Wednesday, January 26, 2022
பிச்சன் என்று பாடச்சொன்னான்
சுந்தரமூர்த்திகளை இறைவன் தடுத்தாட்கொண்டருளிய திருவெண்ணெய்நல்லூரில் "சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகோப்பெருஞ்சிங்கத்தேவர்க்கு யாண்டு 17-ஆவது மேஷநாயற்று புர்வபக்ஷத்து சதுர்த்தசியும் புதன்கிழமையும்பெற்று அத்தத்துநாள் திருவெண்ணெய்நல்லூர் உடையார் ஆட்க்கொண்டதேவர்க்கு மத்ய்ஸ்சன் செஞ்சுடையான் உதயன் ஸ்ரீ கைலாயமுடையான் இட்ட பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சு" என்ற கல்வெட்டு காணப்படுகிறது.இதில் உதயன் கைலாயமுடையான் என்ற தலைவன் ஒருவன் திருவெண்ணெய் நல்லூர் பெருமானுக்கு வெள்ளியில் ஐம்பத்தைந்து கழஞ்சு எடையுள்ளனவாக பிச்சன் என்னை பாட சொன்னான் என்ற பெயருடைய இரண்டு திருச்சின்னங்கள் செய்து அளித்தனன் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளதுப் பிச்சன் என்னை பாட சொன்னான் என்ற தொடர், சேக்கிழாரடிகள் தடுத்தாட் கொண்ட புராணத்தில் கூறியுள்ள சுந்தரமூர்த்திகளின் ஒரு வரலாற்று நிகழ்ச்சியை உணத்துவதை காண்க.இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள காலம் கி.பி.1268,மார்ச் 28 புதன் கிழமை என பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.
நூல்:கல்வெட்டுகளும் சைவத்திருமுறைகளும். தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment