Saturday, June 27, 2020

திருவிடைமருதூர் நகரம்

திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் தெரு அழகு என்று கூறுவார்கள்.இராஜராஜ சோழன் மனைவி பஞ்சவன் மாதேவியார் திருவிடைமருதூர் பெருமானை வழிபட வந்தபோது திருவிடைமருதூர் பெரிய நகரமாக இருந்ததுள்ளது. "திருஇடைமருதுடையார் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றாலுடையாரும் தேவகன்மிகளும் சபையும் திருவிடைமருதில் நகரமும் இருந்து நம்பிராட்டியார் ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் ஆழ்வார்த் திருவடி தொழவந்தருளினார்" இங்கு வந்தபோது தான் காவிரியின் தென்கரையில் செம்பியன் மாதேவி பெருஞ்செண்பக நந்தவனம் என்ற நந்தவனத்திற்கு சென்று பஞ்சவன் மாதேவியார் பார்வையிட்டார். "தஞ்சாவூர்க் கோதண்டராமவெளத்து ஸ்ரீ பஞ்சவன் மாதேவியார் பெண்டாட்டி வாணகொவரையன்" என்பவன் இக்கோயில் உமா பட்டராகிக்கு  இரண்டு வரிசை கற்கள் பதிக்கப்பட்ட தங்க தாலியும் முத்துகளால் ஆன மாலையும் அளித்துள்ளான். தஞ்சாவூர் அரண்மனையில் கோதண்டராமவெளத்து பகுதியில் பஞ்சவன் மாாாததேவி பெண்டாட்டி(சமையல் செய்பவன்)என்பவன் பெண்களை போல சமையல் செய்பவன் அதனால் பெண்டாட்டி என அழைக்கப்படுகிறான். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...