இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் தன் தந்தை பரமேசுவரன் போல கண்மனிகளால்(ருத்ராட்சம்) செய்யப்பட்ட லிங்கத்தை தலையில் கீரிடமாக அணிந்திருந்தான்.அதனால் "சிவசூடாமணி" என அழைக்கப் படுகிறான்.காஞ்சிமா நகரில் சிவபெருமானுக்கு கைலாயத்தை ஒத்த கோயில் எடுபித்த பெருமையுடையவன் என வேலூர் பாளைய செப்பேடு கூறுகிறது. இக்கோயில் கல்வெட்டும், இவன் எடுத்த மாமல்லபுரம் சத்திரியசிம்ம பல்லவேச்சுரம் கோயில் கல்வெட்டும்,பனைமலை கோயில் கல்வெட்டும் இவனை சிவசூடாமணி என புகழ்ந்து கூறுகின்றன.இவன் சிறப்பு பெயர்களுள் சங்கர பக்தன், ஈசுவர பக்தன் என்பதாகும். காசாக்குடி செப்பேடுகள் பரமேசுவரனே இராஜசிம்ம பல்லனாக அவதரித்தான். என்று சிறபித்து கூறுகின்றன. உதயேந்திர செப்பேடுகள் "பரம மகேசுவரன்" என புகழ்ந்துரைக்கின்றன.வானில் அசரீரி(ஒலி) கேட்டவன்.கைலாசநாதர் கோயில் குடமுழக்கு தேதியை மாற்றி வைத்து கொள் அன்று பூசலார் கட்டிய கோயிலில் (மனக்கோயில்) குடியேற இருப்பதாக இவனுக்கு சிவபெருமான் அசரீரியாக கூறினார்.அக்கோயில் கல்வெட்டு நற்குணங்கள் விலகி நிற்கும் கலியுகத்தில் இவன் அசரீரி வாக்கினைக் கேட்ட பெருமையுடையவன் என்று கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.சுந்தரர் காலத்தில் வாழ்ந்த கழற்சிங்கன் இவனே என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.இவற்றை இவர் சுந்தரர் காலம் கட்டுரையில் விரிவாக காணலாம்.இவன் முதல் இராசசிங்கன் என்றும் அழைக்கப்படுகிறான்.எனவே இம்மன்னன் சிறந்த சிவபக்தி உடையனவாகத் திகழ்ந்தவன் என்பது நன்கு வெளியாதல் காண்க.
நூல்;சுந்தரர் காலம்,கொல்லம் ஆண்டு. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
நூல்;சுந்தரர் காலம்,கொல்லம் ஆண்டு. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment