Thursday, November 21, 2019

அனந்த சிவன் திருவியலூர் திருக்கோயில்

இக்கோயிலில் இராஜராஜ சோழன் இறுதி ஆண்டில் கி.பி.1014 துலாபாரமும் இவன் பட்டத்தரசி தந்தி சக்திவிடங்கி உலோகமாதேவியார் இரண்ய கர்ப்பதானம் செய்துள்ளார்.(இவற்றை என் முன்பு பதிவில் முழு செய்தியை எழுதியுள்ளேன்.) இக்கோயில் முதலில் பல்லவர் கால காலத்தில் கட்டப்பட்டு ஆதித்த சோழன் முதல் பராந்தக சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. முதல் வரகுணப் பாண்டியன் கல்வெட்டு இருந்துள்ளன.இக்கோயில் உள்ளே தெற்கு பக்கமுள்ள சேமிப்பு அறையில் வீணாதர தட்சிணாமூர்த்தி உள்ளதால் இவை ஆதித்த சோழன் மூலக்கோயில் என்கின்றனர்.முதல் இராஜேந்திர சோழன் இக்கோயிலில் திருச்சுற்று மாளிகையும் கோபுரமும் எடுத்துள்ளார் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. விக்கிரம சோழனும் திருச்சுற்று மாளிகையும் கோபுரமும் எடுத்துள்ளார் என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயிலின் சிறிய கோபுரம் ராஜேந்திர சோழன் எடுத்திருக்கலாம் பெரிய கோபுரம் விக்கிரம சோழன் எடுத்து திருச்சுற்று மாளிகையை புதிப்பித்திருக்கலாம். இக்கோயிலை கட்டிய அனந்த சிவன் என்பவன் உருவம் இக்கோயிலில் திருச்சுற்று மாளிகை நடுவில் உள்ள மண்டபத்தில் உள்ளது. இராஜேந்திர சோழன் அத்தை குந்தவையார் இராஜராஜ சோழன் இறந்த பின்பு பழையார் அரண்மனையில் இருந்து இக்கோயிலுக்கு நிலம் அளித்துள்ளார். பழையார் நகரை ஆதிபூமி என அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...