய மனைவியர் நடனம் ஆடினர். என திருவாலாங்காட்டு செப்பேடு கூறுகிறது.ஏனென்றால் ஆதிசேடன் பூமியை தாங்கிக் கொண்டு இருந்தான் திருமாலே அவதாரம் எடுத்து வந்தது போல இந்த இராஜராஜ சோழன் பிறந்துள்ளான்.இனி இவன் இந்த பூமியை தாங்குவான் காப்பாற்றுவான் என ஆதிசேடன் நினைத்தான் அதனால் ஆதிசேடன் மனைவியர் தன் கணவர்க்கு இனி நிலச்சுமை குறைந்துவிடும் என மகிழ்ச்சியால் நடனம் புரிந்தனர்.இராஜராஜன் பிறந்ததும் இருபுறமும் ஒளி மண்டலம் தோன்றியது.மக்கள் அனைவரும் அவ்வொளியை கண்டு மற்றொரு நிலவு தோன்றியதோ என அதிசயத்தில் ஆழ்ந்தனர்.வானத்தில் இருக்கும் நிலவின் ஒளியை விட இந்த ஒளி பேரொளியாக இருந்தது.இந்த சோழநாடு இவனால் ஒளிவீச போகின்றதை முன்பே அறிவிக்கின்றன இந்நிகழ்ச்சி.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
.
Thursday, June 18, 2020
சிவசூடாமணி இராஜசிம்ம பல்லவன்
இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் தன் தந்தை பரமேசுவரன் போல கண்மனிகளால்(ருத்ராட்சம்) செய்யப்பட்ட லிங்கத்தை தலையில் கீரிடமாக அணிந்திருந்தான்.அதனால் "சிவசூடாமணி" என அழைக்கப் படுகிறான்.காஞ்சிமா நகரில் சிவபெருமானுக்கு கைலாயத்தை ஒத்த கோயில் எடுபித்த பெருமையுடையவன் என வேலூர் பாளைய செப்பேடு கூறுகிறது. இக்கோயில் கல்வெட்டும், இவன் எடுத்த மாமல்லபுரம் சத்திரியசிம்ம பல்லவேச்சுரம் கோயில் கல்வெட்டும்,பனைமலை கோயில் கல்வெட்டும் இவனை சிவசூடாமணி என புகழ்ந்து கூறுகின்றன.இவன் சிறப்பு பெயர்களுள் சங்கர பக்தன், ஈசுவர பக்தன் என்பதாகும். காசாக்குடி செப்பேடுகள் பரமேசுவரனே இராஜசிம்ம பல்லனாக அவதரித்தான். என்று சிறபித்து கூறுகின்றன. உதயேந்திர செப்பேடுகள் "பரம மகேசுவரன்" என புகழ்ந்துரைக்கின்றன.வானில் அசரீரி(ஒலி) கேட்டவன்.கைலாசநாதர் கோயில் குடமுழக்கு தேதியை மாற்றி வைத்து கொள் அன்று பூசலார் கட்டிய கோயிலில் (மனக்கோயில்) குடியேற இருப்பதாக இவனுக்கு சிவபெருமான் அசரீரியாக கூறினார்.அக்கோயில் கல்வெட்டு நற்குணங்கள் விலகி நிற்கும் கலியுகத்தில் இவன் அசரீரி வாக்கினைக் கேட்ட பெருமையுடையவன் என்று கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.சுந்தரர் காலத்தில் வாழ்ந்த கழற்சிங்கன் இவனே என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.இவற்றை இவர் சுந்தரர் காலம் கட்டுரையில் விரிவாக காணலாம்.இவன் முதல் இராசசிங்கன் என்றும் அழைக்கப்படுகிறான்.எனவே இம்மன்னன் சிறந்த சிவபக்தி உடையனவாகத் திகழ்ந்தவன் என்பது நன்கு வெளியாதல் காண்க.
நூல்;சுந்தரர் காலம்,கொல்லம் ஆண்டு. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
நூல்;சுந்தரர் காலம்,கொல்லம் ஆண்டு. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Sunday, June 7, 2020
மங்கலா தேவி கண்ணகி சிலை
சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை செய்து வஞ்சி நெடுவேள் குன்றத்தில் கோயில் கட்டினான்.கண்ணகி மங்கலா தேவி என அழைக்கப் படுகிறாள். 'இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த. தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு
ஓங்கிய திருமா மணி'
கொங்கு நாடும் குடமலையும் சேர்ந்த சேரநாட்டு தெய்மாகிறாள்.தென் தமிழ்நாடு செய்த தவப்பயனால் இவள் இங்கு வந்து பிறந்தாள்.முழு மாணிக்கம் போல இவ்வுலகத்திற்கு தோன்றிய உயர்ந்தப் பெண் இவள்.(இந்த மாணிக்க கல்லாலும் இவள் வெற்றி அடைந்தாள்)
தென்தமிழ்ப் பாவை செய்த. தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு
ஓங்கிய திருமா மணி'
கொங்கு நாடும் குடமலையும் சேர்ந்த சேரநாட்டு தெய்மாகிறாள்.தென் தமிழ்நாடு செய்த தவப்பயனால் இவள் இங்கு வந்து பிறந்தாள்.முழு மாணிக்கம் போல இவ்வுலகத்திற்கு தோன்றிய உயர்ந்தப் பெண் இவள்.(இந்த மாணிக்க கல்லாலும் இவள் வெற்றி அடைந்தாள்)
கண்ணகி தெய்வமாக போகிறாள் என வேட்டுவ சிறுமி மீது கொற்றவை தெய்வம் வந்து நடக்கபோகின்ற நிகழ்வை முன்பே கூறியது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...