Saturday, March 14, 2020

முதல் வரகுண பாண்டியன் இடவை அரண்மனை

திருவிடைமருதூரும் முதல் வரகுண பாண்டியனும்.
முதல் வரகுண பாண்டியன்  ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட  குதிரையில் வரும்பொழுது தெரியாமல் ஒரு பிராமணரை குதிரை மிதித்து கொன்று விட்டதால் அவனுக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்து கொண்டது என்றும் அவன் மதுரை சொக்கநாதரை வேண்டினான் இறைவன் கனவில் வந்து திருவிடைமருதூரில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.அவன் திருவிடைமருதூர் வந்தவுடன் அவன் கோயில் உள்ளே செல்ல பிரமஹத்தி வாசலிலே நின்று விட்டது. தீர்த்தங்களில் மூழ்கி இறைவன் இறைவியை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றான்.அவன் வந்த வழியே செல்லாமல் மேற்கு வாயில் வழியே சென்றான்.அந்த பிரம்ஹத்தி இவன் வெளியே வருவான் பிடித்து விடலாம்னு அங்கேயே உட்கார்ந்து இருக்கிறதாம்.இது புராண வரலாறு. முதல் வரகுணப்பாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து வெற்றிக் கொண்டு தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். இவன் சிறந்த சிவபக்தன் திருவிடைமருதூர் பெருமான் மீது அன்பு கொண்டு  இடவை நகரில் ஒரு அரண்மனை அமைத்து அங்கிருந்து  தினமும் வந்து மகாலிங்க பெருமானை வழிபட்டு திருப்பணி செய்துள்ளான். இவனை மாணிக்கவாசகர் தம் சிற்றம்பலம்க் கோவையில் பாராட்டியுள்ளார். பட்டினாத்தரும் தம் மும்மணிக் கோவையில் இவனை பராட்டியுள்ளார். நம்பியாண்டார் நம்பியும் தம் கோயிற்றருப்பண்ணியர் விருத்தத்தில் பராட்டியுள்ளார்.இவன் சோழநாட்டில் பல கோயில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளான்.இரண்டாம் வரகுணப்பாண்டியன் சோழநாட்டில் தன் பாட்டன் முதல் வரகுணப் பாண்டியன் இடவை நகரில் கட்டிய அரண்மனை இருந்த காரணத்தினால் இடவை நகரையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் முதலில் கைப்பற்றினான் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...