Saturday, June 20, 2020

அருண்மொழி வர்மன் எனும் இராஜராஜ சோழன் பிறப்பு

இரண்டாம் பரந்தகனாகிய சுந்தர சோழனுக்கு அருண்மொழி வர்மன் மகனாக பிறந்தான்.அழகான கைகளையும் ஒளிமையான உடம்பும் கைகளில் சங்கு,சக்கர குறிகளோடு திருமாலே அவதாரம் எடுத்தது போல் பிறந்தான்.இவன் பிறந்தபோது தன் கணவர்க்கு இனி நிலச்சுமை குறைந்து விடும் எனும் மகிழ்ச்சியினால் ஆதி சேடனுடைய மனைவியர் நடனம் ஆடினர். என திருவாலாங்காட்டு செப்பேடு கூறுகிறது.ஏனென்றால் ஆதிசேடன் பூமியை தாங்கிக் கொண்டு இருந்தான் திருமாலே அவதாரம் எடுத்து வந்தது போல இந்த இராஜராஜ சோழன் பிறந்துள்ளான்.இனி இவன் இந்த பூமியை தாங்குவான் காப்பாற்றுவான் என ஆதிசேடன் நினைத்தான் அதனால் ஆதிசேடன் மனைவியர் தன் கணவர்க்கு இனி நிலச்சுமை குறைந்துவிடும் என மகிழ்ச்சியால் நடனம் புரிந்தனர்.இராஜராஜன் பிறந்ததும் இருபுறமும் ஒளி மண்டலம் தோன்றியது.மக்கள் அனைவரும் அவ்வொளியை கண்டு மற்றொரு நிலவு தோன்றியதோ என அதிசயத்தில் ஆழ்ந்தனர்.வானத்தில் இருக்கும் நிலவின் ஒளியை விட இந்த ஒளி பேரொளியாக இருந்தது.இந்த சோழநாடு இவனால் ஒளிவீச போகின்றதை முன்பே அறிவிக்கின்றன இந்நிகழ்ச்சி.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
 . 

1 comment:

  1. அக்கால சோழ நிர்வாக கட்டமைப்பை உத்திரமேரூர் கல்வெட்டுகள் தெரியப்படுத்துகின்றன. சோழ பேரரசு மண்டலங்களாகவும் , மண்டலங்கள் வளநாடுகளாகவும் [கோட்டங்கள்], பின்னர் நாடுகளாகவும் , ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன. சங்ககால தமிழ் சமூகம் அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என்றே மக்களை வகைப்படுத்தி இருந்தது. ஆனால் சோழ வம்சமே பல்லவ குலத்தினின்று எழுச்சி பெற்றதால், பல்லவர்களை போலவே சோழர்களும் சமஸ்கிருதத்திற்கு முக்கியம் அளித்ததால் ஆரிய வருணாஸ்ரமம் புகுத்தப்பட்டது.அதன் படி, சோழர்களுடன் வந்தேறிய ஆரிய பிராமணர்கள் அறவோர்களாக, நீதிமான்களாக ஊர்களில் குடியேறினர். அரசர்களும் அவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அவர்களும் இறை பணி செய்து கொண்டு ஊரின் ஒவ்வொரு மக்கள் குறித்து -அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையில் அறிந்து இருந்தனர். ஒவ்வொருவரின் நில உரிமை,அவர்தம் விளைச்சல், அவர்கள் கட்டவேண்டிய வரி,உரிமையாளர் இறப்பிற்குப்பின் அவர்தம் வாரிசு என்று ஒவ்வொரு மக்களையும் முறையே அறிந்து வைத்து இருந்தனர்.இவ்வாறு ஆரிய பிராமணர்கள் ஒவ்வொருவர் பிறப்பிற்கு புண்ணியதானம் செய்து அறியப்படுத்துவதும் , திருமணத்தை முன்னின்று நடத்தியும்,இறப்பிற்கு காரியம் செய்ய உதவி செய்தும் தனி ஒருவரின் அனைத்து நடவடிக்கைகளையும் அறித்திருந்ததால் நீதி பரிபாலனம் செய்ய அரசனுக்கு இதுவே ஏதுவாய் அமைந்தது. இதுவே உண்மை.
    அக்காலத்தில் நிலங்கள் அரசனுக்கு - [நாட்டின் அரசுவிற்கு- அதன் மூலம் அரசனுக்கு ] சொந்தமானதாய் இருந்தது. இதே போல் நீரும் அரசுடமை.ஆனது. நிலங்களை வரி வசூலிற்கேற்ப நஞ்செய் என்றும் புஞ்சை என்றும் வகைப்படுத்தவும் அதன் உரிமையாளரை நன்கு அறிந்து இருந்த பிராமணர்கள் மேற்பார்வையில் வரி வசூல் நடந்தது. இது ஆவணங்கள் இல்லாத அந்த காலத்தில் பிராமணர்கள் ஆவணங்கள் போல் இருந்து உதவினார். இது ஒரு வகையில் சட்டத்தின் ஆட்சியாய் நேர்மையாயும் இருந்தது.

    ReplyDelete

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...