Wednesday, September 22, 2021
சோமலா தேவி பள்ளிப்படை
போசள மன்னன் வீரசோமேஸ்வரன் 5 ஆம் ஆட்சி ஆண்டில் சோமலா தேவிக்கு இராஜராஜ வளநாடு பாச்சில் கூற்றத்து புரோசைக் குடியில் எடுக்கப்பட்ட பள்ளிப்படை. சோமலீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.இவர் வீரநரசிம்மன் மகளும் மூன்றாம் இராஜராஜ சோழன் மனைவி என்றும் கருதுகின்றனர்.இரண்டாம் வல்லாளன் மகள் அவ்வை சோமலாதேவி என்பவர் திருவானைக்கா கோயில் உள்ளே சங்கமேஸ்வரர் கோயிலுக்கு நிலம் அளித்துள்ளார்.இவர் வீர நரசிம்மன் தங்கையும் வீரசோமேஸ்வரன் அத்தையும் ஆவர்.வீரசோமேஸ்வரன் திருவானைக்கா கோயிலில் தன் முன்னோர்கள் நினைவாக பாட்டன் இரண்டாம் வல்லாளன் நினைவாக வல்லாளீஸ்வரம்,பாட்டி பத்மாவதி நினைவாக பத்மாவதீஸ்வரம் தன் தந்தை வீரநரசிம்மன் நினைவாக நரசிம்மேஸ்வரம் லிங்க கோயில்கள் எடுத்தது போல கோயிலின் உள்ளே சோமலாதேவி நினைவாக சோமலீஸ்வரம் கோயிலை எடுத்துள்ளான்.இவற்றின் திருப்ணிக்கு வீரசோமேஸ்வரன் மனைவி சோமலா தேவி பொற்காசுகள் அளித்துள்ளார். இக்கோயில்கள் இந்நாளில் வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. வீரசோமேஸ்வரன் மனைவியும் சோமலாதேவி என அழைக்கப்படுகிறார்.இவர் வீரசோமேஸ்வரன் ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்துள்ளார். திருவானைக்கா கோயில்,ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நிலம் அளித்துள்ளார்.மேலே குறிப்பிட்ட பள்ளிப்படை அவ்வை சோமலாதேவி பள்ளிப்படை கோயிலாக இருக்க வேண்டும்.புரசக்குடி என்னும் ஊர்கள் இரண்டு உள்ளன அவை தஞ்சை அய்யம்பேட்டை புரசக்குடி, புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் நாட்டாணி புரசக்குடி இந்த பள்ளிப்படை அங்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை ஏனெனில் பாச்சில் கூற்றத்து புரோசைக்குடி பாச்சில் என்ற திருவாசி கோயிலை சுற்றியுள்ள ஓர் ஊராகவே இருக்க வேண்டும்.அது இந்நாளில் வேறு பெயருடன் இருத்தல் வேண்டும்.இந்த பள்ளிப்படை கோயிலும் வேறு பெயருடனோ அல்லது சிதைந்த கோயிலாகவே இருக்க வேண்டும்.இவை முற்றிலும் அழிந்து இருக்க முடியாது. நூல்.ஹொய்சள மன்னர்களும் திருவானைகாவும். திருஞானசம்பந்தன்(பண்டாரத்தார் மகன்) விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment