திருநாவுக்கரசர் அவதார திருக்கோயிலில் உள்ள களரி வாகை மரத்தை ஒட்டிய வீட்டில் தான் திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்தனர்.மருத்துவ தன்மை கொண்ட இந்த மரம் அவர்கள் காலத்தில் இருந்து இன்னும் இங்கு உள்ளது.அவர்கள் வீடு தான் கோயிலாக உள்ளது.இக்கோயில் அருகே பசுபதிநாதர் எனும் பழமையான சிவன் கோயிளும் உள்ளது.கி.பி. 6ஆம் நூற்றாண்டில் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரில் புகழனார் மதினியார்ற்கு பிள்ளைகளாக திலகவதியாரும், மருள்நீக்கியாரும் பிறந்தனர்.இருவரும் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தனர். திலகவதியார்ற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனும் இறக்கவே அவரையே கணவராக எண்ணி திலகவதியார் உயிர் விட துணிய திருநாவுக்கரசர் சிறுவனாக இருந்ததால் அவரை வளர்க்கும் பொறுப்பு அவரிடம் இருந்ததால் அவ்வெண்ணத்தை கைவிட்டு அவரை வளர்த்து ஆளாக்கி பின்பு திருவதிகையில் சிவத்தொண்டு புரிந்து இறைவனிடம் வேண்டி திருநாவுக்கரசரை சமண சமையத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.பின்பு பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சமண மதத்தில் இருந்து கொண்டு திருநாவுக்கரற்கு பல தொல்லைகள் கொடுத்தான் அவற்றையெல்லாம் இறைவன் அருளால் வென்றார்.பின்பு மகேந்திர வர்ம பல்லவனும் சைவனான். திருநாவுக்கரசர் பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி திருஞானசம்பந்தருடன் தோழமை கொண்டு அவரால் அப்பரே என அழைக்கப்பட்டார். பின்பு இருவரும் சேர்த்து பல தலங்களைப் பாடினர். இறுதியாக தனது 81ஆம் வயதில் திருநாவுக்கரசர் திருப்புகலூரில் உழவார பணி செய்து சிவஜோதியில் கலந்தார்.இவற்றை திருநாவுக்கரசர் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment