Thursday, April 15, 2021

திருவிடைமருதூர் கோயில் நந்தவனங்கள்

கோராஜகேசரி இரண்டாம் பராந்தகனாகிய சோழனாகிய சுந்தர சோழன் 9ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு சிவபிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு மல்லிகை நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை கூறுகின்றது.மேலும் இம்மன்னன் 11ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருவெண்காட்டு பிச்சன் என்பவன் இக்கோயிலுக்கு ஒரு செண்பக நந்தவனம் ஒன்றை அமைத்துள்ளதை கூறுகின்றது.செம்பியன் மாதேவியும் இக்கோயிலுக்கு காவிரியின் தென்கரையில் ஒரு நந்தவனம் அமைத்துள்ளார். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, April 10, 2021

இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும்

எட்டு திக்கும் புகழ் பரப்பிய தந்தை இராஜராஜ சோழனும் மகன் இராஜேந்திர சோழனும்.

Tuesday, April 6, 2021

தேரை தீர்த்தம்

தஞ்சை பெரிய கோயிலில் ஒரு குளம் அளவுக்கு ஒரு தீர்த்தம் இருந்தது. இராஜராஜ சோழன் செய்த நந்தி சிலையில் ஒரு தேரை ஒன்று இருந்ததாம் அதை எடுத்து அந்த குளத்தில் விடப்பட்டதாம் அதனால் அது தேரை தீர்த்தம் என அழைக்கப்பட்டது. சரபோஜி மன்னர் காலத்தில் அந்த குளம் மூடப்பட்டு நடராஜர் மண்டபத்திற்கு அடுத்து அது ஒரு கிணற்றளவு காணப்படுவதாக கூறுகின்றனர்.இரா.விக்ரமன்,சிதம்பரம்

Friday, April 2, 2021

வீரமாதேவியார் வைத்த நுந்தா விளக்கு

இராஜேந்திர சோழன் மனைவி வீரமாதேவியார் தீர்த்தமலை அருகே கூடலூர் பெருமாள் கோயிலில் கூடல் ஆழ்வார்க்கு ஒரு நுந்தா விளக்கு அளித்துள்ளார்.இவர் இராஜேந்திர சோழன் இறந்தவுடன் உடன்கட்டையேறி ஊயிர் நீத்தவர் ஆவார். 'ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மர்ற்கு யாண்டு நான்காவது மும்முடிசோழப் பெருமான் தேவியார் பூங்குன்றமுடைய ஐய்யன் வீரமாதேவியார் இவ்வாட்டை கூடல் ஆழ்வார்க்கு வைத்த நுந்தா விளக்கு ஒன்றிக்கு' என கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...