இராஜராஜ சோழன் படைத்தலைவரில் ஒருவனான கிருஷ்ணன் இராமன் மும்முடி சோழ பிரம்மாராயன் மகன் மாராயன் அருண்மொழியான உத்தம சோழப் பிரம்மாராயன் இவன் இராஜேந்திர சோழனின் அரசியல் அதிகாரிகளில் ஒருவன் இவன் இராஜேந்திர சோழனின் ஆணையின் படி கி.பி.1033 ஆம் ஆண்டு கங்கபாடியில் குவலாளபுரத்தில் ஒரு பிடாரி கோயிலை எடுப்பித்தான் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.கங்கபாடி என்பது மைசூரின் ஒரு பகுதியாகும் குவலாளபுரம் என்பது தற்போது கோலார் எனும் ஊராகும் அங்கு உள்ள கோலரம்மா கோயில் தான் பிடாரி கோயிலாகும்.மாராயன் அருண்மொழி் உத்தம சோழ பிரம்மராயன் பிடாரி கோயிலை எடுப்பித்து விளக்கெரிக்க பல கார் எருமைகளை கொடுத்துள்ளான்.அருண்மொழி என்பது இவன் இயற்பெயர். உத்தமசோழ மாராயன் என்பது இவனது அரசாங்க ஊழியத்தை பாராட்டி அரசன் வழங்கிய பட்டமாகும். இவன் மனைவி 'உத்தம சோழ பிரமமாராயர் மாரசியார் தெசப்பன் செம்பியன் மாதேவி' என அழைக்கப்படுகிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...



No comments:
Post a Comment