Monday, February 7, 2022
நரசிம்ம வர்ம பல்லவன் தேவியை பிடித்த பிசாசு கல்வெட்டு
பிசாசு கல்வெட்டு
இரண்டாம் நரசிம்ம பல்லவனின் மனைவியான, லோகமாதேவி, பிரம்ம ராட்சஷனால்(கெட்ட பிராமண பிசாசு) பிடிக்கப்பட்டாள்.பாடங்காளன பள்ளியை சேர்ந்த கெளவுதமன் எனும் ஆசிவக பிரிவை சார்ந்த சமணத்துறவி அந்த பிசாசை விரட்டிவிடுகிறான் அதற்கு அரசன் மகிழம்பள்ளி என்ற ஊரை தானமாக அந்த சமணபள்ளிக்கு அளிக்கின்றான்.இந்த கல்வெட்டில் நரசிங்க போத்தரையன் ஆண்டு 18 இவன் முதல் நரசிம்ம வர்மன் அல்லது இரண்டாம் நரசிம்ம வர்மனா என்ற கேள்விக்கு காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிறிய சிவன்கோயில்களை இரண்டாம் நரசிம்ம வர்மன் மனைவி இரங்கபாதை என்பவள் பாதி கோயில்களும் மீதம் உள்ள கோயிலை லோகமாதேவி எனும் அவன் மற்றொரு மனைவியும் எடுத்துள்ளனர் என கூறுகின்றனர்.இங்கு நான் கூறுவது என்னவென்றால் லோகமாதேவி எனும் பெயர் முதல் நரசிம்ம வர்மன் மனைவியின் பெயராக ஏன் இருந்திருக்க கூடாது.அது பல்லவ அரசிகளின் போது பெயராக இருந்திருக்க கூடாதா?மகேந்திர வர்மன் காலத்தில் அவன் சைவனாக மாறி அனைத்து சமண பள்ளிகளையுமா இடித்து விட்டான் இல்லை .நரசிம்ம வர்மன் காலத்திலும் சமணபள்ளிகளை அவன் சமநோக்குடையவனாக இருந்து அதை ஆதரித்து வந்திருப்பான். காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டிய இரண்டாம் நரசிம்ம வர்மன் சிறந்த சிவபக்தன் ருத்ராட்ச சிவலிங்கத்தை தலையில் சூடியவன் வானில் அசரீரி கேட்டவன்.அப்படி அவன் மனைவிக்கு பிசாசு பிடிக்க வாய்ப்பில்லை அப்படி பிடித்தாலும் அது அவன் உருவத்தை பார்த்தே ஓடி போய் இருக்கும்.அவன் உருவத்தில் சிவபெருமானை ஒத்தவன்.இல்லையென்றால் சிவனடியார்களே அதை விரட்டியிருப்பார்கள்.ஒருவேளை முதல் நரசிம்ம வர்மன் மனைவியாக லோகமாதேவி இருந்து அவளுக்கு சித்தபிரமை பிடித்து அதை அந்த சமணதுறவி தெளிய வைத்து இருக்கலாம்.சமணகள் மாந்தீரகம்,மருத்துவத்தில் சிறந்தவர்கள்.எனது கருத்து இந்த கல்வெட்டில் குறிப்பிடபடும் அரசன் முதல் நரசிம்ம வர்மனாக இருக்கலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
கல்வெட்டு தகவல்:கல்வெட்டு அறிஞர் தி.நா.சுப்பிரமணியம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment