Saturday, March 23, 2019

பட்டீஸ்வரம் துர்கை அம்மன்.

கும்பகோணம் அருகே பழையார் சோழர் அரண்மனையில் எட்டாவது வாயிலில் இருந்த துர்கை அம்மன்.தற்போது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்சுவரர் கோயிலில் காட்சி தருகிறாள்.

Wednesday, March 13, 2019

திருவியலூர் கோயிலில் இராஜராஜ சோழன் செய்த துலாபாரம்.

இராஜராஜ சோழன் 29ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.1014-இல் திருவியலூர்க் கோயிலில் துலாபார தானம் செய்தான்.அவனது மனைவி தந்திசக்தி விடங்கியான ஒலோகமாதேவி இரணிய கருப்பம் புகுந்துள்ளாள். இக்கோயிலில் ஒலோகமா தேவியார் இரணிய கருப்பம் புகுந்ததற்குரிய பொன்னின் ஒருபகுதியைக் கொண்டு திருவலஞ்சுழியில் க்ஷேத்திரபால தேவர்க்கு இரண்டு பொன்மலர்கள் செய்து அளித்தார்.மேலும் இப்பொன்னிலிருந்து பட்டீஸ்வரம் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது எனவும்  கூறுகின்றனர்.இந்த திருவியலூர்க் கோயிலில் இராஜராஜ சோழன் அவன் பட்டத்தரசி ஒலோகமா தேவியார் லிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது.
இந்த கோயில் 1932 ஆம் குடமுழுக்கின் போது புதுப்பிக்கப்பட்டு இராஜராஜ சோழனும் ஒலோகம தேவியும் சிவலிங்கத்தை வணங்கும் சிற்பத்தின் மேல் அவர்கள் துலாபாரமும்,இரண்ய கருப்பு தானம் செய்த கல்வெட்டு இருந்தது கோயிலை புதுப்பிக்கும் போது அவை மறைந்து விட்டது. அரசன்,அரசி சிற்பம் மட்டும் பழுது பார்க்க பட்டது.இவை புடைப்பு சிற்பமாக இருந்தாலும் பழுது பார்த்தாலும் இராஜராஜ சோழன் ஒலோகம தேவி இறுதி காலத்தில் எவ்வாறு இருந்தார்கள் என்று நாம் கண்டு மகிழலாம்.
துலாபார தானம்:
 துலாபாரதானம் என்பது அரசனும் செல்வரும் இம்மை மறுமை நலன் கருதி வேதியர்க்கு சடங்கின் வழி செய்ய கூடிய பெருந்தானமாகும் இது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தானமாகும். இதற்கு 'துலாபுருஷதானம்' என்று பெயர்.அரசன் புதிதாக மண்டபம் ஒன்று கட்டி அதில் துலாக் கோல் வைத்து அதை அலங்கரித்து வேதியர்கள் கொண்டும், வேள்வியாசியர்கள் யாகம்  வளர்த்து கிரியை செய்து துலாக்கோலை வழிபட்டு அரசன் ஒரு தட்டில் அமர்ந்து கொள்வான்  அவன் எடைக்கு சமமாக மற்றொரு தட்டில்  பொன்னை நிறுப்புவார்கள்.பின்னர் அப்பொன்னில் பாதியை வேள்வியாசியர்ற்கும் மீதியை திருக்கோயிலுக்கும் பிராமணர்களுக்கும் தானமாக கொடுப்பான்.இவ்வாறு செய்தவன் மிக்க புகழுடன் ஆயுளையும் பெற்று, திருமாலின் பதம் புகுவான் என்பது வேதியரின் அருமறை வழக்கமாகும்.

இரண்ய கருப்பம்:
 இரண்ய கருப்பம் என்பது பொன்னால் ஆன உருவில் உள்ளிலிருந்து தானம் செய்வது .பொன்னால் ஓர் ஆள் நிற்கும் அளவில் 72 அங்குல உயரம்  தாமரை மொட்டு போன்ற வடிவில் கும்பம் அமைத்து, அதைத் தான விதிப்படி வேள்வியாசிரியரும்                வேதியருயம் வேள்வி முதலியன செய்யும் வழியே கிரியை நிகழ்த்த, தானம் செய்பவர் அதனுள் இருந்து வெளியே வர வேண்டும்.பின்னர் வேள்வியாசியர்ற்கும் பிராமணர்களுக்கும் அப்பொற் கும்பத்துடன் பிர்மதேய இறையிலியாக நிலங்களையும் பொற்காசுகளையும் தானம் செய்ய வேண்டும்.இவை இரண்ய கருப்ப தானமாகும்.
வேறொரு முறை:இரணிய கருப்ப தானம்.
 தானம் செய்பவர் பொன்னால் செய்யப்பட்ட பசுவின் வயிற்றினுள் இருந்து வேள்வி ஆசிரியர் கிரியை நிகழ்த்திய பின்னர் அப்பசுவிலிருந்து வெளியே வந்து அப்பொற் பசுவுடன் பொன்னும் பிர்மதேயங்களும் பிராமணர்களுக்கு தானம் செய்தல் வேண்டும்.இவை வேதியரின் அருமறை வழக்கமாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



Monday, March 4, 2019

திருநாவுக்கரசர் அவதார இல்லம் (திருக்கோயில்)..

திருநாவுக்கரசர் அவதார திருக்கோயிலில் உள்ள களரி வாகை மரத்தை ஒட்டிய வீட்டில் தான் திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்தனர்.மருத்துவ தன்மை கொண்ட இந்த மரம் அவர்கள் காலத்தில் இருந்து இன்னும் இங்கு உள்ளது.அவர்கள் வீடு தான் கோயிலாக உள்ளது.இக்கோயில் அருகே பசுபதிநாதர் எனும் பழமையான சிவன் கோயிளும் உள்ளது.கி.பி. 6ஆம் நூற்றாண்டில் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரில் புகழனார் மதினியார்ற்கு பிள்ளைகளாக திலகவதியாரும், மருள்நீக்கியாரும் பிறந்தனர்.இருவரும் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தனர். திலகவதியார்ற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனும் இறக்கவே அவரையே கணவராக எண்ணி திலகவதியார் உயிர் விட துணிய திருநாவுக்கரசர் சிறுவனாக இருந்ததால் அவரை வளர்க்கும் பொறுப்பு அவரிடம் இருந்ததால் அவ்வெண்ணத்தை கைவிட்டு அவரை வளர்த்து ஆளாக்கி பின்பு திருவதிகையில் சிவத்தொண்டு புரிந்து இறைவனிடம் வேண்டி திருநாவுக்கரசரை சமண சமையத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.பின்பு பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சமண மதத்தில் இருந்து கொண்டு திருநாவுக்கரற்கு பல தொல்லைகள் கொடுத்தான் அவற்றையெல்லாம் இறைவன் அருளால் வென்றார்.பின்பு மகேந்திர வர்ம பல்லவனும் சைவனான். திருநாவுக்கரசர் பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி திருஞானசம்பந்தருடன் தோழமை கொண்டு அவரால் அப்பரே என அழைக்கப்பட்டார். பின்பு இருவரும் சேர்த்து பல தலங்களைப் பாடினர். இறுதியாக தனது 81ஆம் வயதில் திருநாவுக்கரசர் திருப்புகலூரில் உழவார பணி செய்து சிவஜோதியில் கலந்தார்.இவற்றை திருநாவுக்கரசர் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.





சுந்தரர் அவதார இல்லம் (திருக்கோயில்)..

சுந்தரர் பிறந்த வீடு திருநாவலூர் கோயிலை ஒட்டி வடக்கு பக்கத்தில் அமைந்திருந்தன.கோயிலில் பூஜை செய்யும் ஆதி சைவ அந்தணர் குடும்பம் என்பதால் கோயில் அருகில் வீடு அமைந்திருந்தது. பிறகு அந்த இடத்தில் சுந்தரர் மடம் அமைந்திருந்தன பின்பு அவையும் இடிக்கப்பட்டு தற்போது சிவனடியார்களால் சுந்தரருக்கு புதிய கருங்கல் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இதற்கு முன்பாகவே திருநாவலுர் கோயிலின் உள்ளே சுந்தரருக்கு பழமையான தனி சன்னதி உள்ளது.கைலாயத்தில் இறைவனுக்கு பூசை செய்யும்  சிவனடியார்களில் ஒருவராக இருந்த ஆலால சுந்தரர் ஒரு நாள் நந்தவனத்தில் பூஜைக்கு பூக்களை பறித்துக்கொண்டு இருக்கும் போது அங்கு பார்வதிக்கு தொண்டு செய்யும் பெண் அடியார்களான அநிந்திதை,கமலினி மேல் காதல்  கொள்ள அவர்களும் சுந்தரர் மீது காதல் கொண்டனர்.இதை அறிந்த  இறைவன் சுந்தரரை நீ பூலோகத்தில் மானிடராய் பிறந்து அம்மகளிரை மணந்து இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் இங்கு வருவாயாக என்றார்.இதை கேட்டு சுந்தரர் மனம் கலங்கி நான் மானிடராய் பிறந்து மயங்கும் போது என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் என வேண்டினார் இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என்றார். பூலோகத்தில் சுந்தரர் நம்பியாரூராகவும்,அநிந்திதை சங்கிலியாராகவும், கமலினி பரவையாராகவும் பிறந்தனர். திருமுனைப்பாடி நாட்டில் சடையானர்க்கும் இசைஞானியார்க்கும் மகனாய் பிறந்தார் நம்பியாரூரார். நரசிங்கமுனைராயர் எனும் சிற்றரரசரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார்.பின்பு திருமணம் நடைபெறும்போது இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு பித்தா பிறைசூடி பெருமானே எனும் முதல் தேவாரப் பதிகம் பாடினார்.பிறகு பல தலங்களை பாடி இறைவன் சுந்தரரிடம் பல திருவிளையாடல் நிகழ்தினார். பரவையார்,சங்கிலியாரை மணந்து பரவையாரிடம் இறைவனையே தூதாக அனுப்பியவர் சுந்தரர்.பிறகு சேரமான் பெருமானுடன் நட்பு கொண்டு மதுரை சென்று பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் அவன் மருமகன் சோழன் ஒருவன் மற்றும் சேரமான் பெருமான் முன்னிலையில் சொக்கநாதர் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சென்று தேவார பதிகம் பாடினார். சேரமான் பெருமானுடன் திருவஞ்சைகளம் சென்று இப்பிறப்பு போதும் என்னை கைலாயத்திற்கு அழைத்து கொள்க என இறைவனை வேண்டி பதிகம் பாடினார். இறைவன் தேவர்களை அனுப்பி சுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வர கட்டளையிட்டார்.வெள்ளை யானையில் சுந்தரர் போகும் போது சேரமான் பெருமானை நினைத்தார்
அவரும் அங்கு வந்து அந்த காட்சியை கண்டு சேரமான் பெருமான் தன் குதிரையின் காதில் பஞ்சாசர மந்திரம்  ஓத அது வெள்ளை யானையை முந்திக்கொண்டு கைலாயத்திற்கு சென்றது.அங்கு பல வாயில்களை கடந்து திருகண்வாயிலை அடைந்தனர்.அங்கு சேரமான் பெருமானை நந்திதேவர் தடுத்தார். சுந்தரர் உள்ளே சென்று சிவபெருமான் பார்வதியை வணங்கி சேரமான் பெருமான் வருகையை தெரிவித்தார். இறைவனும் நந்தியை விடுவிக்குமாறு கூறினார்.பின்பு சேரமான் பெருமான் இறைவன் மீது திருக்கைலாய ஞானவுலா பாடி சிவகணங்களின் தலைவர் ஆனார்.சுந்தரரும் முன்பு செய்த சிவதொண்டு பணியை தொடர்ந்தார்.சிவபெருமான் அருளால் பரவையாரும்,சங்கிலியாரும் முன்பு பார்வதிக்கு செய்த சேவையை தொடர்ந்தனர்.இதை சுந்தரர் வரலாற்றில் விரிவாக காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...