Friday, November 1, 2019

இராஜேந்திர சோழன் படைத்தலைவர்களின் பள்ளிப்படை கோயில்கள்

வேங்கி நாட்டில் நவிதிண்டியில் மேலைச்சாளுக்கிரோடு நிகழ்த்திய போரில் திருகோயிலூர் அருகே மலையாமனாட்டை ஆட்சி செய்த குறுநில மன்னன் உத்தசோழமிலாடுடையான் உயிர் துறந்தான் மேலும் இரண்டு படைத்தலைவரான இராசராச பிரமமாராயன் உத்தம சோட சோடகோன் இறந்தனர். இப்போரில் மேலைச்சாளுக்கியர் வெற்றி பெறவில்லை.உயிர் துறந்த சோழ படைத்தலைவர் மூவருக்கும் மூன்று சமாதிக்கோயில்களை இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கை தேவி கணவனும் முதல் குலோத்துங்க சோழன் தந்தையுமான இராசராசநரேந்திரன் இக்கோயில்களை கட்டி நிவந்தம்  அளித்துள்ளான் என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகின்றார். கி.பி.1035 ஆம் ஆண்டு இப்போர் நிகழ்ந்து அந்த ஆண்டு இக்கோயில்களை கட்டியிருக்க வேண்டும் என்கிறார் பண்டாரத்தார்.
தற்போது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நவிதிண்டி எனும் ஊர் கலிதிண்டி என அழைக்கபடுகிறது அங்கு ஒரு சமாதி கோயில் ஒன்று மட்டுமே உள்ளது அது ராசராச பிரமமாராயன் சாமாதி கோயில் அவை தற்போது ராஜலிங்கேஷ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது.மற்ற இரண்டு கோயில்கள் இதன் அருகே 3 கி.மீ உள்ள போகேஸ்வரர் கோயில் உத்தம சோட சோடகோன் அல்லது உத்தமசோழமிலாடுடையன் பள்ளிப்படை கோயிலாக இருக்கலாம். இந்த இடமும் கலிதிண்டி என்றே அழைக்கப்படுகிறது.இந்த கோயில் ராஜலிங்கேஷ்வரர் கோயில் தோற்றத்திலேயே உள்ளது. மூன்றாவது கோயிலை இவ்வூரில் காணமுடியவில்லை.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

1 comment:

  1. பொது சகாப்தம் ஓன்று முதல் மூன்று வரை ஆண்ட சோழர்கள் முற்கால சோழர்கள் ஆவர். திருமாவளவன் என்னும் கரிகால் பெருவளத்தான் இவர்களுள் முக்கியமானவர். இவர்கள் வேளிர் இனக்குழுக்களின் அதாவது வேளாண் செய்யும் வெள்ளாளர் வழி வந்தவர்கள்.இவர்கள் வளவன் என்றும், சென்னி, செம்பியன் என்றும் அழைக்கப் பெற்றவர்கள். இவர்கள் திருச்சி உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தியவர்கள். கோவில் கட்டுவதை விடுத்தது வேளாண் பாசனத்துக்கு தேவையான (கல்லணை) அணை கட்டுதல், பாசன வாய்க்கால் அமைத்தல் போன்று பணிகள் செய்தனர். பண்டைய அரசர்களின் வருமானம் நிலமும் நீரும் ஆகும் . நிலத்தை பயிர் செய்வோர் விளைச்சலில் ஒரு பகுதி வரியாக கட்டினர். அது நிலத்துக்கும் நீருக்கும் அதன் பயனாய் ஏற்படும் விளைச்சலுக்கு உள்ள வரி. நில வருவாயே முக்கியமானதாக இருந்தது. கடல் வணிகத்தின் மூலம் பெறப்படும் சுங்கமும் முக்கியமான வருவாயாக இருந்தது. அதனால் காவேரிப்பூம்பட்டினம் முக்கிய துறைமுகமாயும் நாட்டின் இரண்டாம் தலை நகராகவும் விளங்கிற்று . இவர்களுக்கு 'திக்விஜயம்" செய்து நாடுகளை பிடிப்பதில் பெரும் நாட்டம் இல்லை. புறநாநூற்று பட்டினப்பாலையும் சிலப்பதிகாரம் முற்கால சோழர் பற்றிய பதிவுகள் அதிகம் கொண்டு இருக்கின்றன.
    பிற்கால சோழர்கள் பொது சகாப்தம் பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்டனர். இவர்கள் தஞ்சையையும் பழையாற்றையும் தலைநகராக்கி ஆண்டனர். வேங்கி நாடு என்று அறியப்படும் இன்றிய ஆந்திரப்பகுதியினின்றும் வெகு முற்காலத்தில் வந்த முல்லை நிலத்தவர் இவர்கள். எனினும் பல்லவர்களின் அரசன் விஜயாலய சோழன் தான் மீண்டும் சோழ பேரரசிற்கு உயிர் ஊட்டியவர். போர் மறவர்கள், தேவர்கள் [பரதவர்] எனப்படும் இன குழுக்கள், அந்நாளில் இருந்த களப்பிரர்கள் ஆட்சி [முத்தரையர் ஆட்சியை] வீழ்த்தி சோழ ஆட்சியை ஏற்படுத்தியவர். மெய்க்கீர்த்தி மிக்க ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் அவர்களுள் அடங்குவர். இவர்கள் நாடுகள் பிடிப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். அரச நிர்வாகத்தினை அந்தணர் கையில் ஒப்படைத்து விட்டு திக்விஜயம் சென்று விடுவர். பரத குலத்தவராதலின் வலிமை மிக்க கடற்படையை கொண்டு இருந்தனர். அரசருடன் வாணிக செட்டிகள் பின் தொடர்ந்து சென்று பர்மா, கடாரம் என்னும் மலேசியா, பகுதிகளில் வாணிபம் செய்ய முற்பட்டனர்.

    ReplyDelete

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...