Sunday, June 7, 2020

மங்கலா தேவி கண்ணகி சிலை

சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை செய்து வஞ்சி நெடுவேள் குன்றத்தில் கோயில் கட்டினான்.கண்ணகி மங்கலா தேவி என அழைக்கப் படுகிறாள்.                                    'இவளோ கொங்கச் செல்வி                         குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த.            தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு
 ஓங்கிய திருமா மணி'
கொங்கு நாடும் குடமலையும் சேர்ந்த சேரநாட்டு தெய்மாகிறாள்.தென் தமிழ்நாடு செய்த தவப்பயனால் இவள் இங்கு வந்து பிறந்தாள்.முழு மாணிக்கம் போல இவ்வுலகத்திற்கு தோன்றிய உயர்ந்தப் பெண் இவள்.(இந்த மாணிக்க கல்லாலும் இவள் வெற்றி அடைந்தாள்)
கண்ணகி தெய்வமாக போகிறாள் என வேட்டுவ சிறுமி மீது கொற்றவை தெய்வம் வந்து நடக்கபோகின்ற நிகழ்வை முன்பே கூறியது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...