Sunday, June 23, 2019

கண்ணகியின் சிலம்பு.

தட்டான் ராணியின் சிலம்பை திருடி கோவலன் கொண்டு வந்த சிலம்பை அரசனிடம் கொடுத்து கோவலனை கொல்ல வைத்தான்.பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் கண்ணகி  கோவலனிடம் இருந்து கைப்பற்றிய தன்னுடைய சிலம்பை வாங்கி உடைத்து தன் கணவன் கள்வன் இல்லை என மெய்பித்தாள். மதுரை ஆயர்ச்சேரியிருந்து கண்ணகி கையில் ஏந்தி வந்த  மற்றொரு சிலம்பு எங்கே என வினா எழுகிறது.அதற்கு அரும்பதவுரையாசிரியர் இராசா துஞ்சிய(இறந்த)பின்பு கண்ணகி தன் கைச்சிலம்பை கோப்பெருந்தேவி முன்னே எறிந்தாள்.எனக்கூறுகிறார்.
இதனை
 'செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி' என்னும் சிலப்பதிகார வரிகள் மெய்ப்பிக்கின்றன.எனவே கண்ணகி தன் இரண்டு சிலம்பையும் பாண்டியன் சபையில் உடைத்து எறிந்து விட்டாள்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...