கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’’
12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் அரண்மனை வாழ்விடங்களை அழித்து வரும்போது பூம்புகாரில் புலவர் பரிசாக பெற்ற பதினாறு கால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டு சென்றான்.
சோழ மன்னன் இமயத்திற் புலியிலச்சினை பொறித்து மீண்ட காலத்து மகதநாட்டு மன்னன்பால் திறையாகப் பெற்று வந்த பட்டி மண்டபத்துடன் பதினாறு நூறாயிரம் பொன்னையும் கடியலூர் உருத்திரங் கண்ணாருக்குப் பரிசாகத் தந்து பாராட்டினான் என்பது வரலாறு. இச்செய்தியினை கவிச் சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார்.
"தத்துநீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தோ டாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"
என கலிங்கத்துப்பரணி பரணியில் குறித்துள்ளார்.
புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர்.
"அன்று கவிக்கு வியந்து தரும்பரிசிற் கொருபோர் ஆழியில் வந்து தராதலம் நின்று புகாரி லனைத்தலகும் சென்று கவிக்கு மகத்தது தூண் வயிரத்தினு முகத்தினுமெய் செய்ததொர்பொற்றிரு மண்டபம் நல்கிய செயகுல நாயகமே"
"நாவலனே கிடையா நவமணி மண்டபம் நின் பாவலனே கவரப் பண்டு பணித்தவனே"
என குலோத்துங்க பிள்ளைத் தமிழில் உளமுவந்து பாராட்டியுள்ளார்.
சித்திர மண்டபம் எங்கே?
மேற்குறித்த பதினாறுகால் மண்டபத்தை சித்திர மண்டபம் என்று இளங்கோவடிகள் குறிக்கின்றார்.
"செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன் "
13ஆம் நூற்றாண்டிற்கு பிறகு எந்த வித கொடிய படையெடுப்பு நிகழவில்லை என்றும் பூம்புகாரில் இருந்த பதினாறு கால் மண்டபம் கடல் கொந்தளிப்பால் விழுங்கப்பட்டோ அல்லது நிலப்பகுதியில் கேட்பாரற்று கிடந்து அழிந்திருக்க கூடும் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.கடலின் உள்ளேயும் அருகேயும் பழைய செங்கல் கட்டிட பகுதிகள் தென்படுகின்றன என்கிறார். ஊர் பகுதியில் தரை மட்டமாயுள்ள நிலப்பகுதிகள் காணப்படுகின்றன. கடலூக்குள்ளயோ,அல்லது ஊர்பகுதிலோ ஆராய்ந்தால் இம்மண்டபத்தை கண்டுபிடித்து விடலாம் என உறுதியாக கூறுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
நூல்:காவிரி பூம் பட்டினம் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.