Friday, July 9, 2021
தில்லை திருக்கைக் கோட்டி மண்டபம்
தில்லைப் பெருங்கோயிலில் மணவிற் கூத்த காலிங்கராயன் பல திருப்பணிகள் செய்து தேவாரத் திருமுறைகளை செப்பேட்டில் எழுதி சிற்றம்பலத்தில் வைத்து அவற்றை தினமும் ஓத நடராஜர் சன்னதியின் முன்பு மண்டபம் கட்டி அதில் தேவார மூவரை எழுந்தருளவித்தான்.தேவார திருமுறை மண்டபங்கள் திருக்கை கோட்டி என அழைக்கப்பட்டது.பின்பு அந்த மண்டபம் தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சி செய்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கி.பி.1579-இல் பழைய இடத்திலிருந்து பெருமாளை எடுத்து நடராஜர் சன்னதி சபை வாசலிலேயே பெருமாளுக்கு தனி சன்னதி அமைத்தான். அம்மண்டபம் பெருமாள் கோவிலின் முகமண்டபம் ஆகிவிட்டது.பின்பு அந்த மண்டபம் செட்டியார்களால் புதுப்பிக்கப்பட்டது . தேவார மூவரின் சிலைகள் தற்போது நவகிரகத்தின் அருகில் உள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment