Saturday, March 7, 2020

கிள்ளை மண்டபம்

முதல் குலோத்துங்க சோழன்,விக்கிரம சோழன்,இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய மன்னர்களின் காலங்களில் படைத்தலைவராய் விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் எனும் நரலோக வீரன் தில்லையில் பெரும் திருப்பணி செய்து தில்லையிலிருந்து கிள்ளைக்கு  ஒரு பெருவழி அமைத்து கிள்ளையில் நடராஜ பெருமான் சிவகாமி அம்மன் மாசித் திங்கள் கடலாடி வீற்றிருக்க ஒரு மண்டபம் கட்டினான்.மூலவரான நடராஜர் சிவகாமியே கிள்ளைக்கு தீர்த்தவாரிக்கு சென்றனர் பின்பு பாதுகாப்பு இல்லமையால் சிலவருடங்கள் முன்பு நின்று விட்டது.தற்போது வேறு திருமேனிகள் எடுத்து செல்கிறார்கள்.நடராஜர் கோயிலில் உள்ள மணவிற் கூத்தன் காலிங்கராயன் கல்வெட்டு வெண்பாவில்
'மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் பேசற் றவற்றைப் பெருவழியும்-ஈசற்குத் தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும் மன்புலியா ணைநடக்க வைத்து' என அவன் மண்டபம் பெருவழி அமைத்ததை கூறுகின்றது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

  

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...