Saturday, December 15, 2018

சிதம்பரம் நடராஜர் கோயில் சபையும் சாலாகார விமானமும்.



இக்கோயில் ஆதி காலத்தில் மரத்தினால் அமைந்திருந்தன. சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிங்களாக இருந்தன.கனக சபை பொற்றகடு வேயப்பட்டிருந்தன. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை முற்காலத்தில் மரக்கட்டிமாக இருந்து பின்பு அதே அமைப்பை மாற்றாமல் கருங்கல் கட்டிடமாக அமைத்தனர். இக்கட்டிடங்கள் பௌத்த விகாரையின் அமைப்பை போன்று 'சாலாகார'  விமான முள்ளனவாக இருக்கின்றன இந்த அமைப்பு பௌத்தச் சார்பானது. இதே அமைப்பைக் கொண்டதது தான் மாமல்லபுரத்தில் உள்ள 'பீம ரதம்' என்னும் சாலாகார விமானக் கட்டிடமாகும்.சிதம்பரம் கோயில் பௌத்த சார்புடையது என்பதை முதலாம் வரகுணப் பாண்டியன் காலத்தில் வாழ்ந்த மாணிக்க வாசகர் வரலாற்றில் அவர் சிதம்பரத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து வென்றார் என்றும் தோல்வியுற்ற பௌத்த பிக்குகள் சிதம்பரத்தை விட்டு இலங்கைக்கு போய்விட்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.சிதம்பரத்தில் அக்காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர்களின் பௌத்த விகாரைகள் இருந்தன என்றும் தெரிகிறது. பௌத்தருடைய கட்டிடக்கலை அமைப்பு  இக்கோயிலிலும் ஏற்பட்டிருகிறது.சிதம்பரத்தில் ஜைனர்களும் இருந்துள்ளனர்.ஜைனர் தெருவும் இருந்துள்ளது.ஆனால் பௌத்தர்கள் ஆதிக்கம் தான் அப்போது அதிகமாக இருந்துள்ளது. என நா.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...