Wednesday, September 11, 2019

கண்ணகி மதுரையை எரித்த நிகழ்வு

மதுரையில் கோவலன் கள்வன் என பழியை சுமத்தி கொல்லப்பட்ட செய்தி கேட்ட கண்ணகி கொதித்தெழுந்தாள் அவள் வானத்தை நோக்கி காய்கதிர் செல்வனே என் கணவன் கள்வனா என சூரியனை பார்த்து கேட்டாள் அதற்கு சூரியன் உன் கணவன் கள்வனல்ல உத்தமன் விரைவில் இவ்வூரை எரியுண்ணும் என கூறியது. பாண்டியன் அவையில் கோவலன் கள்வன் இல்லை என மெய்ப்பித்து வெளியே வந்த கண்ணகி தனது இடமுலையை கையால் திருகி பிய்த்து மதுரையை மும்முறை வலம் வந்து வானத்தை நோக்கி வீசினால் அவை தீப்பிழம்பாக மாறி மதுரை எரிய தொடங்கியது.இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கும்.கண்ணகி தனது இடது மார்பையே பிய்த்து எறிந்தாள். சிலர் முலை என்பது கண் என கூறுகின்றனர். கண்களை பிடிங்க தான் முடியும் திருக முடியாது. மதுரையில் தேவி பார்வதி மலையத்துவச பாண்டியன் மகளாக தடாதகைப் பிராட்டியராக பிறந்த போது மூன்று முலைகளுடன் பிறந்தால் அதாவது மூன்று மார்பங்களுடன் பிறந்தாள்.அவள் பருவ வயது அடைந்து சிவபெருமானை கண்டவுடன் நடுவில் முலை மறைந்து விட்டதாம். திருவிளையாடல் புராண பாடலில் 'உயிர் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணியொசிந்தபூங் கொம்பி னின்றாள்'இதில் முலை என்பது மார்பகத்தை குறிக்கின்றது. திருஞானசம்பந்தர்க்கு தேவி பார்வதி தன் முலைபாலையே  கொடுத்தாள். சீர்காழியில் கோயிலில் திருஞானசம்பந்தர்க்கு திருமுலைப்பால் திருவிழா இன்றும் நடைபெறுகிறது. குஜராத் பகுதியில் ஒரு கிராமத்தில் சில பெண்கள் தங்கள் எதிரிகளை அழிக்க தனது ஒரு மார்பகத்தை பிய்த்து எறிவார்களாம். சமண சமயத்தில் பெண்கள் தன் கணவர் இறந்தவுடன் உடம்பில் ஒரு உறுப்பை குறைத்து கொள்வார்களாம். நற்றிணையில் வரும் பாடலில்
“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” (216:8,9) என்ற பாடல் பகுதி கண்ணகியின் செயலையே குறிக்கின்றது.கேரளா கொடுங்கலூர் பகவதி கோயில் உள்ள அம்மன் ஒற்றை முலைச்சி என்றே அழைக்கப்பட்டாள்.சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான்.எனவே அழைக்கப்பட்டாள்.சேரன்  கண்ணகி சிலையை ஒற்றை மார்புடன் வடிக்க எண்ணினான் ஆனால் அவற்றில் கலையழகு இருக்காது என முழுமையாக வடித்தான். ஆனாலும் சில கண்ணகி கோயில்களில் ஒற்றை மார்புடன் நாம் இப்போது பார்க்கும் அர்த்தநாரி சிலை போல சிலைகள் இருந்தன பின்பு அந்த சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய முழுமையாக வடித்த சிலையை வைத்து வழிபட்டனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...