இராஜராஜ சோழன் 29ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.1014-இல் திருவியலூர்க் கோயிலில் துலாபார தானம் செய்தான்.அவனது மனைவி தந்திசக்தி விடங்கியான ஒலோகமாதேவி இரணிய கருப்பம் புகுந்துள்ளாள். இக்கோயிலில் ஒலோகமா தேவியார் இரணிய கருப்பம் புகுந்ததற்குரிய பொன்னின் ஒருபகுதியைக் கொண்டு திருவலஞ்சுழியில் க்ஷேத்திரபால தேவர்க்கு இரண்டு பொன்மலர்கள் செய்து அளித்தார்.மேலும் இப்பொன்னிலிருந்து பட்டீஸ்வரம் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.இந்த திருவியலூர்க் கோயிலில் இராஜராஜ சோழன் அவன் பட்டத்தரசி ஒலோகமா தேவியார் லிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது.
இந்த கோயில் 1932 ஆம் குடமுழுக்கின் போது புதுப்பிக்கப்பட்டு இராஜராஜ சோழனும் ஒலோகம தேவியும் சிவலிங்கத்தை வணங்கும் சிற்பத்தின் மேல் அவர்கள் துலாபாரமும்,இரண்ய கருப்பு தானம் செய்த கல்வெட்டு இருந்தது கோயிலை புதுப்பிக்கும் போது அவை மறைந்து விட்டது. அரசன்,அரசி சிற்பம் மட்டும் பழுது பார்க்க பட்டது.இவை புடைப்பு சிற்பமாக இருந்தாலும் பழுது பார்த்தாலும் இராஜராஜ சோழன் ஒலோகம தேவி இறுதி காலத்தில் எவ்வாறு இருந்தார்கள் என்று நாம் கண்டு மகிழலாம்.
துலாபார தானம்:
துலாபாரதானம் என்பது அரசனும் செல்வரும் இம்மை மறுமை நலன் கருதி வேதியர்க்கு சடங்கின் வழி செய்ய கூடிய பெருந்தானமாகும் இது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தானமாகும். இதற்கு 'துலாபுருஷதானம்' என்று பெயர்.அரசன் புதிதாக மண்டபம் ஒன்று கட்டி அதில் துலாக் கோல் வைத்து அதை அலங்கரித்து வேதியர்கள் கொண்டும், வேள்வியாசியர்கள் யாகம் வளர்த்து கிரியை செய்து துலாக்கோலை வழிபட்டு அரசன் ஒரு தட்டில் அமர்ந்து கொள்வான் அவன் எடைக்கு சமமாக மற்றொரு தட்டில் பொன்னை நிறுப்புவார்கள்.பின்னர் அப்பொன்னில் பாதியை வேள்வியாசியர்ற்கும் மீதியை திருக்கோயிலுக்கும் பிராமணர்களுக்கும் தானமாக கொடுப்பான்.இவ்வாறு செய்தவன் மிக்க புகழுடன் ஆயுளையும் பெற்று, திருமாலின் பதம் புகுவான் என்பது வேதியரின் அருமறை வழக்கமாகும்.
இரண்ய கருப்பம்:
இரண்ய கருப்பம் என்பது பொன்னால் ஆன உருவில் உள்ளிலிருந்து தானம் செய்வது .பொன்னால் ஓர் ஆள் நிற்கும் அளவில் 72 அங்குல உயரம் தாமரை மொட்டு போன்ற வடிவில் கும்பம் அமைத்து, அதைத் தான விதிப்படி வேள்வியாசிரியரும் வேதியருயம் வேள்வி முதலியன செய்யும் வழியே கிரியை நிகழ்த்த, தானம் செய்பவர் அதனுள் இருந்து வெளியே வர வேண்டும்.பின்னர் வேள்வியாசியர்ற்கும் பிராமணர்களுக்கும் அப்பொற் கும்பத்துடன் பிர்மதேய இறையிலியாக நிலங்களையும் பொற்காசுகளையும் தானம் செய்ய வேண்டும்.இவை இரண்ய கருப்ப தானமாகும்.
வேறொரு முறை:இரணிய கருப்ப தானம்.
தானம் செய்பவர் பொன்னால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றினுள் இருந்து வேள்வி ஆசிரியர் கிரியை நிகழ்த்திய பின்னர் அப்பசுவிலிருந்து வெளியே வந்து அப்பொற் பசுவுடன் பொன்னும் பிர்மதேயங்களும் பிராமணர்களுக்கு தானம் செய்தல் வேண்டும்.இவை வேதியரின் அருமறை வழக்கமாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:
Post a Comment