Saturday, December 29, 2018

சிதம்பரம் புலிமடு சுடலையமர்தார் மத்யந்தனேசுவரர் கோயில்

சிதம்பரம் புலிமடு சுடலையமர்தார்





மத்யந்தனேசுவரர் கோயில்:   இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவரான கூத்தர் காலிங்கராயர் ஆவர்.இங்கு புலிக்கால் (வியாக்கிரபாதர்)முனிவரின் தந்தை மத்யந்த முனிவர் வழிப்பட்ட லிங்கமாகும்.தில்லையின் எல்லையில் அமைந்த மயானத்தின் அருகேயுள்ள இக்கோயில் சுடலையமாந்தர் கோயில் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புலிமடு குளம் நடராஜர் கோயிலுக்குறிய 10 தீர்த்தங்களில் ஒன்றாகும். இறந்தவர்கள் மோட்சம் பெற இந்த தீர்த்ததில் அஸ்தியை கரைப்பார்கள் இங்கு இடப்படும் எலும்புகள் குளத்தில் கரைந்து விடுகின்றன.காசிக்கு இணையான தலமாகும்.தற்போது கல்வெட்டுகள் முழுவதும் சிதைந்துள்ளன. கோயிலிலிருந்து பல கற்கள் அகற்றப்பட்டு விட்டன.நடராஜர் கோயில் கல்வெட்டில்
"தொல்லோர்வாழ் தில்லைச் சுடலை  
  யமர்ந் தார்கோயிற் கல்லா லெடுத்தமைத்தான் காசினியிற்         றொல்லை மறைவளர்க்க வெங்கலியை மாற்றிவழு வாமல்  அறம் வளர்க்கக் காலிங்கன் ஆய்ந்து" எனும் வெண்பாவின் மூலம் காலிங்கராயன் இக்கோயில் கட்டியதை அறியலாம். இறைவன்:மத்யந்தனீஸ்வரர்  இறைவி:மங்களநாயகி

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...