Thursday, November 28, 2019

உலோகமாதேவீசுரம்

இராஜராஜ சோழன் பட்டதரசி தந்தி விடங்கி சத்தி உலோகமாதேவியால் கி.பி.1005 -இல் எடுக்கப்பட்ட திருக்கோயில்.உலகமாதேவயால் எடுக்கப்பட்ட செய்தியை அவரது கல்வெட்டு
"ஸ்ரீராஜராஜதேவர் நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியாராந ஸ்ரீஒலோமாதேவியார் வடகரை ராஜேந்திர சிம்ஹ வளநாட்டு பொய்கை நாட்டு திருவையாற்றுப்பால்  நாம் எடுபித்த திரு கற்றளி ஒலோகமாதேவீசுரம்"
என குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் 'ஒலோகமாதேவீச்சரமுடைய மகாதேவர்' ஆவார்.உலகமாதேவி விருப்திற்கேற்ப அழகாக இக்கோயிலை வடிவமைத்தவர்கள் இருவர். தச்சாசாரியன் எழு வடியான் கரோணனான புவனிமாணிக்க ஆசார்யன் என்பவனும் நக்கனாச்சனான கலியுகரம்பைப் பெருந்தச்சன் ஆவான்.

உலோகமாதேவீசுரம்

இராஜராஜ சோழன் பட்டதரசி தந்தி விடங்கி சத்தி உலோகமாதேவியால் கி.பி.1005 -இல் எடுக்கப்பட்ட திருக்கோயில்.உலகமாதேவயால் எடுக்கப்பட்ட செய்தியை அவரது கல்வெட்டு
"ஸ்ரீராஜராஜதேவர் நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியாராந ஸ்ரீஒலோமாதேவியார் வடகரை ராஜேந்திர சிம்ஹ வளநாட்டு பொய்கை நாட்டு திருவையாற்றுப்பால்  நாம் எடுபித்த திரு கற்றளி ஒலோகமாதேவீசுரம்"
என குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் 'ஒலோகமாதேவீச்சரமுடைய மகாதேவர்' ஆவார்.உலகமாதேவி விருப்திற்கேற்ப அழகாக இக்கோயிலை வடிவமைத்தவர்கள் இருவர். தச்சாசாரியன் எழு வடியான் கரோணனான புவனிமாணிக்க ஆசார்யன் என்பவனும் நக்கனாச்சனான கலியுகரம்பைப் பெருந்தச்சன் ஆவான்.

Thursday, November 21, 2019

அனந்த சிவன் திருவியலூர் திருக்கோயில்

இக்கோயிலில் இராஜராஜ சோழன் இறுதி ஆண்டில் கி.பி.1014 துலாபாரமும் இவன் பட்டத்தரசி தந்தி சக்திவிடங்கி உலோகமாதேவியார் இரண்ய கர்ப்பதானம் செய்துள்ளார்.(இவற்றை என் முன்பு பதிவில் முழு செய்தியை எழுதியுள்ளேன்.) இக்கோயில் முதலில் பல்லவர் கால காலத்தில் கட்டப்பட்டு ஆதித்த சோழன் முதல் பராந்தக சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. முதல் வரகுணப் பாண்டியன் கல்வெட்டு இருந்துள்ளன.இக்கோயில் உள்ளே தெற்கு பக்கமுள்ள சேமிப்பு அறையில் வீணாதர தட்சிணாமூர்த்தி உள்ளதால் இவை ஆதித்த சோழன் மூலக்கோயில் என்கின்றனர்.முதல் இராஜேந்திர சோழன் இக்கோயிலில் திருச்சுற்று மாளிகையும் கோபுரமும் எடுத்துள்ளார் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. விக்கிரம சோழனும் திருச்சுற்று மாளிகையும் கோபுரமும் எடுத்துள்ளார் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலின் சிறிய கோபுரம் ராஜேந்திர சோழன் எடுத்திருக்கலாம் பெரிய கோபுரம் விக்கிரம சோழன் எடுத்து திருச்சுற்று மாளிகையை புதிப்பித்திருக்கலாம். இக்கோயிலை கட்டிய அனந்த சிவன் என்பவன் உருவம் இக்கோயிலில் திருச்சுற்று மாளிகை நடுவில் உள்ள மண்டபத்தில் உள்ளது. இராஜேந்திர சோழன் அத்தை குந்தவையார் இராஜராஜ சோழன் இறந்த பின்பு பழையார் அரண்மனையில் இருந்து இக்கோயிலுக்கு நிலம் அளித்துள்ளார். பழையார் நகரை ஆதிபூமி என அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, November 9, 2019

ரிஷபவாகன தேவர் திருவெண்காடு

இராஜராஜ சோழனின் 26 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1011 இல் ரிஷபவாகன தேவரை திருவெண்காட்டு கோயிலில் கோலக்காவன் என்பவன் எழுந்தருளவித்து அணிகலன்களுக்கும் பூசைக்கும் பொற்காசுகளை அளித்துள்ளான். இதற்கு அடுத்த ஆண்டு கி.பி.1012 இல் இராஜராஜ  ஜனநாத தெரிஞ்ச பரிவாரத்தார் ரிஷபவாகன தேவரது பிராட்டியாரை திருவெண்காட்டு கோயிலில் எழுந்தருளவித்தனர். ரிஷபவாகன தேவர் விரித்த சடையும் தலைப்பாகையும் இவரது உருவம் ஒரு விவசாயி போல உள்ளார் என கூறுகின்றனர்.இரா.விக்ரமன், சிதம்பரம்.

Friday, November 1, 2019

இராஜேந்திர சோழன் படைத்தலைவர்களின் பள்ளிப்படை கோயில்கள்

வேங்கி நாட்டில் நவிதிண்டியில் மேலைச்சாளுக்கிரோடு நிகழ்த்திய போரில் திருகோயிலூர் அருகே மலையாமனாட்டை ஆட்சி செய்த குறுநில மன்னன் உத்தசோழமிலாடுடையான் உயிர் துறந்தான் மேலும் இரண்டு படைத்தலைவரான இராசராச பிரமமாராயன் உத்தம சோட சோடகோன் இறந்தனர். இப்போரில் மேலைச்சாளுக்கியர் வெற்றி பெறவில்லை.உயிர் துறந்த சோழ படைத்தலைவர் மூவருக்கும் மூன்று சமாதிக்கோயில்களை இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கை தேவி கணவனும் முதல் குலோத்துங்க சோழன் தந்தையுமான இராசராசநரேந்திரன் இக்கோயில்களை கட்டி நிவந்தம்  அளித்துள்ளான் என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகின்றார். கி.பி.1035 ஆம் ஆண்டு இப்போர் நிகழ்ந்து அந்த ஆண்டு இக்கோயில்களை கட்டியிருக்க வேண்டும் என்கிறார் பண்டாரத்தார்.
தற்போது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நவிதிண்டி எனும் ஊர் கலிதிண்டி என அழைக்கபடுகிறது அங்கு ஒரு சமாதி கோயில் ஒன்று மட்டுமே உள்ளது அது ராசராச பிரமமாராயன் சாமாதி கோயில் அவை தற்போது ராஜலிங்கேஷ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது.மற்ற இரண்டு கோயில்கள் இதன் அருகே 3 கி.மீ உள்ள போகேஸ்வரர் கோயில் உத்தம சோட சோடகோன் அல்லது உத்தமசோழமிலாடுடையன் பள்ளிப்படை கோயிலாக இருக்கலாம். இந்த இடமும் கலிதிண்டி என்றே அழைக்கப்படுகிறது.இந்த கோயில் ராஜலிங்கேஷ்வரர் கோயில் தோற்றத்திலேயே உள்ளது. மூன்றாவது கோயிலை இவ்வூரில் காணமுடியவில்லை.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...