Friday, February 4, 2022
மிழலை நாட்டு கண்டன் மாதவன் நீடுர் திருப்பணி
முதல் குலோத்துங்க சோழன் 38,46 ஆண்டு ஆட்சியில் மிழலை நாட்டு கண்டன் மாதவன் எனும் சிற்றரசன் நீடுர் கோயிலை கற்றளியாக்கி விமானம் எடுத்துள்ளான். தில்லையிலும் புராணவிரிசை மண்டபத்தையும் சொன்னா வாறறிவார் கோயிலிலும் திருப்பணி செய்துள்ளான். காரிகை குளத்தூர் மன்னவன்,மிழலை நாட்டு வேள்,தொண்டை காவலன் என கூறப்பட்ட இவன் அமிரசாகர முனிவரை கொண்டுயாப்பருங்கலக் காரிகை நூலை இயற்றிய மன்னன் பரம்பரையில் வந்தவன் மிழலை நாட்டு கண்டன் மாதவன் ஆவான்.நீடுர் கோயில் பாடல் கல்வெட்டு.
1."எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ் இருத்திய குலோத்துங்க சோழற்கு யாண்டு முப்பதெட்டினில் சோணாட்டு
இசைவளர் இந்தளூர் நாட்டுள் உண்டை நீடிய நீடுர் உமையோடு உலாவின சிவபெருமானுக்கு உவந்து வெண்கயிலை மலையெனச் சிலையால் உத்தம விமானங் கமைத்தான் தண்டமிழ் அமிதச சாகர முனியை சயகொண்ட சோழ மண்டலத்து தண் சிறுகுன்ற நாட்டகத்து இருத்திச் சந்தநூற் காரிகை அவனால் கண்டவன் மருமான் காரிகை குளத்தூர்க் காவலன் நிலாவினான் எவர்க்கும் கருணையும் நீதியும் காட்டிய மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவனே"
2.ஆரிய உலகம் அனைத்தையுங் குடைகீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற்கு ஆண்டொரு நற்பத் தாறிடைத் தில்லை அம்பலத்தே வடகீழ்ப் பால் போரியல் மதத்துச் சொன்னா றறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரசைமா ளிகையும் வரிசையால் விளங்கப் பொருப்பினான் விருப்புறச் செய்தோன் நேரியற்கு ஆண்டோர் அஞ்சுடன் மூன்றில் நிகரிலாக் கற்றளிநீடுர் நிலாவினாற்கு அமைத்த நிலாவினான் அமுத சாகரன் நெடுந்தமிழ் தொகுத்த காரிகை குளத்தூர் மன்னன் தொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக் கற்பக மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவன் கண்டன் மாதவனே"
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment