Monday, December 23, 2019

பழையாறை வடதளி

கி.பி.7 ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் பழையாறை வடதளியை வணங்கச் சென்றபோது அங்கிருந்த சிவலிங்கத்தை சமணர்கள் மறைத்து விட்டனர் இதனால் திருநாவுக்கரசர் வருத்தினார். மகேந்திரவர்ம பல்லவனின் கீழ் இப்பழையார் நகரை அரசாண்ட குறுநில சோழ மன்னன் ஒருவன் திருநாவுக்கரசரின் இந்நிகழ்வை அறிந்து வடதளிப் பெருமானுக்கு சிறந்த விமானம் ஒன்று எடுப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்து திருநாவுக்கரசர் துன்பத்தை போக்கி வடதளிப் பெருமானை வழிபடச் செய்தான்.
இறைவன்:தர்மபுரீஸ்வரர்.
இறைவி:விமலநாயகி.
நூல்.பழையாறை நகர்,சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, December 21, 2019

செம்பியன் மாதேவி கட்டிய திருவேள்விக்குடி திருக்கோயில்

இத்திருக்கோவில் பராந்தகசோழன் காலத்தில் எடுக்கப்பட்டு செம்பியன் மாதேவி காலத்தில் முற்றிலும் புதுப்ப்பிக்கப்பட்டது.சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு இங்கு யாகம் நடைப்பெற்றதால் திருவேள்விகுடி என அழைக்கப்பட்டது. இறைவன் கல்யாண்சுந்தரேசுர் என அழைக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர்,சுந்தரரால் பாடல் பெற்ற தலம்.கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது. கல்வெட்டுகளில் இறைவன் திருப்பெயர் திருவேள்விக்குடி உடையார், மணவாள நம்பி என்னும் பெயர்கள் கூறுப்படுகிறது.
அம்மன் திருப்பெயர்: திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார், நாறு சாந்து இளமுலை நாச்சியார் என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டது. நாறு சாந்து இளமுலை அரிவையர் என்றும் திருஞானசம்பந்தர் பாடலில்  கூறப்படுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



Thursday, December 12, 2019

திருவெண்காடு அர்த்தநாரிஸ்வரர்

முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி 1047 ஆம் ஆண்டு அர்த்தநாரிசுரர் திருமேனியை எழுந்தளுவித்தனர். "ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29வது நாள் 151இல் கங்கைகொண்ட சோழபுரத்து நம்வீட்டினுள்ளால் கங்கைக்கொண்ட சோழன் மாளிகையில் எழுந்தளுளி இருந்து ராஜேந்திர சிங்கவளநாட்டு நாங்கூர் நாட்டு திருவெண்காடு உடையார் கோயிலில் உத்தம சோழி எழுந்தருளவித்த அர்த்தநாரி தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு தேவதானமாக வரியிலியாகக் குடுத்தது" என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, December 5, 2019

செம்பியன் மாதேவி சிலை

முதல் சிலை செம்பியன் மாதேவி திருநல்லம் கோனேரிராஜபுரம் இரண்டாவது சிலை பார்வதி கி.பி.10 ஆம் நூற்றாண்டு தற்போது வாஷிங்டன் மியூசியத்தில் உள்ளது. முதலில் உள்ள சிலை செம்பியன் மாதேவி அவர் காலத்திற்கு பின்பு எடுக்கப்பட்ட சிலையாகும்.இரண்டாம் சிலை உருவம் பார்வதியே இந்த சிலை செம்பியன் மாதேவி காலத்தில் எடுக்கப்பட்ட சிலையாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...