சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள் அங்கு தங்கி இருந்த போது தென் சீனாவின் முக்கிய துறைமுகமான குவாங் ஹீவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர் சம்பந்தப் பெருமாள் தவச் சக்கரவத்திகள் அப்போது அங்கு ஆட்சி செய்த மன்னர் குப்லாய்கான் அனுமதி பெற்று கி.பி.1281 ஆம் ஆண்டு திருக்கணீசுவரமுடைய நாயனார் கோயிலை கட்டினார்.சகயுகத்தில் சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.இவை அக்கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டில் உள்ளது.அக்கல்வெட்டின் இறுதியில் சீன எழுத்தும் பொறிக்கப்பட்ட பட்டுள்ளது.இரண்டாயிரம் வருடங்களாக தமிழ்நாட்டில் இருந்து வணிகர்கள் சீனாவில் வணிகம் செய்து வருகிறார்கள்.அங்கிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வணிகம் செய்தனர். பூம்புகார், கொற்கை, கடல்மல்லை,பொதுகே போன்ற துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன.கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆகழாய்வில் சீனப் பீங்கான் பாண்டங்கள் பல கிடைத்துள்ளன.அவை குங்பாய் மற்றும் வெள்ளை நிற பீங்கான் ஆகும். இவை 11மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். தாராசுரத்திலும் இதே காலக்கட்டத்தை சார்ந்த ஜிந்தாசென்,செலடான், லோங்குவான், யுயே, பீங்கான் பாண்டங்கள் கிடைத்துள்ளன.12,13 ஆம் நூற்றாண்டில் சீன சுங் அரசர்கள் வெளியிட்ட காசுகள் தஞ்சை மாவட்டம் ஓலயகுன்னம்,தல்லிக்கோட்டை போன்ற ஊர்களில் கிடைத்துள்ளன. இவையனைத்தும் சோழநாடு சீனாவுடன் இருந்த வணிக தொடர்பை உறுதி செய்கிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment