திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் ஆச்சாள்புரம் எனும் நல்லூர் பெருமணத்தில் 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என பதிகம் பாடி தன் தாய் தந்தை சுற்றதாருடனும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர்,முருக நாயனார் ஆகிய நாயன்மாருடன் சிவஜோதியில் கலந்து முக்தி அடைந்தார். இங்குள்ள சிவலிங்கத்திலிருந்து ஒரு தீ பிழம்பு தோன்றியது அதில் ஒரு வாயில் தோன்றியது மக்கள் சிலர் அந்த நெருப்பு சுடும் என பயந்து ஓடினர் நந்தி அவர்களை தடுத்து அது குளிர்ந்த நெருப்பு சுடாது என வாருங்கள் என அழைத்தார். அனைவரும் அதில் கலந்து கைலாயம் சென்றனர். இங்குள்ள அம்மன் நெருப்பிலிருந்து வந்த அனைவருக்கும் திருநீறு பிரசாதமாக வழங்கினார்.அம்மன் திருவெண்ணீற்றுமை என அழைக்கப்படுகிறார்.இங்கு அம்மன் சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கபடுகிறது.குங்குமம் தருவதில்லை.இறைவன் சிவலோகத்தியாகர் என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலில் விக்கிரம சோழன்,இரண்டாம் இராஜராஜன்,இரண்டாம் இராஜதிராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன்,மாறவர்மன் பராக்ரமபாண்டியன்,முதல் சடையவர்ம சுந்தரபாண்டியன்,ஏகோஜி மகராஜா ஆகியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரா.விக்ரமன், சிதம்பரம்.
Tuesday, May 21, 2019
Subscribe to:
Post Comments (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...
No comments:
Post a Comment