Tuesday, September 17, 2019

வீரநாராயண பெருமாள் கோயில்

பராந்தக சோழனால் எடுக்கபட்ட கோயில்.கல்வெட்டுகளில் கோயில் வீரநாரயண விண்ணகர் எனவும் இறைவன் பெயர் வீரநாராயண எம்பெருமான் என அழைக்கப்படுகிறார்.சடையவர்ம சுந்தர பாண்டியனால் முழுவதும் புதுப்பிக்க பட்டு தன் பெயரில் பொன் வேய்ந்த பெருமாள் என தன் சிலையை நிறுவி சுந்தர பாண்டியன் சந்தி ஒருவேளை நிவேதனம் செய்ய நன்கொடை வழங்கினான்.இவன் சிற்பத்தை தற்போது அங்கு காணமுடியவில்லை.கோயில் புதுப்பிக்க படும்போது பழைய கல்வெட்டுகளை  படியெடுத்து மறுபடியும்  வெட்டுவிப்பது வழக்கம் ஆனால் சடையவர்ம சுந்தர பாண்டியன் சோழர் கல்வெட்டுகளை பதிக்கமல் விட்டுவிட்டான்.வீரநாரயண சதுர்வேதி மங்கலத்தை சுந்தர பாண்டியன் சதுர்வேதி மங்கலம் என மாற்றி விட்டான்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன்,கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் உள்ளன. நாதமுனிகள் அவதார திருக்கோயில். நாதமுனிகள் நாலாயிர திவ்ய பிரபந்ததை தொகுத்து இங்கு  தான் உலகிற்கு அளித்தார். நாலாயிர திவ்ய பிரபந்ததை அரங்கேற்ற பெருமாள் இவருக்கு இடத்தை காட்டியதால் காட்டுமன்னார் கோயில் என அழைக்கப்பட்டது.
இறைவன்:வீரநாராயண பெருமாள்.
இறைவி:மரகத வல்லி தாயார்.
சான்றுகள்:முற்கால சோழர் கலையும் சிற்பமும்.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
நாதமுனிகள் வரலாறு.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...